Articles for April 2016

Idaikkadu MV O/L Results – 2015

logo

யாழ் இடைக்காடு மகா வித்தியாலயம்
க.பொ.த ( சாதாரண ) தர பரீட்சை பெறுபேறு – 2015
(தமிழ் மொழிமூலம்)
செல்வன். குணபாலசிங்கம் நிதுர்சன் – 4A 3B 2C
தம்பாலை, அச்சுவேலி.
2.செல்வன்.சுகந்தராசா சுலோஜன் – 3A 3B 2C
வளலாய் கிழக்கு,அச்சுவேலி.
செல்வன். செல்வக்குமார் செந்துஜன் – 2A 5B 2C
முரசொலி, கதிரிப்பாய், அச்சுவேலி.
4.செல்வி. மகேந்திரராசா பூர்விகா -2A 3B 2C 2D
வளலாய் மேற்கு, அச்சுவேலி.
5.செல்வன். ஆனந்தராசா லியாசன் – 2A 3B 3C
தம்பாலை,அச்சுவேலி.
செல்வி. வேல்முருகன் நிவேதிகா – 2A 3B 3C
புதியபூமி, இடைக்காடு, அச்சுவேலி.

யாழ் இடைக்காடு மகா வித்தியாலயம்
க.பொ.த ( சாதாரண ) தர பரீட்சை பெறுபேறு – 2015
(ஆங்கில மொழிமூலம்)

செல்வி .ரகுலகரன் திக்ஷிகா – 9A
தேத்தாவடி,இடைக்காடு,அச்சுவேலி.
செல்வன் .ஸ்ரீவடிவேலு தயாபன் – 8A1B
சோதிவைரவர் கோவிலடி, இடைக்காடு, அச்சுவேலி.
செல்வன். முருகையா பிருந்தாபன் – 8A 1B
மாணிக்க இடைக்காடர் வீதி, இடைக்காடு, அச்சுவேலி.
செல்வன். ரகுநாதன் சரண்யன் – 5A 3B 1C
வட்டவளவு, இடைக்காடு,அச்சுவேலி.

திருமதி நாகரத்தினம் இரத்தினசபாபதி

Mrs Rathinaiya (Kadavul) 3

திருமதி நாகரத்தினம் இரத்தினசபாபதி அவர்கள் மண்ணில்: தை 1 1929 விண்ணில்: சித்திரை 11 2016

துயர் பகிர்வோம்.


அன்னார் வைரமுத்து இரத்தினசபாபதி (சின்னக்கடவுள்) அவர்களின் அன்பு மனைவியும்,
வளலாய் அச்சுவேலியை பிறப்பிடமாகவும் மொன்றியோல் கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி நாகரத்தினம் இரத்தினசபாபதி அவர்கள் இன்று திங்கள் கிழமை (சித்திரை 11 2016) சிவபதம் அடைந்தார்.

காலம் சென்றவர்களான முத்துலிங்கம் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் பிரியமான மகளும், வைரமுத்து செல்லாச்சிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற இராசதுரை, நேசரத்தினம், (அவுஸ்திரேலியா) அன்னரத்தினம், (அவுஸ்திரேலியா) காலஞ்சென்ற குணரத்தினம், செல்வரத்தினம், (அவுஸ்திரேலியா) தங்கரத்தினம் (இலங்கை) ஆகியோரின் பிரியமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம், (பெரிய கடவுள்) சிவக்கொழுந்து ஆகியோரின் மைத்துனியும்,

கனடாவில் வசிப்பவர்களான வசந்துராதேவி, சரோஜினிதேவி,  கணேசலிங்கம், கணேசானந்தம், மிதிலாதேவி, காலஞ்சென்ற கணேசகுமார், கணேசராஜா,  அம்பிகாதேவி ஆகியோரின் அன்புத் தாயாரும்

கனடாவில் வசிப்பவர்களான கந்தசாமி, கணேசதாசன், உமா, நிர்மலாதிகுமார், (ஆதி) மாலினி, மகாதேவி, (மைதிலி) மற்றும் சுகுமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்

கனடாவில் உள்ள பானுஜா, தர்சன், கவீன்தன், துவாரகன், கவுசல்ஜன், ஜோவிதன், சஹானா, பிரியந்தி, கௌவத்ரிகா, பவித்திரன், பிரணவ், நிதின், அஸ்வின் ,தனுஜன், பிந்துஜா, தர்னிக்கா, ஆகியோரின் அன்புப் பேத்தியும்

ஐஸ்விக்கா, ஆருசன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்படுகின்றனர்.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது

தகவல்
குடும்பத்தினர்

Funeral Home:
4275, boul. des Sources
Dollard-des-Ormeaux, Quebec
H9B 2A6 
 
Viewing will be held on Saturday
April 16th, 2016. 5:00pm-9:00pm
 

சனிக்கிழமை சித்திரை 16, 2016.
பி.ப. 5:00 மணி – பி.ப.9:00 மணி பார்வைக்கு வைக்கப்படும்

Cremation will be held on Sunday
April 17th, 2016. 9:00am-1:00pm
 

இறுதிச் சடங்குகள் மற்றும் தகனம்
சித்திரை 17, 2016 மு.ப.9:00 மணி – பி.ப. 1.00 மணி

Contact Numbers:
Ganesh (son): (514) 516-3415
Ananthan (son): (514) 620-6092
Methyl (daughter): (514) 924-4784
Saro (daughter): (514) 696-6003
Ambika (daughter): (514) 747-7989
Rajan (son): (514) 829-7326

புகைத்தலும் பகைத்தலும்

 

images (1)

எம் வாழ்வில் எவை எல்லாம் இன்பமானவையோ அவையெல்லாம் துன்பமானவை. இதற்கு அடிப்படைக்காரணம் எந்த ஒரு வினைக்கும்  எதிர் வினை உண்டு என்பதே. நிலத்தினைத் தோண்டினால் அந்தப் பள்ளததற்கு  சமனான ஒரு மேடு  வெட்டிய மண்மூலம்  உருவாகிவிடுகின்றது.  ஊரிலி சொல்வார்களே  இன்று நன்றாக சிரிக்கிறோம்  நன்றாக அழப்போகிறோமோ தெரியவில்லை என்று. இனிப்பான  சர்க்கரை வியாதிக்கு கசப்பான பாகற்காய்தானே  மருந்தாகிறது. அவ்வாறு எந்த உணவு எல்லாம் ருசியாக இருக்கிறதோ அனேகமாக அவை உடலுக்கு தீங்காகத்தான் அமைகிறது .இனிப்பை விடுங்கள். அசைவ உணவில்  இறால், நண்டு ,கணவாய் போன்றன  ருசியாக இருக்கின்ன. அவை கிரந்தி உணவானவை என்று கூறுகிறார்களே.

வாயைக்கட்டு வருத்தம் போய்விடும் என்பதும்   இதனால்தான். இந்த வாய் இருக்கிறதே  இது ஒரு விசித்திரமான  உறுப்பு . வாய் உள்ளேயும் அனுப்புகிறது,  வெளியேயும் அனுப்புகிறது .

உள்ளே போகும்  உணவு தீங்கு இல்லாதபோது உடலுக்கு ஆபத்தில்லை  வெளியே வரும் வார்த்தைகள் இனியவையாக இருந்துவிட்டால்  அவையுவும் உடலுக்கு ஆபத்தில்லை  இந்தப் பெரிய உடலுக்கு ஏன் வாய் சிறிதாக உள்ளது தெரியுமா?  சிறிதாக உண்ணுங்கள் என்பதற்காகவே.  இரண்டு செவியை  வைத்தபோதும் ஏன் ஒரு வாயை ஆண்டவன் வைத்தான் தெரியுமா,  குறைவாகப் பேசுங்கள் என்பதற்காகவே. தேவையிலாதைப் பேசி  பல்லுடைபட்டவர்களை  நாம் காணதானே செய்கின்றோம் .இதிலே வேடிக்கை என்னவென்றால் எய்தவன் இருக்க அம்பை நோந்தது போல்  பேசியது வாய், அடிவாங்கியது பல் என்பதுதான்..

தண்ணியும் தண்ணீரும்  என்று நான் எழுதிய ஒரு கட்டுரையில்  மதுவின் கெடுதியைப்பற்றிக் கூறியிருந்தேன். அது திரவ வடிவில் எம்மை சுடலைக்கு அனுப்புகின்றது  புகைத்தல் வாயு வடிவில் எம்மை வழி அனுப்பிவைக்கிறது.

புகைதல் பழக்கத்தை யார் பழக்கிவிட்டுப்  போனானோ தெரியவில்லை. புகைப்பவர் அனைவரயுமே தமக்குத்தாமே கொள்ளி வைக்க பழக்கி விட்டுப் போய்விட்டான்.

சிகரட்டுக்கு தீ பற்ற வைக்கும்போது அது அதற்கல்ல, தமக்குத்தான் என்பதனை அவர்கள்  எண்ணுவதில்லை .

புகைத்தல் பழக்கம் புற்று நோய், கசம் கண்பார்வை இழப்பு போன்ற நோய்களை கைதட்டி அழைகிறது நீங்கள் புகை பிடிக்க்காவிட்டாலும் புகைப்பவர்களுக்கு பக்கத்தில் இருத்தலும் அதன் பாதிப்பு உங்களுக்கு ஏற்படும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

சிகரட் பாக்கெட்டில் அதன்பாதிப்பு பற்றி கூறியிருத்தாலும் பாவிப்போர் அதைப் பற்றிக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. கெடுகுடி சொற்கேளாது,    சாகிறவன் மருந்துகுடியான் என்று  சும்மாவா சொன்னார்கள்?

சமுதாயம் ஏங்கே போகிறது?

பிறரைப் பகைப்பவன் சமுதாயத்தில் தன்னத்தானே கெடுத்துக்கொள்கின்றான்..
புகைப்பவன் தன்னைத்தானே கெடுத்துக்கொள்கின்றான்
பகைப்பவன் சுடலைகுப் பக்கதே குடியிருக்கின்றான்.
புகைபவன் சுடலையிலேயே குடியிருக்கின்றான்.

வேறென்ன சொல்ல?

 

பொன் கதவேல்

31.3.2016

 

திரு. கைலாயபிள்ளை குகநாதன்

2016_kuganathan

குகநாதன் கைலாயபிள்ளை மலர்வு 28.8.1958 மறைவு 05.04.2016

துயர் பகிர்வோம்.

இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திரு. கைலாயபிள்ளை குகநாதன் 05.04.2016 அன்று இடைகாட்டில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கைலாயபிள்ளை குழந்தயார் ஆகியோரின் அன்பு மகனும் குகநேசன், குகதாசன், குகமலர், குகப்பிரியை ஆகியோரின் அன்புச் சகோதரனும் பகவதி, சுபாசினி, ராதா கிருஸ்ணமூர்த்தி, சிவேந்திரன் ஆகியோரின் மைத்துனரும், செளமியா, சாருகன், நிலானி, நர்த்தனன், ஆகியோரின் மாமனாரும் கோபிகா, ஆருணன் ஆகியோரின் சிற்றப்பாவும் ரிசிகர், சுரபி ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-04-2016 அன்று இடைகாட்டில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது

தவகல்
குகமலர் – 01194 777170641
குகநேசன் – 514 6207776
குகதாசன் – 514 6962057
குகப்பிரியை – 905 7120593