Articles for 2015

திரு .கந்தையா இராமச்சந்திரன்

2015_Ramachandran

திரு .கந்தையா இராமச்சந்திரன் (இளைப்பாறிய உப அதிபர் – யா/இடைக்காடு மகா வித்தியாலயம்) பிறப்பு : 24-09-1954 இறப்பு : 01-10-2015

துயர் பகிர்வோம்.

இடைக்காட்டைச் சேரந்த திரு .கந்தையா இராமச்சந்திரன் 01.10.2015 வியாழக்கிழமை அன்று இறைபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற ஆறுமுகம் கந்தையா – பொன்னம்மா தம்பதியரின் அன்பு மகனும் காலஞ்சென்ற வீரசிங்கம் – குழந்தையார் தம்பதியரின் அன்பு மருமகனும் குணானந்தலட்சுமியின் அன்பு கணவரும் முகுந்தாவின்(ஆஸ்திரேலியா) பாசமிகு தந்தையும் வேல்முருகன் முருகவேலின்,(ஆஸ்திரேலியா) அன்பு மாமனும் மதூசனின் பாசமிகு பேரனும் காலஞ்சென்ற மனோன்மணி செல்வபாக்கியம் மற்றும் இராசமணி பாலகிருஸ்ணர்(ஆஸ்திரேலியா) பரஸேவரி செல்வமணி தஙகவேல்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும் இராசலிஙகம் கதிரித்தம்பி;(இளைப்பாறிய அதிபர்) இராசரத்தினம் சாரதா(ஆஸ்திரேலியா) சிறீகுகன்(இளைப்பாறிய ஆசிரியர்) குணேந்திரதாசன் நாகேஸ்வரி;(லண்டன்) குணரத்தினம்(நோர்வே) குணபூசணம்(லண்டன்) குணேஸ்வரி குணரஞ்சிதன்(ஆஸ்திரேலியா) குணசேகரன் குணேந்திரா(ஆஸ்திரேலியா) குணராகினி ஆகியோரின் பாசமிகு மைத்துனருமாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 03.10.2015 சனிக்கிழமை முற்பகல் 10 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக இடைக்காடு சாமித்திடல் மயானத்pற்கு எடுத்துச்செல்லப்படும். இந்த தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.

தகவல் : குடும்பத்தினர் மனைவி
0772719957
0777563596

திருமதி. பொன்னம்மா வேலுப்பிள்ளை

2015_2015_ponnamma

திருமதி.பொன்னம்மா வேலுப்பிள்ளை பிறப்பு: 29-11-1916 இறப்பு: 30-09-2015

துயர் பகிர்வோம்.

யாழ் இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பொன்னம்மா வேலுப்பிள்ளை ( யா/இடைக்காடு மகா வித்தியாலய இளைப்பாறிய ஆசிரியை) அவர்கள் 30-09-2015 புதன்கிழமை அவரது இல்லத்தில் இறைபதம் எய்தினார்.

அன்னார் காலஞ்சென்ற கந்தையா-சிலம்பாத்தை தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா-தெய்வானைப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகளும், அமரர் வேலுப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.

அன்னார் அமரர் சத்தியமூர்த்தி, சத்தியபாமா, கணேசமூர்த்தி ஆகியோரின் அன்புத் தாயாரும், செல்வராஜேஸ்வரி, அமரர் ஆறுமுகம், கிருஷ்ணவேணி ஆகியோரின் அன்பு மாமியாரும், கணபதிப்பிள்ளை அவர்களினதும் காலஞ்சென்றவர்களான லட்சுமிப்பிள்ளை, செல்லம்மா, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும், நாகம்மா அவர்களினதும் காலஞ்சென்றவர்களான இராமசாமி (பண்டிதர்), வேலுப்பிள்ளை, சரவணமுத்து அவர்களினதும் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னார் சக்திவேல்-சுயாந்தி, சத்தியநாராயணன்-சுமித்ரா, பிரபாகரன்- தேவிகா, சத்தியா-சுந்தரேசன், இளமுருகன்-யசோரதி, வேல்விசாகன்- கேதினி, இளங்குமரன்-சிவரூபி, சங்கீதா-சிவரூபன், கிருசாந்தன், சிவதர்சன், அமரர் பிரதீப் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். அத்தோடு ஐங்கரன், கபிலன், ஓவியா, கதிரன், அகரன், சங்கரி, சரண்யா, ஸ்ரீராம், சிவராம் ,சாய்ராம், சஜிராம், ஹர்ஷா, நளின், அபிஷன், அக்‌ஷயன், யனேஷ், யனித் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 01-10-2015 அன்று அவரது இல்லத்தில் நடைபெற்றன. இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.

தகவல் : குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:

கணேசமூர்த்தி (இலங்கை) 94-217-901-746

இளங்குமரன்              94-217-901-377

சக்திவேல் (அவுஸ்திரேலியா) 612-8807-5976

பிரபாகரன்                 612-8677-1045

சத்தியா                    612-9862-6999

இளமுருகன் (சுவிஸ்)       41-313-013-755

வேல்விசாகன் (U.K)         44-780-827-9709

சத்தியநாராயணன் (கனடா)   416-551-6553

சங்கீதா                    416-287-6054

திரு. கிருஸ்ணர் தங்கவேல்

2015_thnagavelதுயர் பகிர்வோம்.

திரு. கிருஸ்ணர் தங்கவேல் அவர்கள்  2015-09-19 அன்று இறைபதம்அடைந்தார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்.கொள்ளப் படுகின்றனர்,

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.

திருமதி. செங்கமலம் ஐயாத்துரை

113594

திருமதி. செங்கமலம் ஐயாத்துரை இறப்பு : 7 செப்ரெம்பர் 2015

துயர் பகிர்வோம்.

யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செங்கமலம் ஐயாத்துரை அவர்கள் 07-09-2015 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இளையவர், மாணிக்கம்(இடைக்காடு) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தம்பையா, அம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஐயாத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

செல்வராஜா, காலஞ்சென்ற சிவராஜா, தேவராஜா, செல்வராணி, கமலராணி, நவரத்தினராஜா, ஜெயரத்தினராஜா, குணரத்தினராஜா, ஜமுனாராணி, நித்தியானந்தராஜா, சாரதாதேவி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அன்னலஷ்மி, மங்களராஜேஸ்வரி, காலஞ்சென்ற நேசமலர், ராஜேந்திரன், அருமைத்துரை, சசிலாதேவி, சாரதாம்பிகை, குகானந்தி, சக்திதாசன், உருத்திராதேவி, மகாலிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கோகுலேந்திரா, சிவகாமி, கருணாகரி, மகேந்திரன், சத்தியேந்திரா, நிரங்கலா, வாசுகி, காலஞ்சென்ற சந்திரமோகன், சிறி ஆனந்தன், கலாஹினி, பீஷ்மன், சிவாஜினி, அரவிந்தன், நீலகி, கெளரிபாகன், பாலமதி, விமலேந்திரன், நிரந்தரி, பார்த்திபன், ராதிகா, அகிலன், விநோதா, சுவர்ணா, திவாகரன், தனரூபன், கெளதமன், மலெய்னா, பிரியங்கா, சிந்தியா, வாகீசன், ஹம்சானந்தி, சஞ்சீவ், அருண், அபிகேல், பேர்சியா, பிரிசிலா, சுஜீவன் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

அபிராமி, அபிஷா, வர்ஷா, பவித்திரன், தேஜஸ்வனி, ருக்‌ஷினி, அனந்தகி, அவிநிகன், நேஷாத்மிகா, வர்த்தனா, ஹர்ஷவர்தன், அஸ்விதன், ஆத்மயன், நிஷ்கிரியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-09-2015 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் பொறளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
செல்வராஜா(மகன்) — இலங்கை
தொலைபேசி: +94112439808
ஜெயரத்தினராஜா(மகன்) — கனடா
தொலைபேசி: +14166468861

செல்வி கந்தையா சிவஞானலட்சுமி

Miss Kanthaiya Sivagnaladchumi

செல்வி கந்தையா சிவஞானலட்சுமி (பூங்கொடி) மண் நெகிழ: வைகாசி 14 1949 கண் நெகிழ: ஆவணி 28 2015

வளலாய் அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும் லண்டனை (UK) வதிவிடமாகவும் கொண்ட செல்வி கந்தையா சிவஞானலட்சுமி (பூங்கொடி) அவர்கள் (28.08.2015) வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார் கந்தையா பொன்னம்மா தம்பதியினரின் இளைய மகளும்,
மகேஸ்வரி (பட்டு-மொன்றியோல், கனடா) சிவலிங்கம் (இலங்கை), சிவயோகம் (வள்ளிக் கொடி, மிஸிஸாகா, கனடா), சிவபாதமங்கை (சின்னக்கொடி லண்டன் UK), ஆகியோரின் அன் புத் தங்கையும்,
குமாரசாமி, செல்வமலர் மற்றும் காலம் சென்றவர்களான சிவகுரு சுந்தரலிங்கம் ஆகியோ ரின் அன்பு மைத்துனியும்,
Dr.அரவிந்தன் (Professor, இலண்டன் UK) Dr.தரணி (இலண்டன் UK) நளாயினி (இலண்டன் UK) தயாளன் (இலண்டன் UK), ஜெயரூபி (பிரான்ஸ்) ஜெயந்தி (மொன்றியோல், கனடா) பாலமுரளி (மிஸிஸாகா, கனடா) காலம் சென்ற சிவாந்தினி விஜயலட்சுமி பாஸ்கரன் ஆகியோரின் பாசமிகு சித்தியும்,
Dr. துக்கைடா (இலண்டன் UK) நாகராஜன் (இலண்டன் UK) ஜீவகுமார் (இலண்டன் UK) சுகிர்தா (இலண்டன் UK) துரைராஜா (பிரான்ஸ்) பாலசிங்கம் (சிவபுரி கனடா) வாசுகி (கனடா) சுரேஷ் வானதி யசோதா ஆகியோரின் பிரியமுள்ள அத்தையும்,
அப்டியா, ராஜறா, வீலா, மாயா, கயல், உமா, சானுஜன், பிரியங்கா, பிரியஷா, சாகிதன், சானுஜன், துவாராகா, ஹரிஜ், புருஷோத்தமன் ஆகியோரின பாசமுள்ள பேத்தியும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்.கொள்ளப் படுகின்றனர்,

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.

இறுதிச் சடங்குகள் : திங்கள் கிழமை (07.09.2015) மு.ப. 11 மணியளவில்

இடம்பெறும் முகவரி :

01, SHELDON AVENUE, CLAYHALL, ILFORD IGE 0UD, LONDON UK.

தகனம் : அதே தினம் திங்கள் கிழமை (07.09.2015) பி.ப. 1.30 மணியளவில்
இடம்பெறும் முகவரி :
FOREST PARK CEMETERY & CREMATORIUM,
FOREST ROAD, HAINAULT,
ESSEX,
IG6 3HP

தகவல் : குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு :

சிவபாதமங்கை (இலண்டன்) : +44 208 5509091
அரவிந்தன் (இலண்டன்) : +44 7711888700
தாரணி (இலண்டன்) : +44 7764514740
நளாயினி (இலண்டன்) : +44 7456497808
மகேஸ்வரி (கனடா) : +1 514 696 8178
சிவயோகம் (கனடா) : +1 416 907 9554
சிவலிங்கம் (இலங்கை) : +94 778060170

அண்ணையின் திண்ணை

images

” அது ஒரு வித்தியாசமான சமர்க்களம்! சக மாந்தரால் உதைபட்டும் அவர் வார்த்தைகளால் வதைபட்டும் பதறித் தவித்தபடி பரிதாபப் பிறவிகள் சில உதவுவார் எவருமின்றி, தற்காத்துக் கொள்ளத் திறனுமின்றி குற்றுயிராய் கிடக்கின்றன. சுற்றி வர, சற்றுத்தொலைவில் ;கழுகுகள்; சில காத்துக் கொண்டிருக்கின்றன. அவசரம் காட்டாமலேயே, அவற்றிற்குத் தெரியும் துடிக்கும் உடலங்கள் கொஞ்சநேரத்தில் அடங்கி சடலங்களாய் தமக்கு விருந்தாக வாய்க்குமென்று.
இன்னொரு காட்சி…..!வீடு பற்றி எரிகிறது, பதைபதைத்தபடி வீட்டுரிமையாளர் அங்குமிங்கும் அலைந்து தீயை அணைப்பதற்கு முனைகின்றனர். அயலவர் ஆதரவு சிறிதேனும் கிடைப்பதாக இல்லை. அரைகுறையாக எரிந்து தணிந்த சம்பத்துக்களை அள்ளி அப்புறப்படுத்தி விட்டு விரக்தி மேலிட விலகிச் செல்கின்றார் அந்த வீட்டுக்காரர்.
இதற்க்காகவே காத்திருந்த மாதிரி ஒரு கும்பல் அகப்பட்டனவற்றை தேர்ந்து எடுத்துப் போகிறது .ஒருவன் சாவகாசமாக குறங்கொள்ளியெடுத்து சுருட்டுப் பத்தவைத்தபடி நடையைக் கட்டுகிறான். இவ்வாறான பிணந்தின்னிக் கழுகுகளும் எரிகிற வீட்டில் எஞ்சியதை அபகரிக்கும் அடாவடிக்கூட்டமும் இப்போதும் இல்லாமல் இல்லை. அப்பட்டமான சுயநலமும் அடுத்தவர் அவலங்களில் ஆதாயந்தேடும் அயோக்கியத்தனமும் தொடர்ந்து நிலவுகின்றன. தனிநபர் ஒருவருக்கு அல்லது குடும்பமொன்றிற்கு அவலங்கள் ஆரம்பிக்கையில் பாராமுகமாக இருந்துவிட்டு பின்னர்- அவை புரையோடிப்போய் கரைகாண முடியாத கட்டத்தை எட்டுகையில்- தமக்கு யாதேனும் இலாபம் கிட்டுமாயிருந்தால் மட்டுமே–அவசரமாகத் தலையிடுவது, சொந்தபந்தங்கள் எனச் சொல்லிக் கொள்வோரும் உண்டு.
இதில், தமக்குள்ளே போட்டியிட்டு ஒருவரை ஒருவர் முந்திக் கொள்ள முனைவதும் நடக்கும், திருமண பந்தத்தினால் நெருக்கமான உறவுகள் மாத்திரமல்லாது, இரத்த உறவுகள்கூட இவ்விடயத்தில் விதிவிலக்கல்ல!. அனுதாபப்படவேண்டிய அந்த அபாக்கியசாலிகளின் பலவீனங்களை அளந்து அறிந்து, தமது ஆதிக்கத்தை அங்கு நிலைநாட்டிக்கொள்வதே இவர்களின் ஒரே குறிக்கோளாகும். அதே சமயத்தில் சம்பந்தப்பட்ட நெருக்கடிகளில் இருந்து அந்த உறவுகளை மீட்க வந்த மீட்பர்களாக தம்மை வெளிஉலகிற்கு விளம்பரப்படுத்தவும் செய்வர். தொடக்கத்திலிருந்தே துயரங்கள் தொடர்கையில்,; நம்மளுக்கென்ன? என்று தூர விலகி நின்ற இவர்கள்; இப்படியாக இச்சொந்தங்கள் நொடித்துப்போகும் என்று முன்பே தெரியாமல் போய்விட்டதே!; என்றவாறு நயவஞ்சகமாக நடித்தும் கொள்வர். ”
உண்மையில்- பாதிக்கப்பட்டவரின் மனநிலை பற்றியோ, அவர்களின் எதிர்காலம் குறித்தோ எள்ளளவும் அக்கறையற்று, இப்போது -தாம் உண்டு தம்பாடு உண்டு எனத் தமது கருமங்களையே கவனித்துக் கொண்டிருப்பர். இத்தகையோரின் எண்ணப் பாங்கினைப் பற்றி ;அண்ணை எப்போ சாவார், திண்ணை எப்போ காலியாகும்?; என்று அனுபவ அறிவில்லாமலா அன்று சொல்லி வைத்தார்கள்!;

இடைக்காடு இளைய பண்டிதன்.

திரு.நல்லதம்பி ஸ்ரீநிவாசகன் (சூரி)

 

2015_IMG_20150817_201137நல்லதம்பி ஸ்ரீநிவாசகன் (சூரி)
அன்னைமடியில்:15.09.1965
இறைவனடியில்:16.08.2015

திரு.நல்லதம்பி சரஸ்வதியின் அன்பு மகனும். பேபிவத்சலா(இலங்கை) ஸ்ரீராகவன்;;(டென்மார்க்) ஸ்ரீதரன்;(பிரான்ஸ்) சசிகலா(Nஐர்மன்) அமரர் உதயசங்கர் சத்தியகலா(சுவிஸ்) விஐpதகலா(இலண்டன்) ஆறுமுகஸ்ரீ(லண்டன்) சிவராம்(இத்தாலி)
ஆகியோரின் அன்புச்சகோதரனும். nஐயந்தியின் அன்புக் கணவரும் ஐஸ்மினி தர்சிகன் தர்சிகா சோபினி விதுரன் ஆகியோரின் பாசமிகு தந்தையூம் ஆவார்.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.

தொடர்புகளுக்கு:
ஸ்ரீநிவாசகன் nஐயந்தி: 0094213215864
பேபி: 0094217901911
ஸ்ரீ(டென்மார்க்): 004548441475
சுசி(Nஐர்மனி): 004941318642512
வவி(சுவிஸ்): 0041345334050
விஐp(லண்டன்): 00441793542564
வவா(லண்டன்): 00441793879897
வசந்தி(இத்தாலி):00393510146876

கனடாவும் காபேச்சும்

download

என்ன(?!) தலையங்கத்திலேயே கனடியமொழி கலந்துவிட்டது என எண்ணுகின்றீர்களா. என்ன செய்வது, காலப்போக்கில் சில ஆங்கிலச் சொற்கள் எம் தமிழ்மொழிச்சொற்களை விழுங்கிவிட்டனவே. காகிதம் என்றால் விளங்குவதில்லை. பேப்பர் என்றால்தானே விளங்குகின்றது. குளிரூட்டி என்றால் யாருக்கு விளங்குகுகிறது. பிறிச் என்றால்தானே எவருக்கும் விளங்குகிறது. அன்றியும் எதுகைமோனையுடன் தோதாக அமைந்துவிட்ட தல்லவா? சரி இனி குப்பை என்றே எழுதுகிறேனே.
எம்தாயகமண்ணிலிருந்து புலம்பெயர்ந்து வந்தவர்கள் நாங்கள். எந்தப்பொருளையும் அது உக்கி அழிந்துபோகும்வரை பயன்படுத்துவது எமது இயல்பு. சயிக்கிளை உற்பத்திசெய்வோர் இது பத்து ஆண்டுகள்தான் பாவிக்கும் என உத்தரவாதமளித்தால் நாம் அதை திருத்தி திருத்தி முப்பது நாற்பது ஆண்டுகள் வரை பாவித்துவிடுவோமே.
இங்கே கனடாவில் எதற்கும் தட்டுப்பாடில்லை. எந்தப்பொருளையும் அது சிறு பிழை ஏற்பட்டாலும் அல்லது அதன் அழகு குறைந்தாலும் குப்பைக்குள் வீசிவிடுவார்கள். தெருவிலே போகும்போது பள பள என மின்னும் பல பொருட்கள் குப்பைக்கூடைக்குள் வீசப்பட்டிருப்பதைக் காணலாம்.. உடுபுடவைகள், சப்பாத்து, சோபாக்கள், மேசைகள், மெத்தைகள் என சிறு பழுதுடன் தெருவிலே வீசப்பட்டுள்ள பொருட்கள் எத்தனை, எத்தனை? இவற்றைக் குப்பையில் வீச எப்படி மனம் வந்தது என நாம் எண்ணிக்கொள்வோம். பாவிக்ககூடிய நல்ல நிலையிலுள்ள பொருட்களைக்கூட வீசிவிடுகிறார்களே.
மாரிகாலம் வந்ததும் கோடையில் நான் பாவித்த பெறுமதியான ஒரு சப்பாத்தை மூலையில் வைத்துவிட்டு மாரிகாலத்துக்குரிய ஒரு சப்பாத்தை வாங்கி அணிந்துகொண்டேன். மீண்டும் கோடைபிறந்துவிட்டது. மூலையில் வைத்த சப்பாத்துக்கும் வேலை வந்துவிட்டது. அதைத்தேடிப்பார்த்தால் வைத்த இடத்தில் அதைக் காணவில்லை. மனைவியிடம் கேட்டேன். மூலையில் சும்மா கிடந்தது காபேச் அடித்துவிட்டேன் எனச் சாதாரணமாககக் கூறினார். கற்பூரவாசனை எல்லோருக்கும் தெரிவதிலை என என் ஆத்திரம் தீருமட்டும் திடித்தீர்த்தேன். அவரில் பிழையில்லை. அவர் கனடியப்பெண்ணாக மாறிவிட்டர். நான்தான் இன்னமும் பழைய தாய்நாட்டுக்கட்டையாக இருக்கின்றேன்.
கனடாவில் பொருட்க்களை மட்டுமல்ல, இனி இவர்கள் பயன்படமாட்டர்கள் என அறிந்தால் மனிதர்களையும் குப்பையுள் போட்டுவிடுவார்கள். ஆம், முதியோர் இல்லம் என்னும் குப்பைமேட்டுக்கு அனுப்பிவிடுவார்கள்.
குப்பையுள் குண்டுமணியைத்தேடுவது எமது தேசம்
குண்டுமணியையும் குப்பைக்குள் வீசிவிடுவது கனடிய தேசம்.
நாம் எங்கே போகிறோம், எதுவுமே புரியவில்லை.

பொன் கந்தவேல்.
கனடா, 4.7.2015

Fund Raising

Fund Raising request for I.M.V. (Aug 07, 2015)
 by : Deputy Principal
2015_schooldonation

 

கேட் “” காது “” கள்

download

ஒருகாதால் வாங்கி மறு காதால் விட வேண்டிய சங்கதிகள் பலவும் எம்மைச் சுற்றி உள்ளன, ” முதுகின் பின்னால் எழும் விமர்சனங்களில்” அதிகமானவை அத்தகையனவே! பெரும்பாலும் முகத்துதிக்கு மயங்குபவர் தமது முகத்திற்கு முன்னால் காட்டமான கருத்தெதையும் எதிர்கொள்ள நேரிடுகின்ற சந்தர்ப்பங்களில், அதனைச் செவிமடுப்பதனைத் தவிர்த்துக் கொள்வர். அப்போது அவர் காதுகள் கேட் “காது ” களாகி விடும், பொதுவில் இது இயல்பே !

ஆனால், இந்நிலையானது சில சமயங்களில் விபரீதங்கள் எதனையும் அறிந்துகொள்ள முடியாத இருளுக்குள் அவர்களை அமிழ்த்தி விடக்கூடும் . அவ்விதம் செவி வழியாக தெரியவருகின்ற ஒரு பாரதூரமான கருத்து அல்லது தகவலின் உண்மைத்தன்மையை, உடனுக்குடன் பரிசீலித்து அதற்குரிய பரிகாரம் தேடப்படாத விடத்து பின் விளைவுகள் மோசமாவதற்கு இடமிருக்கின்றது………………. எடுத்துக் காட்டாக………………

வெளியூரில்- வெளிநாட்டில் கல்வி பயிலும்- தொழில் புரியும் அல்லது தேடும் “இளைஞர்” ஒருவரின் நடத்தைப் பிறழ்வுகள் பற்றிய தகவல் அவரின் குடும்ப உறவுகளுக்கு காற்று வாக்கில் கிடைத்திருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இது வெறும் வதந்தியாக இருக்கலாம்; இன்னும் குழப்ப அனலில் கூதல் காய்பவரின் சில்மிக்ஷக் கூத்தாகவும் கூட இருக்கலாம் அதற்காக- இச் செய்தியானது விசுவாசப் பொறுப்புடனா அல்லது விசமக் காழ்ப்புடனா கசிந்துள்ளது, என்றெலாம் தமக்குள்ளே விவாதித்துக் கொண்டிருந்தால் – அது காலத்தையே விரமாக்கும். இந்தத் தயக்க இடைவெளியில், அங்கிருக்கும் நிலைவரங்கள் தீவிரமடைந்து போய்விடுவதற்கு நிறையச் சாத்தியமுள்ளது.

இந்தத் தவற் சூத்திரதாரி எவரோ அவர் தனிப்பட்ட ரீதியில் ஒழுங்கீனர் என்று பெயர் எடுத்திருக்கக்கூடும். இந்தக் கட்டத்தில் அது ஒரு பொருட்டே அல்ல! குறித்த தகவலின்நிஜ சொரூபம்தான் அக்கறைப்பட வேண்டிய- அவசரம் காட்டத்தகுந்த அவசியவிடயமாகும். குற்றம் சுமந்திருக்கும் தமது அந்த உறவின் எதிர்கால சுபீட்சத்தில்தான் சம்பந்தப்பட்ட குடுப்பத்தினரின் முழுக்கவனமும் குவிக்கப்பட வேண்டும். அவர்கள் சடுதியாக்க் களத்திலிறங்கி அடி முதல் நுனி ஈறாக ஆராய வேண்டும் இதுவே அர்ப்பணிப்புடனான முதன்மைப் பணியாகும்.

எடுத்த எடுப்பில் அந்த உறவினை நேரடி விசாரணைக்குட்படுத்தல் ஏற்புடையதன்று, அவர் உண்மையான அப்பாவி ஆயின் இவ்வித நெருக்குவாரம் அவர் மன நிலையில் எதிர்மறையான விளைவுகளைத்தான் ஏற்படுத்தும். குற்றம் உண்மையாக இருக்கும் பட்சத்திலோ-தம்மவர் விழிப்படைந்து விட்டனர் என அறிந்ததும் , முன்னெச்சரிக்கையாக தமக்கெதிரான சாட்சியங்களையும் தடயங்களையும், கலைப்பதில் அவர் மும்முரமாவார், ஒரு பொய்யைமேவுவதற்கு ஒராயிரம் பொய்களை உற்பத்தியாக்கும் முனைப்பில் அவர் இறங்குவார். தம்மை நியாயப்படுத்திக் கொள்வதற்கு எப்படியெல்லாமோ கபட தந்திரங்களைக் கையாண்டு, தமது காலத்தையும் கைப்பொருளையும் எல்லைமீறிச் செலவிடும் நிலைக்கு அவர் பரிதாபகரமாகத் தள்ளப்படுவார்.

எனவே, கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்யும் வீனான வினைக்கு ஆளாகமல் இக் குடும்பமானது உரிய காலத்தில் மதி நுட்ப நிதானத்துடன் செயற்பட்டால் மாத்திரமே இவ் வகையான வீழ்ச்சியில் இருந்து மீண்டு வரலாம். இதனை விடுத்து, துரதிட்ட வசமாக- தமது வாரிசு மீதான கண்மூடித்தனமான பாசமானது, மெய்மையின் தரிசனத்திற்கு கண்களைத் திரையிட்டு நிதர்சனத்தின் குரலையும் கிரகிக்க முடியாபடி இவர் காதுகளைக் கேட்” காது ” களாகவே ஆக்குமாயின் -குறுகிய காலக் கழிவில்,இந்தக் குடும்பத்தின் நியாயபூர்வ நம்பிக்கைகள் பலவும், எண்ணியிருந்த எதிர்பார்ப்புக்கள், பிறவும் பாழாகும்!

இவர்தம் இயல்பு வாழ்வும், சமூக மதிப்பும் தலைகீழாகும்!!

இடைக்காடு இளைய பண்டிதன்.