Articles for December 2014

புதுவருடத்தை வாழ்த்தி

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

images (2)

நாளைய வாழ்க்கை என்னும்
புது பானையில்….
புதிய எண்ணங்கள்
புதிய நண்பர்கள்
புதிய முயற்சிகள்
புதிய நம்பிக்கைகள்
புதிய திட்டங்களை சேர்த்து

சோர்விலா செயல்கள்
என்னும் தீயை மூட்டி

                                                                                                                    பொங்கட்டும் புது வாழ்வு …!

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

தீமைகளை மறந்து
நல்லதை செய்திட
சோதனைகளை மறந்து
சாதனைகளை செய்திட                                                  இடைக்காடு பழையமாணவர் சங்கம் – கனடா
தோல்வியை மறந்து
வெற்றியை அடைந்திட
புதுப்பொலிவோடு
புத்தொளி வீசிட
துன்பங்கள் நீங்கி
இன்பங்கள் பொங்கிட
புன்னகை முகத்தோடு
புதுவருடத்தை வாழ்த்தி
வரவேற்ப்போம்.

திரு.சிற்றம்பலம் தம்புச்சாமி

துயர்பகிர்வோம்

2014_Thambusamy1

இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட சிற்றம்பலம் தம்புச்சாமி அவர்கள் 13/12/2014 சனிக்கிழமை பகல்
3:15 மணியளவில் இயற்கை எய்தினார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் கண்ணகை தம்பதிகளின் மூத்த மகனும் காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் பாலசிங்கம் அவர்களின் அன்புச் சகோதரரும் இராசம்மா காலஞ்சென்ற விசுவலிங்கம், சின்னப்பிள்ளை, கணபதிப்பிள்ளை, சிவபாக்கியம், ஆகியோரின் அன்பு மைத்துனரும் பரஞ்சோதி(கனடா), இராசதுரை(கனடா), சரோஜினிதேவி, சுசிலாதேவி(அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஜீவபாஸ்கரி, முருகமூர்த்தி, ஈஸ்வரி, ஈஸ்வரலிங்கம், உதயகுமார் காலஞ்சென்றவர்களான சிவசக்தி, புவனசக்தி, திலகசக்தி மற்றும் பராசக்தி, வெற்றிவேல், பர்வதசக்தி, ஆனந்தசக்தி ஆகியோரின் பெரியதகப்பனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் வட்டக்கச்சியில் 14/12/2014 நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.
அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.
கிரியை நடைபெறும் இடம்
இல 727 சிவிக் சென்ரர்
வட்டக்கச்சி, கிளிநொச்சி

தகவல்:
வெற்றிவேல்(UK) 020 85745720
தொடர்புகளுக்கு
இலங்கை : 0094 770268805 / 0094 770826186