Articles for January 2016

திரு சங்கரப்பிள்ளை பொன்னையா

துயர் பகிர்வோம்.
114697

திரு சங்கரப்பிள்ளை பொன்னையா இறப்பு : 25 சனவரி 2016

யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை பொன்னையா அவர்கள் 25-01-2016 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகுப்பிள்ளை நாகபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பார்வதிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,

நாகேஸ்வரி, சக்தியேஸ்வரி(ஆசிரியை- தூயமணி முன்பள்ளி), கேதீஸ்வரன்(வீதி அபிவிருத்தி அதிகாரசபை- கிளிநொச்சி), ஜெகதீஸ்வரன்(இராசன்- சுவிஸ்), காலஞ்சென்ற இலங்கேஸ்வரன், பரமேஸ்வரன்(ஈசன்- ஆசிரியர் பருத்தித்துறை), கமலேஸ்வரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற நல்லதம்பி, கமலம், வேலாயுதபிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பத்மநாதன், ஸ்ரீஸ்கந்தராசா, மதிவதனி(ஆசிரியை- வட்டக்கச்சி), தர்சினி(சுவிஸ்), சிவாஜினி(ஆசிரியை- பருத்தித்துறை), வனிதா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பமீலா, பர்மிலா, கேமிலா(கச்சேரி- முல்லைத்தீவு), சகிலா, தர்மிலா(நீர்ப்பாசனத் திணைக்களம்- கிளிநொச்சி), சர்மிளா, சுதர்சன்(கோபு), சாமினி, சாரங்கன், சாருஜா, தனுசா, தனுசன், தனுசா, கேதாரதன், விதுஜா, கஜானன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

சுஜீத்தனன், கவியரசன், விதுசி, அரங்கன், டனுஜா, மயூரிகா, மயூரதன், நிவேதிகன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-01-2016 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் மம்மில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.

வீட்டு முகவரி:
இல. 886,
ஆறுமுகம் வீதி
வட்டக்கச்சி,
கிளிநொச்சி.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
– — இலங்கை
செல்லிடப்பேசி: +94770466438
வீடு — இலங்கை
தொலைபேசி: +94213200157
கேதீஸ் — இலங்கை
செல்லிடப்பேசி: +94773264634
ராசன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41522422657
ஈசன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94778692494
கமல் — பிரித்தானியா
தொலைபேசி: +442086955454

திரு வடிவேலு பராசக்திராஜா

துயர் பகிர்வோம்.

2016_parasathy

திரு வடிவேலு பராசக்திராஜா (முன்னாள் உரிமையாளர்- Euro Lanka) அன்னை மடியில் : 26 ஒக்ரோபர் 1949 ஆண்டவன் அடியில் : 23 சனவரி 2016

யாழ். அச்சுவேலி இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட வடிவேலு பராசக்திராஜா அவர்கள் 23-01-2016 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வடிவேலு, பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற வீரசிங்கம், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகமங்களம் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
பிரியன்(அவுஸ்திரேலியா) அவர்களின் அருமைத் தந்தையும்,
சிவசுப்பிரமணியம், சச்சிதானந்தம்(சுவிஸ்), வைத்தீஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுபாங்கி அவர்களின் அன்பு மாமனாரும்,
சின்னத்தங்கச்சி, இராசமணி, தங்கமலர், சிவமனோகரி, விக்கினேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுயாகரன், பாஸ்கரன், கவிதா, மனோகரன், விஜிதா, ராஜிதன், கீதா ஆகியோரின் அன்புச் சிறிய தந்தையும்,
கியாஷா அவர்களின் ஆசைப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-01-2016 திங்கட்கிழமை அன்று ந.ப 12.00 மணியளவில் இடைகாட்டில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
யோகமங்களம்(மனைவி) — இலங்கை
94777565903
பிரியன்(மகன்) — இலங்கை
94777767742
கணேஷ் — சுவிட்சர்லாந்து
41447090056
சுயாகரன் — சுவிட்சர்லாந்து
41417101944

இடைக்காடு பழைய மாணவர் சங்க கனடா கிளையின் வெள்ளி விழாமலர் பற்றிய ஆலோசனை கூட்டம்

இடைக்காடு பழைய மாணவர் சங்க கனடா கிளையின் வெள்ளி விழாமலர் பற்றிய ஆலோசனை கூட்டம்

இடைக்காடு பழைய மாணவர் சங்க கனடா கிளையின்  25வது ஆண்டு நிறைவை ஒட்டி வெளியிட இருக்கும் “வெள்ளி விழாமலர்” பற்றிய ஆலோசனை கூட்டம் எதிர்வரும்  மாசி மாதம் 14ம் திகதி, நடைபெற உள்ளது என அறியத்தருகிறோம் .

இடம்: திரு. திருமதி பொன்னீஸ்வரன்- வசந்தமலர் இல்லம்

4-Ritz Garden Court, Scarborough

ON (Ellesmere/Morrish)

நேரம்:  3:00 PM

நாள்:  Sunday, Feb 14, 2016

சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர்கள் மற்றும்  நலன் விரும்பிகள் அனைவரும் அன்புடன் அழைக்கப் படுகின்றீர்கள்!

நன்றி!

20-01-2016

செயற்குழு

IMV-OSA  Canada

இனிய பொங்கல்

“யாதும் ஊரே, யாவரும் கேளிர்”

download

அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்

 

இடைக்காடு பழையமாணவர் சங்கம்

B7YmhT1CMAEMg6E

திரு.கந்தையா ஆறுமுகசாமி

துயர் பகிர்வோம்.

2016_Arumugasamy

திரு.கந்தையா ஆறுமுகசாமி
சந்நிதி வீதி தம்பக்கடவை இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும்
கொண்ட கந்தையா ஆறுமுகசாமி நேற்று (08.01.2016) வெள்ளிக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா-லட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும் தங்கம்மாவின் அன்புக் கணவரும் காலஞ்சென்றவர்களான வள்ளியம்மை, சரவணமுத்து, வல்லிபுரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், தவலட்சுமி, கந்தவேள் (லண்டன்), விஜயலட்சுமி ( ஆசிரியை – யா/இடைக்காடு மகா வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும் சுமித்திரா (லண்டன்), திருக்குமரன் (யா/புத்தூர் இந்து ஆரம்பப் பாடசாலை) ஆகியோரின் அன்பு மாமனாரும் அஸ்மிதா, அக்க்ஷியன், ஷாமிலன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (09.01.2016) சனிக்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் நண்பகல் ஒரு மணியளவில் தகனக் கிரியைகளுக்காக சாமித்திடல் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.

தகவல் – குடும்பத்தினர்
TP – +94 77 66 21 001

பாராட்டி வாழ்த்துகின்றோம்

logo

2015 க.பொ.த (உ.த) பரீட்சையில் கலைப்பிரிவில் மாவட்ட நிலையில் 1ஆம் நிலையைப்பெற்று (3A சித்தி)
எமது பாடசாலைக்கும்,
கோப்பாய் கல்விக்கோட்டத்திற்கும்,
கோப்பாய் பிரதேசத்திற்கும்,
யாழ் கல்வி வலயத்திற்கும்
பெருமை சேர்த்து வைத்த மாணவி செல்வி குணபாலசிங்கம் நிதர்சனா அவர்களைப் பாராட்டி மகிழ்கின்றோம்.

இவரோடு பரீட்சையில் உச்ச சித்தியைப் பெற்றுக்கொண்ட
யோகேஸ்வரன் கயானா A 2B கலைப்பிரிவு
கமலகுலசிங்கம் கஸ்தூரி A B S கலைப்பிரிவு
ஸ்ரீவடிவேல் விஸ்ணுஜா A B S விஞ்ஞானப்பிரிவு
கனகராசா தர்சிகா 2B S விஞ்ஞானப்பிரிவு
சத்தியமூர்த்தி சதீஸ்யா 2C S கணிதப்பிரிவு
மகாலிங்கம் ரதிக்கா 2C S கணிதப்பிரிவு
ஆகியோர் தமது மேன்நிலைக் கல்வியில் மேலும் சிறப்புற்று விழங்கி கடமை வீரர்களாகத் திகழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வாழ்த்தி மகிழ்வதோடு சாதனைக்குரியவர்களாக இம்மாணவர்களை வழிப்படுத்திய பாடசாலை ஆசிரியர்களையும் எமது முன்னாள், இந்நாள் அதிபர்கள் ஆகியோரையும் பாராட்டி நிற்கின்றோம்.

திருமதி. விசாலட்சிப்பிள்ளை விசயரத்தினம்

Veera's Mom 6

துயர் பகிர்வோம்.

யாழ்-வளலாய், அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும் வளலாய்,(இலங்கை), கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி விசாலட்சிப்பிள்ளை விசயரத்தினம் என்பவர் இன்று, தை மாதம் 6ம் திகதி 2016 அன்று (06.01.2016) காலை ஸ்காபரோ பொது மருத்துவமனையில்,கனடாவில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பையா, வடிவேலு, மங்கையர்கரசி, தம்பிராசா, (செட்டி மாமா) மனோன்மணி, ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ் சென்றவர்களான பொன்னுத்துரை, நாகரத்தினம், தம்பித்துரை ஆகியோரின் மைத்துனியும்,

அன்னார் காலஞ்சென்ற ஆயள்வேத மருத்துவர் விசயரத்தினத் தின் அன்பு மனைவியும் கனடாவில் வசிப்பவர்களான வீர சிங்கம், விசயலட்சுமி, பாஸ்கரன், ஆனந்தவல்லி, விஜயகுமார், வேல்முருகன், பாலச்சந்திரன், ஆகியோரின் பாசமிகு தாயாரும் காவேரி, ரவீந்திரன், சிவேஸ்வரி, மகேந்திரன், தயாளினி, பாமினி, சிவாஜினி, ஆகியோரின் பிரியமான மாமியும்,மஞ்சுபாசினி, ரவிவர்மா, தர்சன், மதுசன், கிரிசன், கிசான்,அஸ்வின், ஆதுசன், அஸ்மிதா , சிந்துரா, சாருஜன், ஜெனுஷன்,கபிஷன், வஜீவன், வேணுஜன், தனுசன், அனோசன் ஆகியோரின் அருமைப் பேத்தியும், ஆனந்தின் அருமைப் பூட்டியும்,

மதனமோகன், மோகனா, மதிவதனி மற்றும் ரவிச்சந்திர மோகன் ஆகியோரின் பாசமிகு சீனியம்மாவும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இறுதி சடங்கு கள் பற்றிய விபரங்கள் :

பார்வைக்கு
திகதி: சனிக்கிழமை 09/01/2016, 05:00 பி.ப — 09:00 பி.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 10/01/2016, 05:00 பி .ப — 09:00 பி .ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
கிரியை
திகதி: திங்கட்கிழமை 11/01/2016, 08 :30 மு.ப
முகவரி: Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
தகனம்
திகதி: திங்கட்கிழமை 11/01/2016
முகவரி: St. John’s Norway Cemetery & Crematorium, 256 Kingston Rd, Toronto, ON M4L 1S7, Canada
அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.

தகவல்
சந்திரன் (416 732 3365)

தொடர்புகளுக்கு
ஆனந்தி மகேந்திரன்  416 261 4105

கோடை கா ல ஒன்று கூடல் -2016

இடைக்காடு பழைய மாணவர் சங்க கனடா கிளையின் கோடை  கா

ஒன்று  கூடல் -2016

New Logo

  • 2016ம் ஆ ண் டி ற் கா ன  கோடை கா ல  ஒன் று  கூ ட ல்  ஆ வ ணி  மா த ம் 21ம் திகதி  அன்று   ,
  • 1555 Neilson Rd
  • Ward: 42
  • District: Scarborough
  • Near: Neilson Rd & Crow Trail ல்

அமைந்துள்ள  Nelson Park ல்  நடை பெறும் என அறியத் தருகிறோம்.

 

நன்றி!

செயற்குழு

IMV-OSA Canada

இடைக்காடு பழைய மாணவர் சங்க கனடா கிளையின் 2016ம் ஆண்டிற்கான பொதுக்கூட்டம்

IMG_4847இடைக்காடு பழைய மாணவர் சங்க கனடா கிளையின் 2016ம் ஆண்டிற்கான பொதுக்கூட்டம்

25.12.2015 அன்று   231 Milner Ave, Scarborough, ON M1S 5E3 என்னுமிடத்தில் அமைந்துள்ள Peter and Paul Banquet Hall Scarborough இல்  நடை பெற்ற குளிர் கால ஒன்றுகூடலின் போது 2016ம் ஆண்டிற்கான செயற்குழு  உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள் . இடைக்காடு பழைய மாணவர் சங்க கனடா கிளையின்  25ம்  ஆண்டு நிறைவினை ஒட்டி புதிய  செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் பெண்களாக தெரிவு செய்யப்பட்டார்கள்.

 

 

செயற்குழு:
தலைவர்                         திருமதி .சிவரூபி செல்வராஜ்
உப -தலைவர்            திருமதி.லோஜினி  ஞானசேகரம்
செயலாளர்                 திருமதி.சத்தியதேவி  உதயணன்
உப செயலாளர்      திருமதி.ரஜனி அருணகிரி
பொருளாளர்             திருமதி.தெய்வமணி  சிவஞானரூபன்
உப  பொருளாளர்                 திருமதி .பத்மாவதி நவகுமார்
செயற்குழு உறுப்பினர்கள் ;
திருமதி. சிகா சிவகுமார்
திருமதி.ரூபவல்லி நாகேஸ்வரமூர்த்தி
திருமதி .நிவஷா ஜெயகுமார்
திருமதி. குயின்மதி  நிமலன்
திருமதி.இந்திராணி  சண்முகராஜா
ஆலோசனைக்குழு:
திரு.ச.கேசவமூர்த்தி
திரு.சி.நல்லதம்பி

2016ம்  ஆண்டிற்கான பொதுக்கூட்டம்  தை மாதம் 2ம் திகதி சனிக்கிழமை காலை 10.00மணிக்கு கனடா பெரிய சிவன் கோவிலில் நடை பெற்றது . முதலாவதாக இடைக்காடில் உள்ள ஆரம்ப பாடசாலையின் முன்னேற்றம்  பற்றி விரிவாக ஆராயப்பட்டது அதை தொடர்ந்து, நடை பெற்ற குளிர் கால ஒன்று கூடலின் நிறை  குறைகள் பற்றி ஆராயப்படதுடன் ,இனிவரும் காலங்களின் குறைகளை திருத்தி அமைக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பதாக முடிவு  செய்யப்பட்டது .

தொடர்ந்து 2015ம் ஆண்டிற்கான செயலாளர் பொருளாளர் அறிக்கைகள் வாசிக்கப்பட்டன. தொடர்ந்து போசகர் திரு.ச.கேசவமூர்த்தி அவர்கள் புதிய அணி தொடர்பான தனது கருத்துகளை வழங்கினர் .

அதை தொடர்ந்து 2016ம் ஆண்டிற்கான புதிய உறுப்பினர்கள் நியமனம் பெற்றனர் .அதன் போது இடைக்காடு பழைய மாணவர் சங்க கனடா கிளையின் 25ம்  ஆண்டு நிறைவினை ஒட்டி வெளியிடப்பட இருக்கும் ”வெள்ளிவிழா”  மலரை பற்றியும் குளிர் கால ஒன்று கூடலின் போது கொண்டுவர வேண்டிய மாற்றங்கள் பற்றியும் ஆராயப்பட்டது .இறுதியாக கோடை கால ஒன்று கூடலுக்கு பூங்காவை பதிவு செய்ய வேண்டிய ஒழுங்குகள் பற்றி பேசி கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.

நன்றி!

செயற்குழு

IMV-OSA Canada

 

சமையல் என்பது……

நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அனைவர்க்கும் எனது 2016ம் ஆண்டுக்கான புத்தாண்டு வாழ்த்துக்கள்.
என்ன ஓட்டமாக ஒருவருடம் ஓடிவிட்டது. எமக்கும் ஒரு வயது கூடிவிட்டது.. சில மாதங்கள் ஒருசில வசதியீனங்கள் காரணமாக நான் இந்தப் பக்கத்துக்கு வரமுடியவில்லை. எனினும் உங்களுடன் என் எண்ணங்களை பகிர்ந்து கொள்வதற்கு நிறையவே உள்ளன.
அவ்வப்போது இந்தப்பக்கத்தில் நான் வருவேன். அறிவுப் பசிக்கான சிற்றுண்டிகள் இங்கே இலவசமாகக் கிடைக்கும். படிக்க நீங்கள் ரெடியானால் படைக்க நான் ரெடி. முதலில் சமையலைப்பற்றி படைப்போமே….. படிப்போமே.
அன்புடன் கந்தவேல்
03.01.2016

சமையல் என்பது……

getty_rf_photo_of_spice_jars_on_counter

மனித வாழ்வின் அத்தியாவசிய அடிப்படைத் தேவைகள் என்ன?
உணவு, உடை, உறைவிடம்.
இம்மூன்றில் முன்னிலை வகிப்பது உணவுதான்.
பசி வந்திடப் பத்தும் பறந்திடும் என சும்மாவா சொன்னார்கள்.
பசி வந்தால் கையும் ஓடாது, காலும் ஓடாது அடுத்தவரைப்பற்றி சிந்திக்கமாட்டோம். நாளைய பொழுதும் ஞாபகம் வராது. பசி தீர்ந்தால்தான் பஞ்சணையும் ஞாபகத்துக்கு வரும்.

வயிற்றுப் பசியும் நாக்கு ருசியும் எம்மை ஆட்டிப் படைக்கின்றன.
ஒரு நடிகை, கவர்ச்சி நடிகை. அரைகுறை ஆடையில் வயிற்றைக் காட்டி காட்டி நாட்டியம் ஆடினாள். ஒரு நிருபர் அதைப்பற்றிக் கேட்டார்.
ஏன் புரியவில்லையா எல்லாம் இந்த வயிற்றுக்காகத்தான் என்று கூறினார் அவர்.
ஒரு சாண் வயிற்றுக்கு வழியில்லாத போது ஒரு முழம் கயிறல்லவா, கயிறும் படைத்து வயிறும் படைத்த உன் மேல் தவறல்லவா என கடவுளைப் பார்த்து கண்ணதாசன் கேட்டார்.

கைநிறைய சம்பாதிக்கும் கணவன் கிடைத்தால் ஒரு பெண் எப்படி அதிர்ஷ்டசாலியோ அப்படி வாய்க்கு ருசியாக சமைக்கும் மனைவி கிடைத்தால் கணவனும் அதிர்ஷ்டசாலிதான்.
பெண்களுக்கு மட்டுமா சமைக்கத் தெரியும்?.
பெண்களைப் போல் ஏன் பெண்களைவிட நன்றாகச் சமைக்கத் தெரிந்த ஆண்களும் இருக்கவே செய்கின்றனர். அவர்களுக்கு வாழ்க்கைப்பட்ட பெண்கள்பாடு அதோ கதிதான். ஒவ்வொரு சமையலிலும் குறைகண்டு கொண்டே இருப்பார்கள். ஏன்ரா இவனை முடித்தோம் என்று அவர்கள் படும்பாடு சொல்லி மாளாது. அதே வேளை சமையலே தெரியாத ஆணுக்கு வாழ்க்கைப்பட்ட பெண்கள் பாடு கொண்டாட்டம்தான். சமையலில் நீட்டு முடக்கு எதுவுமே கணவனுக்குத் தெரியாது. மனைவி சொல்லே மந்திரம் என்பது போல் மனைவி சமையலே தேவாமிர்தம் என எண்ணிக் கொள்வார்.

எல்லாம் அனுபவம்தான்.
எனக்கும் கொஞ்சம் கொஞ்சம் சமைக்கத் தெரியும். எனவே அவ்வப்போது மனைவியின் சமையலின் குறை நிறைகளை அலசி ஆராயும்போது.. நிச்சயம் என்னை மனதுக்குள் திட்டித் தீர்த்திருப்பார்.

உப்பிட்டவனை உள்ளவும் நினை.
உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்றும் கூறுவார்கள்.
இது எனக்கு உடன்பாடானதல்ல. உப்பில்லாத உணவைக் கூட உண்டு விடலாம். ஆனால் அளவுக்கதிகமான உப்பு சேர்ந்த உணவை எவருமே உண்ணமுடியாது. அதனால்தான் அக்காலத்தில் சிறைக் கைதிகளுக்கு உப்பும் சோறும் கொடுப்பார்கள் போலும்.
17 வயதுவரை அம்மாவின் சமையலில் உணவு உண்ட நான் பின்னர் வன்னியில் கமத்தில் தனியே வாழ வேண்டி ஏற்பட்டது. ஒருநாள் முதன் முதலில் நானே சமைத்துச் சாப்பிடவேண்டிய சூழல்.
கழி செய்வது இலகுவானது. சட்டியில் தேங்காய்ப்பால் கொதிக்க வைத்தேன். உப்பைப்போட்டு கழி கிண்டியாயிற்று. ஒரு சமையல் செய்துவிட்டேன் என்ற பரம திருப்தி.
கழியை வாயில் வைத்தேன். உப்பென்றால் அப்படி ஒரு உப்பு.. சிறிதுகூட உள்ளே போகவில்லை. வாய்க்குள் வைத்ததையும் வெளியே துப்பிவிட்டேன். வேடிக்கை இனித்தான் உள்ளது. சரி இது சரிப்படாது என நினைத்து அதை எங்கள் வீட்டு நாய்க்கு வைத்தேன். சிறிது நக்கிப் பார்த்துவிட்டு அதுவும் விலகிச் சென்றுவிட்டது. நல்லவேளை அதற்கு கதைக்கத் தெரியாது. தெரிந்திருந்தால் என்னைத் திட்டித்  தீர்த்திருக்கும். அயவலருக்கும் கூறி என்னை நாறடித்திருக்கும்.
அதுதான் கடைசியும் முதலும். அதன்பின் இன்றுவரை என் சமையலில் உப்பு கூடவும் இல்லை. குறையவும் இல்லை.
இது எனக்கு கொண்டாட்டம்…. என் மனைவிக்கு…..அதை  நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
என் மனைவியை  நான் என்றுமே விட்டுக் கொடுக்கமாட்டேன்.

பொன் கந்தவேல்
03.1.2016