
வாய்க்கு ருசியான அறுசுவை உணவுகள் எப்படி மனிதனை ஆட்கொண்டு நிற்கின்றதோ அதைப்போல ஏன் அதைவிட மேலாக காதுக்கினிய கீதங்கள்,மனதை மகிழ்விக்க மன இறுக்கத்தைப்போக்க களைப்படைந்த மனதுக்கு இதமான ஒத்தடம் கொடுக்க மனதை இளமையூட்ட இப்படி.. இப்படி.. எம்மை சொர்க்கத்துக்கே அழைத்துச் செல்கின்றன. இவையெல்லாம் எமக்குக் கிடைக்கிறதென்றால் அதற்குக்காரணம் வானொலிதான் என்பதை எவருமறிவர்.