Articles for June 2014

நிர்வாகசபைக்கூட்டக்குறிப்பு – 01.06.2014

இடைக்காடு பழையமாணவர் சங்கம் கனடா நிர்வாகசபைக்கூட்டக்குறிப்பு – 01.06.2014

New Logoஇடைக்காடு பழையமாணவர் சங்கத்தின் நிர்வாகசபைக்கூட்டம் 01.6.2014 ஞாயிறன்று இல.91  மொண்டியோ றைவ் (Mondeo Drive) திரு செ. கணேஸ் அவர்களின் இல்லத்தில் காலை 10.30 மணியளவில் ஆரம்பமானது.

திரு பொ.கந்தவேல் தலைமையில் ஆரம்பமான கூட்டத்துக்கு நிவாக சபை அங்கத்தினர்களும் மற்றும் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். இவ்வாண்டுக்கான கோடைகால ஒன்றுகூடல் நெல்சன் பூங்காவில் 03.08.2014 (ஞாயிறு) அன்று நடைபெறவுள்ளதால் அவ்வொன்றுகூடலை சிறப்புற நடாத்துவதற்காகவே முக்கியமாக இக்கூட்டம் கூட்டப்படுவதாகவும், எனவே அனைவரும் தமது ஆக்கபூர்வமான கருத்துக்களைத் தெரிவித்துதவும்படி தலைவர் கேட்டுக்கொண்டார்.

அதன்படி ஒன்றுகூடலில் முக்கிய நிகழ்வுகளாக  விளையாட்டும் மற்றும் உணவு வழங்கலும் இடம்பெறுவதனால் அதற்காக  தனித்த்னியே மூவரடங்கிய குழுவினைத் தெரிவுசெய்யவேண்டுமென அங்கத்தவர்கள் அபிப்பிராயப்பட்டதனால் அவ்வாறு இரு குழுக்கள் தெரிவுசெய்யப்பட்டன.

ஒன்றுகூடலில் கலந்துகொள்வோருக்கான கட்டணம் கடந்தவருடத்தைப் போலவே அறவிடுவதெனவும் ஆரம்பமுதல் இறுதிவரை பணத்தைப்பெறுவதற்கு இருவர் கடமையில் ஈடுபடவேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

அடுத்து 23.3.2014 அன்று கனடா சன்னதிகோவிலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்  நிச்சயித்தபடி  சங்க யாப்பினை  இணையதளத்தில் வெளியிடுவதெனவும் அது தொடர்பாக எவராவது கருத்துத் தெரிவிக்கவிரும்பினால் அதற்கு சந்தற்பம் வழங்கப்படவே\ண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது.

இறுதியாக எமது பாடசாலைக்கு இரண்டு மாடிக்கட்டிடத்தினை தனது செலவில் அமைத்துக்கொடுத்த திரு நமசிவாயம் அவர்களின் துணைவியார் திருமதி நமசிவாயம் செல்லம்மா இடைக்காட்டில் காலமானதால் அவரைக் கெளரவிக்கும் பொருட்டு  இடைக்காட்டில் அஞ்சலி நிகழ்வொன்றை நடாத்தும்படி இடைக்காடு பழையமாணவர் சங்கத்தைக் கேட்டுக்கொள்வதென்றும்  நாங்களும் அவரைக் கெளரவிக்கும் பொருட்டு கோடைகால ஒன்றுகூடலின்போது அவரது ஞாபகார்த்தமாகப் பரிசும் வழங்குவதெனவும் முடிவானது.

மதியம் 12.00 மணியளவில் கூட்டம் இனிதே நிறைவேறியது.

 

ந. சிவகுமாரு

செயளாளர் – 6.1.2014

திருமதி வேலாயுதம் சிவேஸ்வரி (ராசமணி)

துயர்பகிர்வோம்

sivarani
உதிப்பு 21.01.1945     உதிர்வு 10.06.2014
இடைக்காட்டைப்  பிறப்பிடமாகவும் (மூளியவளவு) சிறுப்பிட்டியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி  வேலாயுதம் சிவேஸ்வரி (ராசமணி) 10..6.2014 அன்று சிறுப்பிட்டியில் காலமானார்.அன்னார் காலம் சென்ற திரு திருமதி முருகுப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும் திரு வேலாயுத்த்தின் (சிறுப்பிட்டி) அன்பு மனைவியும் யவனராணியின் (Baba – நெதர்லாந்து) அன்புத்தாயாரும் கஜிதரனின் அன்பு மாமியாரும் பிரசாத், யதுசன், அபிசன் ஆகியோரின் அன்புப் பேத்தியாரும் திருமதி சிவமணி வேலுப்பிள்ளையின் சகோதரியும் காலம் சென்ற பெரியதம்பி வேலுப்பிள்ளையின் மைத்துனரும் பகவதி ,லிங்கபவான், றங்கபவான், சிவமதி ஆகியோரின் அன்பு சிறியதாயாருமாவார். அன்னாரின் இறுதிக்கிரியை  13.6.2014 சிறுப்பிட்டியில் நடைபெறும்..

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்கப்படுகின்றனர்.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.

தகவல்
திருமதி யவனராணி கஜிதரன் 031-475501205
பகவதி குகனேசன், மொன்றியல், கனடா
514 620 7776

 

Theebika Wins Again

thee thee-2
Theebika Wins Again
Miss Theebika Thangavel of J/Idaikkadu Maha Vidyalaya-The National level Goldmedal Winner at the National Tamilday Competition 2013-wins another first place at National level. She got first place in the All Island Essay competition 2013 conducted by the Press Complaint Commision of Srilanka in conjuction with the Ministry of Education.
She will receive her award on 23rd of May 2014 at 10.30 am at a Special Award Ceremony to be held at SLPI Auditorium,at Colombo. WE congrate her for her success and wish her success in all her future ventures.
OSA idaikkadu
On behalf of Idaikkadu citizens

 

யாப்பு

imv-yapu (8)
இவ் யாப்பு சம்மந்தமாக எவ்வங்கத்தவராவது தமது அபிப்பிராயத்தைத் தெரிவிக்கவிரும்பின் தமது எழுத்துமூலமான ஆலோசனையை ponkanthavel@yahoo.com மற்றும் sivakumaru@hotmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிகளுக்கு July 04, 2014 முன்னர்.அனுப்பிவைக்குமாறு தயவுடன் கேட்கப்படுகின்றனர்.

மனதில் பட்டது, நெஞ்சைத் தொட்டது

jhfgடைக்காடனின்

 மனதில் பட்டது, நெஞ்சைத் தொட்டது

 

 

தோற்றுவிடும் வெற்றியாளர்கள்வென்றுவிடும் தோல்வியாளர்கள்

 

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை,

வெற்றி பெற்ற மனிதரெல்லாம்  புத்திசாலியில்லை  என்றொரு பாடலுண்டு.

எமது வாழ்வை வெற்றிபெற வேண்டுமானால் எமது வாழ்வின் ஒவ்வொரு கட்டத் திலும் எமக்கு ஏற்படும் சோதனைகளில் அல்லது தேர்வுகளில் நாம் வெற்றிபெற்றேயாக வேண்டும்.

எமது பள்ளிப்பருவத்தில்  பாடசாலைப் பரீட்சையில் சித்தியெய்த வேண்டும். பாடசாலையில் சித்தியெய்தினால்  தொழில் தேடும்போது அதற்கான பரீட்சையில் சித்தியெய்த வேண்டும். பின்னர் வினைத்திறமைகாண் பரீட்சையில் சித்தியெய்த வேண்டும்.

வாழ்வுக்கு ஆதாரமான பொருளாதாரத்தை வளம்படுத்துவதற்கு பல சவால்களைச் சந்தித்து வெற்றி பெறவேண்டும்.

இப்படி எமது திறமைகளை நாம் நிரூபிப்பதற்கு எம்முன் எதிர்ப்படும்  பரீட்சையில் நாம் வெற்றிபெற்றேயாக வேண்டும்.

நாம் எதிர்கொள்ளும் பரீட்சைகள் எல்லாம் உண்மையில் எம் தகுதியை, திறமையை அளவிடும் சரியான அளவுகோல்கள்தானா?

பன்னிரண்டாண்டுகள் பள்ளியில் படிக்கின்றோம். திறமையிருந்தும் ஏதோ

ஒரு காரணத்தால் பரீட்சையில் தோற்றுவிடுகின்றோம். எனவே எமக்கு எதுவுமே தெரியாதென்றாகிவிடுமா? என்னைவிட விவேகமற்ற மாணவன்  ஒருவனுக்கு அவன் தோற்றிய பரீட்சையில் அவனுக்குத் தெரிந்த வினாக்கள் வந்ததால் அவன் தேறிவிடுகின்றான். எனவே அவன்தான் திறமையானவன் என்ற தீர்ப்பு சரியானதா?

சரி, பரீட்சை சரியான அளவுகோல் என்றே வைத்துக்கொள்வோம். பரீட்சையில் 50 வீத மதிப்பெண்கள் பெற்றால் அவன் சித்தியெய்திவிடுகின்றான்.

50 வீத மதிபெண்பெற்று ஒரு மாணவன் வைத்தியர் ஆகின்றான்.. அப்போ அவன் செய்யும் வைத்தியம் 50 வீதம் தான் சரியானதா?

60 வீத மதிப்பெண் பெற்று பொறியியலாளரான ஒருவர் கட்டும் பாலம் நூறு ஆண்டுகளுக்குப்பதிலாக 60 ஆண்டுகளில் உடைந்துவிடுமா?

சோதனைகள் சரியானதுதானா என சோதனையைச் சோதித்துப் பார்க்கவேண்டியுள்ளது.

அதனால்தான் தற்போது ஒருவரது திறமையை அளவிடுவதற்கு, அவர்களது பாடசாலை வருகை, தலைமைத்துவப் ப|ண்பு, பிரச்சினைகளை எதிகொள்ளூம் ஆற்றல் போன்றவையும் கவனத்தில் கொள்ளப்படுகின்றன.

எது எப்படியிருந்தாலும் 100 சதவீதம் சரியாகவும் திறமையாகவும் எந்த மனிதனும் இருப்பதில்லை. திறமையும் ஆற்றலும் அவரது கல்வித்தகமைக்கும் அப்பால் பிறப்புடன் பிறந்த சங்கதியாகிவிடுகின்றது.

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் எந்த நடிப்புக் கல்லூரியில் பட்டம் பெற்றார்?

மகாகவி பாரதியாரும் கவிஞர் கண்ணதாசனும் எங்கே கல்விகற்று கவிஞர் ஆனார்கள்?

பெருந்தலைவர் காமராசர் அரசியலில் உதாரண புருசர் ஆவதற்கு யார் பாடம் சொல்லிக்கொடுத்தார்கள்?

இவர்கள் அனைவரும் படித்து திறமைசாலிகள் ஆகவில்லை. திறமைசாலிகளாகவே பிறந்தவர்கள்.

இவர்களைச் சோதனை சோதிக்கமுடியாது. சோதனைக்கு சோதனை வைப்பவர்கள் இவர்கள்.

\சோதனையில் தேறி நீதிபதியாகவும் வைத்தியராகவும் கடமையாற்றும் இருவர் இப்படிப்பேசிக் கொண்டனர்.

நீதிபதி கூறினார், நீங்கள் செய்யும் கொலைகள் எல்லாவற்றையும் டாக்டர் என்ற பட்டம் பாதுகாக்கின்றது, என்று.

அதற்கு வைத்தியர் கூறினார், நீங்கள் செய்யும் கொலைகள் எல்லாவற்றையும் ஈபிகோ என்ற சட்டம் பாதுகாக்கின்றது என்று.

அவர்களால் வெற்றிகொள்ளப்பட்ட சோதனை அவர்கள் முன்னால் தோல்வியடைந்து நிற்கின்றது.

பாவம், அவர்களால் விடுதலைபெற்ற ஆன்மாக்கள் சாந்தியடைவதாக.

 

இடைக்காடன்  — கனடா

8.3.2014