நிதி சேகரிப்பு – இடைக்காடு பழைய மாணவர் சங்கம் கனடா

“இடைக்காடு-வளலாய் கல்வி நிதியுதவி திட்டம்” (Loan-Aid) என்னும் அமைப்பானது கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக, கற்கை நெறியை மேற்கொள்ள பண உதவி  தேவைப்படும் இடைக்காடு-வளலாய் மாணவர்களுக்கு உதவும் முகமாக, உலகின் பல நாடுகளிலும் எமது பாடசாலையின்  பழைய மாணவர்களை பிரதிநிதிகளாகக்கொண்டு இயங்கி வருகின்றது.

இவ் அமைப்பின் செயற்பாட்டிற்கு ஆரம்ப காலத்திலிருந்து இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க கனடாக்கிளையும் உதவி வருகின்றது.

இவ் அமைப்பிற்கு தற்போது கற்கை நெறியை மேற்கொள்ளும் மற்றும் மேற்கொள்ளவிருக்கும் மாணவர்களிற்கான உதவிப்பண பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் கடந்த 02-10-2016 அன்று நடந்த எமது சங்க பொதுக்கூட்டத்தில் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய,  இதற்கென ஒரு நிதியை சங்கத்தின் சார்பில் கனடாவில் சேகரித்து வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது.

 

இச்செயற்பாட்டிற்கு உதவி  வழங்க விரும்பும் உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் கீழ் வரும் செயற்குழு உறுப்பினர்களுடன் எதிர்வரும் 30-11-2016 இற்கு முன் தொடர்பு கொள்ளவும்:

 

1) திருமதி.தெய்வமணி சிவஞானரூபன்                            416-286-6567

2) திருமதி.சத்தியதேவி உதயணன்                                      416-724-7471

3) திருமதி.சிவரூபி செல்வராஜ்                                              905-796-3294

நன்றி !

 

செயற்குழு

இ.ம.வி  ப.மா .ச – கனடா

Posted in: 2016.
Last Modified: October 9, 2016