Articles for June 2013

Summer Get-Together 2013: Sports Day Itinerary

IMV OSA Canada Logo
The preparations are complete. Let’s enjoy this year’s summer get-together! See you there!
Progress at 100%

This year, we will be doing something a little different to encourage competition and increase motivation. Regardless of age, each child will be assigned one of two groups. Each of these two groups will get different coloured headbands to distinguish them. Throughout the day, there will be various events that members of the same team will participate in to gain points for their colour. At the end of the day, we’ll tally up the points to determine the winning team. For example, for the 5-10 soccer game, one team will be a part of the red team, while another team will be a part of the blue team. The winning team will score a set number of points for their colour. The points awarded will vary for each event. Score will be kept on a global scoreboard near the edge of the soccer field. Make sure you cheer on your colour, regardless of what age they are!

கோடை கால ஒன்று கூடல்-கனடா – 2013

IMV OSA Canada Logo

வருடாவருடம் நடைபெறுகின்ற எமது கோடைகால ஒன்றுகூடல்

இந்த ஒன்றுகூடலானது எமது அனைத்து வேலைகளையும் சற்று நிறுத்தி ஊரவர்கள் எல்லோரும் ஒன்றுகூடி சுக நலன்கள் விசாரித்து, எமது பாரம்பரிய விளையாட் டுக்களை கண்டுகளித்து நாமும் பங்கு பற்றி எமது சிறார்களின் சிறந்த எதிர் காலத்தினைக் கட்டி எழுப்புவதே இதன் நோக்கம். அன்றையதினம் வெதுப்பிய உணவுவகைகள்(BBQ)) சிற்றுண்டிகள் தேனீர், குளிர்பானம் பரிமாறப்படும். மற்றும் சிறுவர்களுக்கான பழம் பொறுக்கல் தொடக்கம், காற்பந்து விளையாட்டு, ஓட்டப்போட்டிகள், கயிறுஇழுத்தல் நடைபெறும். காற்பந்து மற்றும் சிறு குழந்தைகள் புதிதாக பதிவு செய்பவர்கள் தமது பதிவுகளை நிகழ்ச்சிகள் ஆரம்பமாவதற்குமுன் விளையாட்டிற்கு பொறுப்பானவர்களிடம் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

திருமதி. சின்னமணி ஐயாத்துரை

திருமதி. சின்னமணி ஐயாத்துரை

துயர்பகிர்வோம்

இடைக்காட்டை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி சின்னமணி ஐயாத் துரை அவர்கள் 4-6-2013 அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலம் சென்ற ஐயாத்துரையின் அன்பு மனைவியும் வேல்முருகன்(அப்பண்ணை ), காலம் சென்ற சிறீ, மாலினிதேவி(மாலா), சிவநிதி(குட்டி), கிருஷ்ணபவன், ஆகியோரின் அருமைத் தாயாரும் கலாமதி,சத்தியசீலன், வவா, ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 5-6-2013 அன்று நடை பெற்று தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள்.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.

தகவல்
மகன்,
வேல்முருகன்(அப்பண்ணை ) – (905) 294-4707

திரு. வேலுப்பிள்ளை கதிர்காமநாதன்

திரு. வேலுப்பிள்ளை கதிர்காமநாதன்

துயர்பகிர்வோம்

இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை கதிர்காமநாதன் 03-06-2013 திங்கட்கிழமை இரவு இடைக்காட்டில் அன்னாரது இல்லத்தில் இறைபதமடைந்தார். அன்னார் மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும் , மனோகரன் ,குமரன் (கனடா), ஈஸ்வரன் (பெல்ஜியம்), கதிர்மதி (கனடா) அவர்களின் அன்புத் தகப்பனாரும், தவகுமாரி, ஜகந்தினி, சயந்தினி, யதுதீசன் ஆகியோரின் மாமனாரும், மிதுசயன், ராகவி, கிருசன், யசானா, சயானி, அக்சயன், அயிசயன் ஆகியோரின் அன்புப் பேரனுமாவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 04-06-2013 செவ்வாய்க்கிழமை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சாமித்திடல் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.