Articles for September 2014

திரு. சுப்ரமணியம் குணசேகரம்

Appan (Maniyaththar)

திரு. சுப்ரமணியம் குணசேகரம் மண்ணில் : 28.01.1954 விண்ணில் : 24.09.2014

 துயர்பகிர்வோம்

வளலாய், அச்சுவேலியை பிறப்பிடமாகவும் இடைக்காடு, அச்சுவேலியை வதிவிடமாகவும் கொண்ட சுப்ரமணியம் குணசேகரம் (அப்பன்) என்பவர் நிகழும் வருடம் புரட்டாதி மாதம் 24 ம் நாள் இலங்கையில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவநாயகம் மற்றும் நாகேஸ்வரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், சிவேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், கயித்தா, தூயவன், விதுசன், பிரணவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், புவனேந்திரன் (சின்னப்பு), ராஜசேகரம், சந்திரகாந்தம், சந்திரவதனம் குலசேகரம் சந்திரி மற்றும் காலஞ்சென்ற சந்திரகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரரும், ஆவார்.
அன்னாரின் இறுதிச் சடங்குகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.

தகவல் : குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு :

புவனேந்திரன் (சின்னப்பு)கனடா +289 660 1231
குலசேகரம் (கண்ணன்) கனடா +613 867 8736
கலா கனடா +905 209 8506

ராஜசேகரம் (ராசன்) கனடா +416 286 6664

மனைவி இலங்கை +94770870969

மாரிகால ஒன்றுகூடல்- 2014

இடைக்காடு பழையமாணவர் சங்கம், கனடா- மாரிகால ஒன்றுகூடல்- 2014

New Logo

13.9.2014 அன்று கூடிய இடைக்காடு பழையமாணவர் சங்கம் கனடாவின் நிர்வாகசபைக் கூட்டத்தில் மேற்கொண்ட தீர்மானத்திற்கிணங்க, வழமைபோல் இவ்வாண்டும் 25.12.2014 அன்று மாரிகால ஒன்றுகூடலை நடாத்துவதென்றும் அதன் முக்கிய நிகழ்வாக கலை நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவோர் 31.10.2014 க்கு முன்பதாக தமது பெயர் விபரங்களை பின்வருவோரிடம் பதிவுசெய்யுமாறு தயவுடன் கேட்கப்படுகின்றனர்.

திரு சி.பொன்னீசன் 416-4398613
திரு சி.ரூபன் 416-2866567
திரு த. முருகன் 416-9095393
திருமதி. பத்மாவதி நவகுமார் 416-7882645

இருவர் ஒரே நிகழ்ச்சியை நடாத்துவதைத் தவிர்க்கும்பொருட்டு தாம் மேடையேற்றவிருக்கும் நிகழ்ச்சியை அல்லது பாடலின் பெயரினை முன்கூட்டியே தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.
மேலும் சங்கீதக்கதிரை முதலான உள்ளக விளையாட்டு நிகழ்ச்சிக்கு வேண்டிய பரிசில்களை வழங்க விரும்புவோர் தமது பெயரினை தலைவரிடமோ செயலாளரிடமோ தெரிவிக்குமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
விழா நடைபெறும் இடம் மற்றும் விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
நன்றி.
பொ.கந்தவேல் – தலைவர் -647-7027346
ந. சிவகுமாரு – செயலாளர் – 647-5054079
13.9.2014

பழையமாணவர்சங்கம் கனடா – நிர்வாகசபைக்கூட்டம்

பழையமாணவர்சங்கம் கனடா – நிர்வாகசபைக்கூட்டம், 13.09.2014 

New Logo

மேற்படி எமது சங்கத்தின் நிர்வாகசபைக்கூட்டம், இவ்வாண்டுக்கான மாரிகால ஒன்றுகூடல் பற்றியும் வேறுபல விடயங்கள் பற்றியும் கலந்துரையாடு வதற்காக கூடுவதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

காலம் : 13.09.2014, பி. ப. 2.00 மணி
இடம் : 58, Kencliff Crescent (M1P 4E5) – ந.சிவகுமருவின் (சிவா) இல்லம்
நிவாகசபை அங்கத்தவர்களயும் மற்றும் நலன்விரும்பிகளையும் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆக்கபூர்வமான கருத்துக்களைத் தெரிவிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
நன்றி
ந.சிவகுமாரு
செயலாளர் – 01-09. 2014