இடைக்காடு ம.வி பழைய மாணவர் சங்க கனடா கிளையின் குளிர்கால ஒன்றுகூடல் -2016 மற்றும் வெள்ளிவிழா மலர் வெளியீட்டு படங்களை பார்க்க,
Please click below link :
https://drive.google.com/drive/u/4/folders/0B0RmOipQmxXCSGJHV205NUhLQ0E
இடைக்காடு ம.வி பழைய மாணவர் சங்க கனடா கிளையின் குளிர்கால ஒன்றுகூடல் -2016 மற்றும் வெள்ளிவிழா மலர் வெளியீட்டு படங்களை பார்க்க,
Please click below link :
https://drive.google.com/drive/u/4/folders/0B0RmOipQmxXCSGJHV205NUhLQ0E
இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் – கனடா
வருடாந்த பொதுக் கூட்டம்
நடப்பு வருடத்திற்கான ஆண்டிறுதி பொதுக்கூட்டமும் புதிய செயற்குழுவின் முதலாவது பொதுக்கூட்டம் எதிர் வரும் சனிக்கிழமை (31-12-2016) அன்று நடைபெறவுள்ளது. அங்கத்தவர்கள் ஆதரவாளர்கள் நலன் விரும்பிகள் அனைவரும் தவறாது சமூகம் தந்து உங்களின் ஆக்க பூர்வமான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தந்துதவுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.
காலம்: 31-12-2016 சனிக்கிழமை
நேரம் : 2:00 PM
இடம்: பெரியசிவன் ஆலய கலாச்சார மண்டபம் (416-907-7434)
SIVA TEMPLE
1148 Bellamy Rd. Scarborough
நன்றி!
இடைக்காடு பழையமாணவர் சங்கம் – கனடா கிளையின் குளிர் கால ஒன்று கூடல் 2016.
2016 ம் ஆண்டிற்கான இடைக்காடு பழையமாணவர் சங்கம் -கனடா கிளையின் குளிர் கால ஒன்று கூடல் மார்கழி மாதம் 26 ம் நாள் திங்கட்கிழமை (Boxing Day) பின்வரும் விலாசத்தில் நடைபெற உள்ளது.
Sts. Peter & Paul Banquet Hall
231 Milner Ave, Scarborough, ON M1S 5E3
கட்டணம்:
தனி நபர் $20
முதியவர் $20
குடும்பம் $60
நேரம்: 4:00 pm 12:00 mid night
நிகழ்ச்சிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு ஆரம்பிக்கும்
செயற்குழு
இ.ம.வி. பழைய மாணவர் சங்கம் – கனடா
துயர் பகிர்வோம்
இடைக்காட்டை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி சபாநாயகி ஆறுமுகம் அவர்கள் இன்று 23-12-2016 வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலம் சென்றவர்களான செல்லையா மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலம் சென்றவர்களான நடராசா தங்கம்மா தம்பதிகளின் அனபு மருமகளும், காலம் சென்ற ஆறுமுகம் அவர்களின் அன்பு மனைவியும், காலம் சென்ற சீவரத்தினம், முருகையா ஆகியோரின் அன்புச் சகோதரியும், தங்கேஸ்வரி, நந்தகுமார், தனுஜா ஆகியோரின் பாசமிகு தாயாரும், ஜெயக்குமார், அகிலன், பிரியா ஆகியோரின் அன்பு மாமியாரும், சயூரி, திரிவேரகன், ஆகார், கனிரா, ஆலாப், கஸ்வினி, அதீப் ஆகியோரின் அன்பு பேர்த்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
தங்கா – 905 846 7905
நந்தன் – 776346852
தனுஜா – 776569851
துயர் பகிர்வோம்
வளலாயைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி தங்கம்மா நல்லையா புதன்கிழமை (21.12.2016) அன்று இடைக்காட்டில் சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்ற நல்லையாவின் அன்பு மனைவியும் காலஞ்சென்ற ஆறுமுகம் தெய்வானை தம்பதியினரின் பிரியமுள்ள மகளும் யோகேஸ்வரி (இலங்கை), சந்திரகாந்தன (கனடா), மனோரஞ்சிதராசா (கனடா) , சிவகுமார் (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிச் சடங்குகள் இடைக்காட்டில் நாளை வியாழன் (22.12.2016) காலை பத்து மணிக்கு இடம்பெற்று வளலாய் கூனன்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
தகவல் : செல்லையா தங்கராசா (மருமகன்)
ஓய்வுநிலை ஆசிரியர்
தொடர்புகளுக்கு :
சந்திரகாந்தன் | கனடா | 647-692-3089 |
மனோரஞ்சிதராசா (சின்னத்துரை) | கனடா | 647-349-4712 |
சிவகுமார் | கனடா | 416-431-0829 |
இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வட்டக்கச்சியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி இராசம்மா பாலசிங்கம் அவர்கள் இன்று 14/12/2016 புதன் கிழமை இறைபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பொன்னையா-வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்புமகளும் காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம்-கண்ணகைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும் காலஞ்சென்ற பாலசிங்கம் அவர்களது அன்பு மனைவியும், செல்வத்துரை(VCO), காலஞ்சென்ற செல்லம்மா, தெய்வானை(canada), காலஞ்சென்ற சுப்பிரமணியம்(Engineer) ஆகியோரின் அன்புச்சகோதரியும் காலஞ்சென்ற தம்புச்சாமி, காலஞ்சென்ற சிவலிங்கம்(Station master), வைரமுத்து (உபதபாலதிபர்), கண்மணி, பத்மாசனி(Canada) ஆகியோரின் அன்பு மைத்துனியும் காலஞ்சென்ற நாகம்மாவின் உடன் பிறவா சகோதரியும் காலஞ்சென்றவர்களான சிவசக்தி, புவனசக்தி மற்றும் பராசக்தி(Canada), வெற்றிவேல்(UK), பர்வதசக்தி(ஆசிரியை, கிளி/கிளிநொச்சி மகா வித்தியாலயம்), ஆனந்தசக்தி(ஆசிரியை, கிளி/இராமநாதபுரம் மகாவித்தியாலயம்) காலஞ்சென்ற திலகசக்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும் சிவகுமார்(Germany), கமலேஸ்வரன்(Canada), ஜெயவதனி(UK), விமலேஸ்வரன்(DPDHS, கிளிநொச்சி), மோகனகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும் மயூரன், டினேசன், டனுசன், கௌதமி, பிரேமி, பாவனா, கவினா, பவிக்சன், பவிந்தன், நிமோதரன், வினோஜா ஆகியோரின் அன்பு பேர்த்தியும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
வெற்றிவேல்(UK) 020 85745720
பராசக்தி +1 514 7314805
பர்வதசக்தி/ ஆனந்தசக்தி : + 94 21 2060352/ 0778138876
குளிர்கால ஒன்று கூடலின் போது volunteer work செய்ய விரும்பும் மாணவர்கள் தங்கள் பெயர்களை செயற்குழுவிடம் முன்பதிவு செய்யுமாறு வேண்டிக்கொள்ளப்படுகிறார்கள். ஒன்பதாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு (Gr 9 – 12) வரை பயிலும் மாணவர்கள் தங்கள் பதிவுகளை December 20 ம் திகதிக்கு முதல் மேற்கொள்ளலாம். December 26 ம் திகதி பிற்பகல் 3 .௦௦ மணியில் இருந்து நள்ளிரவு 12 .௦௦மணி வரை சேவை ஆற்ற வேண்டி இருக்கும்.
மேலும், குளிர் கால ஒன்று கூடல் Christmas தினத்திற்கு அடுத்தநாள் என்றாலும் இந்த வருட ஒன்று கூடலின் போது Christmas தாத்தா (Santa Claus)தன்னுடைய பரிவாரங்களுடன் நள்ளிரவில் கோலாகலமாக பிரவேசிப்பார் என்பதையும் சின்னஞ்சிறு சிறார்களையுடைய பெற்றோர்களுக்கு அறியத்தருகின்றோம்.
குறிப்பு
நிகழ்வில் பங்குபெறவிரும்புவோர் நிகழ்வின் இருவாரத்துக்கு முன்பதாகவே தமது வருகையை தெரியப்படுத்தினால் அது எமது உணவுத்தேவையை நிர்ணயிக்க உதவியாக இருக்கும் ஆம், உங்கள் வருகையை கீழுள்ள ஒருவருக்கு தெரியப்ப்டுத்துங்கள்.
செயற்குழு:
சிவரூபி செல்வராஜ் 905 796 3294
சத்தியாஉதயணன் 416 671 7146
தெய்வமணி சிவஞான ரூபன் 416 286 6567
வளலாயை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு.கணவதிப்பிள்ளை சதாசிவம்(செல்லத்துரை) அவர்கள் 04/12/2016 (ஞாயிறு) இன்று காலமானார்.
அன்னார் தவமணி அவர்களின் அன்பு கணவரும் தயாபரன், கௌசலா, ஜெயக்குமார் நிறஞ்சனா, தயாளினி, கௌசிகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்
அன்னாரின் இறுதிக் கிரியைகள் பிற்பகல் இரண்டு மணியளவில் வளலாயில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் வளலாய் கூனங்காடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இத்தகவலை உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
திருமதி கௌசலா செல்வக்கதிரமலை: 020 8841 6703 /+94779105974 (Sri Lanka)
இடைக்காடு பழைய மாணவர் சங்க கனடா கிளையின் பொதுக்கூட்டம்
எமது குளிர்கால ஒன்றுகூடல் மற்றும் “வெள்ளி விழாமலர்” வெளியீடு பற்றிய செயற்திட்ட பொதுக்கூட்டம் எதிர்வரும் 4ம் திகதி (Sunday ) 4.00,மணி அளவில் திரு.திருமதி .உதயணன் சத்தியதேவி இல்லத்தில் நடைபெற உள்ளது.
அனைத்து பழைய மாணவர்கள், அங்கத்துவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரும் இதியில் கலந்துகொண்டு தங்கள் ஆலோசனைகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்
இடம்:
126 Keeler Blvd
Toronto,M1E 4K9.
நேரம்: 4:00 PM
நாள்: Sunday, December 4th, 2016
சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரும் அன்புடன் அழைக்கப் படுகின்றீர்கள்!
நன்றி!
27-11-2016
செயற்குழு
IMV-OSA Canada
இடைக்காடு மகாவித்தியாலயம் பழையமாணவர் சங்கம்– கனடா, குளிர்கால ஒன்றுகூடல், 26.12. 2016
மாரிகாலம், கனடாவுக்கே உரித்தான கடும் குளிர். வெளியே எங்கேயும் போக மனம் மறுக்கும். என்றாலும் அங்கே போவோம் என மனம் சுண்டி இழுக்கும். அதுதான் எங்கள் மாரிகால ஒன்றுகூடல் நிகழ்வு.
விட்டகுறை தொட்டகுறையாக நாம் கல்விகற்ற, எமக்கு கல்வியூட்டி எம்மை நிமிர வைத்த இடைக்காடு மகாவித்தியாலயத்தின் பழையமாணவர்களாகிய நாம் புலம் பெயர்ந்து கனடா வந்தாலும் நாம் பிறந்து வளர்ந்த ஊரையும் கல்விகற்ற பாடசாலையும் மறக்காது 1992ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கனடா வாழ் இடைக்காடு பழைய மாணவர் சங்கம் இன்றைய ஆண்டு தனது இருபத்தைந்து ஆண்டைத் தொட்டு நிற்கிறது. ஆம் ஒரு கால் நூற்றாண்டைக் கடந்து வாலிப மிடுக்குடன் தன் பணியைத்தொடர்ந்து நிற்கிறது.
சங்கம் ஆரம்பித்தகாலத்தில் நாம் குழந்தைகள், வாலிபக்குழந்தைகள். அப்போதெல்லாம் எமது பாடசாலைக்கு எப்படி உதவலாம் எமது பங்களிப்பு எப்படி இருக்கவேண்டும் என்றெல்லாம் சிந்தித்தோமேதவிர ஒன்றுகூடல் நிகழ்வினை நடாத்தும் நோக்கம் இருக்கவில்லை. எனினும் நாம் அந்நிய தேசம் வந்தாலும் இங்கு நாம் சிதறி வாழ்ந்தாலும் எம்மிடையேயான உறவு அந்நியப்பட்டுவிடக்கூடாது என்னும் நோக்கில் கோடையிலும் மாரியிலும் ஒன்றுகூடல் நிகழ்வினை நடாத்தத் தீர்மானித்தோம். அந்த ஆரோக்கியமான நிகழ்வுக்கு வழிசமைத்தது எமது பழைய மாணவர் சங்கம்தான்.
கோடைகால ஒன்றுகூடல் திறந்தவெளி அரங்கில் சிறுவர் பெரியோரின் மெய் விளையாட்டுடன் உணவு உண்டு பேசி மகிழ்வோம். மாரிகாலத்தில் பெரியதோர் மண்டபத்தில் கதவைச் சாத்தி குளிருக்கு வேலிபோட்டு ஆடல் பாடலுடன் அறுசுவை உணவை உண்டு பேசி மகிழ்வோம். முன்னையது எமது நிலத்து நிகழ்வாகவும் பின்னயது எமது புலத்து நிகழ்வாகவும் அமைகிறது.
தாயக மண்ணில் கல்வியிலும் பேர் புகழிலும் கொடிகட்டிப்பறக்கும் பல பாடசாலைகள் இங்கு தமது நிகழ்வுகளை வருடாவருடம் நடாத்தி வருகின்றன. மிகவும் சிறிய ஊரிலிருந்து புலம்பெயர்ந்து வந்த நாங்களும் அவர்களுக்கு எவ்வகையிலும் சளைத்தவர்களல்ல என்னும்படி எம்நிகழ்வுகளை வருடாவருடம் நடாத்திவருவதையிட்டு நாம் பெருமையடைகிறோம்.
நேற்றுப்போல் இருக்கிறது, காலம் என்னமாய் ஓடிவிட்டது. எமக்கு இளமை திரும்பப்போவதில்லை.. நாம் இனிப் பள்ளி செல்லப்போவதில்லை. வாழ்விலொருமுறையே வரும் பள்ளிவாழ்க்கை மறக்கமுடியாத ஒன்று. அதை எண்ணி எண்ணி இருபத்தந்து ஆண்டுகளைக் கடந்துவிட்டோம். இது எம் வாழ்வில் கனதியான ஓர் ஆண்டு. சிறப்பாக கொண்டாடவேண்டிய ஒரு நிகழ்வு. அடுத்த இருபத்தைது ஆண்டு முடிவில் பொன்விழா கொண்டாடலாம்.. அதற்கு நாம் இருப்போமா இந்த எமது சங்கம் இதே துடிப்புடன் செழுமையுடன் இயங்குமா இருந்தாலும் அதன் செயற்பாடுகள் எப்படி இருக்கும் என எம்மால் கற்பனைசெய்து பார்க்கமுடியவில்லை.
சொல்வார்கள், கடந்தகாலம் முடிந்த கதை, எதிர்காலம் எப்படியிருக்குமென்று எவருக்கும் தெரியாது, நிகழ்காலமே நிச்சயமானது. உயிருள்ளது. இதைவிட்டால் இப்படி ஒரு சந்தர்ப்பம் எமக்கு கிடைக்காது.
இதைச் சிந்தித்துத்தான் திறம்படக் கருமமாற்றி வருகின்றோம். முக்கியமாக மலர் வெளியீடு. எம்மோடு எம் பாடசாலையோடு எம்மூரோடு சம்மந்தப்பட்ட பலரும் மலரின் உருவாக்கத்துக்கு பாரிய பங்களிப்பு செய்துள்ளார்கள். குறைவான விளம்பரத்துடன் நிறைவான ஆக்கங்களுடன் அம்மலர் வெளிவருகின்றது.
ஆணும் பெண்ணும் சமமானவர்களே. ஆணுக்கு பெண் எவ்வகையிலும் சளைத்தவர்களல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் இவ்வாண்டுக்கான செயற்குழுவில் தலைவர் செயலாளர் உட்பட அனைவருமே பெண்கள். ஒரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் என்பார்களே. அதை மாற்றி நம் பெண்களின் வெற்றிக்குப் பின்னால் ஆண்களும் இருக்கிறார்கள் எனும்போது நாம் அனைவருமே பெருமைப்படலாம்
நிகழ்வு வழமைபோல் கலைநிகழ்வுகளுடனும் விசேட நிகழ்வாக எம்மண்ணில் எமக்குக் கல்வியூட்டி இன்றும் இங்கு எம்முடன் வாழ்ந்துவரும் ஆசிரியர்கள், தாயகமண்ணில்பழைய மணவர்சங்கத்தை உருவாக்கி கட்டிவளர்த்து இங்கு எம்முடன் வழ்ந்துவருவோர், வயதில் முதிர்ந்த இங்கு வாழும் பழைய மாணவர் என்போரையும் விழா மேடையில் கெளரவிக்கவுள்ளோம்.
கடந்த கால ஒன்றுகூடலின்போது பலவித வசதியீனங்கள் காரணமாக பலர் மாரிகால ஒன்றுகூடலின்போது கலந்துகொள்ளாமலிருக்கலாம். இம்முறை இம்முக்கிய விழாவில் கலந்துகொள்வதற்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்பதை அன்புடனும் தயவுடனும் கேட்டுக்கொள்கின்றோம். நிகழ்வில்வெளியிடப்படும் மலரை நீங்களும் படியுங்கள். உங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லிக்கொடுங்கள். அவர்களே எதிர்காலத்தில் புலம்பெயர்ந்த மண்ணுக்கும் எம் தாயகமண்ணுக்கும் பாலமாகத் திகழப்போகிறவர்கள்.
மொன்றியால் வாழ் உறவுகளுக்கும் வேறு வெளிநாடு வாழ் அன்பர்களுக்கும் ஓர் அன்பான வேண்டுகோள், நீங்கள் டொரோண்டோ வர உத்தேசித்திருந்தால் இந்நிகழ்வு நடைபெறவுள்ள 26.12.2016 ம் திகதியை அண்மித்து வந்தால் இந்நிகழ்விலும் கலந்துகொள்ளலாம்.அதனால் மகிழப்போவது நீங்கள் மட்டுமல்ல., நாங்களும்தான்.விழாவன்று அனைவரையும் காண்போம், கூடி மகிழ்வோம்.
அன்புடன்,
செயற்குழு உறுப்பினர்கள்
08.11.2016
குறிப்பு
நிகழ்வில் பங்குபெறவிரும்புவோர் நிகழ்வின் இருவாரத்துக்கு முன்பதாகவே தமது வருகையை தெரியப்படுத்தினால் அது எமது உணவுத்தேவையை நிர்ணயிக்க உதவியாக இருக்கும் ஆம், உங்கள் வருகையை கீழுள்ள ஒருவருக்கு தெரியப்ப்டுத்துங்கள்.
சிவரூபி செல்வராஜ்- 905-796-3294 / 647-280-4281
சத்தியா உதயணன் : 416-671-7146 / 416-724-7471
தெய்வம் சிவஞானரூபன் : 647-923-6523 / 416-286-6567