Articles for January 2016

திருமதி.கந்தசாமி ஐயர் விசாலாட்சியம்மா

Pillaiyar Iyer Amma 2துயர் பகிர்வோம்.
GetAttachment

திருமதி.விசாலாட்சியம்மா தோற்றம் : 03/071930 — மறைவு : 03/01/ 2016

தஞ்சாவூர் தமிழ்நாடு இந்தியா வை பிறப்பிடமாகவும் தம்பாலை அச்சுவேலியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி விசாலாட்சி அம்மாள் கந்தசாமி ஜயர் அவர்கள் தை 3ம் நாள் 2016 அன்று இலங்கையில் காலமானார். இவர்  தம்பாலை, இடைக்காடு, வளலாய் பகுதியில் உள்ள ஆலயங்களில் பரம்பரை பரம்பரையாக பூசகராக கடமையாற்றிய காலஞ்சென்ற கந்தசாமி ஐயர் அவர்களின் அன்பு மனைவியாவார். அன்னாரின் இறுதி சடங்குகள் அவரது இல்லத்தில் தை மாதம் 4ம் நாள் 2016 அன்று இடம் பெற்றது.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.

துயர் பகிர – ஜெயம் ஐயா – +94 21 205 8326

 

கபொத உயர்தரப்பரீட்சை முடிவுகள் வெளியீடு

2015ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையின் பெறுபேறுகள் இன்று காலை வெளியாகியுள்ளன.

இந்தநிலையில் குறித்த பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளமான http://www.doenets.lk/exam/home.jsf இல் பார்க்கமுடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

result_1st_jaffna_004

கலைப்பிரிவில் அச்சுவேலி இடைக்காடு மகாவித்தியாலய மாணவி குணபாலசிங்கம் நிதர்சனா 3ஏ சித்தி பெற்று மாவட்ட மட்டத்தில் முதல் இடத்தையும் தேசிய மட்டத்தில் 46ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.

வருடாந்த பொதுக் கூட்டம் 2016

இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் கனடாகிளை வருடாந்த பொதுக் கூட்டம் 2016 .

New Logo
நடப்பு வருடத்திற்கான புதிய செயற்குழுவின் முதலாவது பொதுக்கூட்டம் எதிர் வரும் சனிக்கிழமை (02-01-2016) அன்று நடைபெறவுள்ளது. எமது சங்கத்தின் வெள்ளிவிழா ஆண்டின் பொதுக் கூட்டம் என்பதுடன் வெள்ளி விழாவிற்கான செயற்திட்டங்கள் பற்றி ஆராயப்படவுள்ளதால் அங்கத்தவர்கள் ஆதரவாளர்கள் நலன் விரும்பிகள் அனைவரும் தவறாது சமூகம் தந்து உங்களின் ஆக்க பூர்வமான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தந்துதவுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.
காலம்/ 02–01–2016 சனிக்கிழமை. காலை 10–00 மணி saturday 10-00 am ( 02- jan- 2016)
இடம்; பெரியசிவன் ஆலய கலாச்சார மண்டபம் (416–907–7434)–SIVA TEMPLE
1148 பெலாமி றோட், ஸ்காபுரோ. 1148 Bellamy rd. Scarborough
நன்றி

தொடர்புகளுக்கு’
வே.இளங்கோ- தலைவர் –416–909–1107
நா.மகேசன்’’ செயலாளர்–416–949–1815

New Year. -2016

New is the year, new are the hopes, new is the resolution, new are the spirits, and new are the warm wishes from all of Idaikkadu. Have a promising and fulfilling New Year. -2016

மலரும் இப்புத்தாண்டு  உயரிய வாழ்வையும், நீங்காத வளங்களையும், நிறைவான நலன்களையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும்.

 

இடைக்காடு பழையமாணவர் சங்கம்

Jan012016