பிடிவாதம்
சங்கரப்பிள்ளை
வெங்காயம் விற்க
சந்தைக்குப் போனார்
வெங்காயம் இன்றைக்கு
நல்ல சூடாம்
சங்கரப்பிள்ளைக்கு
ஒரே புழுகம்
நேற்றைய நட்டத்தை
எடுக்க வேணும்
வியாபாரிகளிடையே
நல்ல போட்டி
சொன்னால் சொன்னதுதான்
ஐந்து சதமும்
குறையமாட்டேன்
நேரம் ஆக ஆக
சனமும் போய்
சந்தையும் கலைந்து
சங்கரப்பிள்ளை
தனியே நின்றார்
கடைசி வியாபாரிக்கே
கேட்ட விலைக்கே
அதுவும்
கடனாய்க் கொடுத்து
அழுதபடியே
சங்கரப்பிள்ளை
வீட்டே வந்தார்
17.5.2016