Articles for 2017
இ.ம.வி பழைய மாணவர் சங்க கனடா கிளையின் ஒன்றுகூடல் -2017
கனடா கிளையின் ஒன்றுகூடல் -2017 படங்களை பார்க்க,
Please click below link
https://drive.google.com/drive/folders/1RRIXDB1ep1ceW0wiRoDH6TpxaUGaiAGh
C.C.E (A/L) Examination 2017
NAME |
ADDRESS | STREAM | RESULT | DISTRICT RANK |
ISLAND RANK |
T.Latani |
Idaikkadu |
Maths | 3A | 3 |
21 |
K.Thuvaragan |
Idaikkadu |
Maths | 2BC | 247 |
4334 |
S.Kuyinsa |
Thoppu |
Biology | A2B | 111 |
2442 |
T.Sangeetha |
Atchuvely |
Biology | 2CS | 511 |
15976 |
K.Vajeetharan |
Navatkiri |
Commerce | 3A | 86 |
3841 |
S.Mathivathanan |
Valalai |
Commerce | 3B | 175 |
8229 |
P.Thilaksan |
Kathiripai |
Commerce | 2CS | 639 |
27888 |
R.Thenuja |
Idaikkadu |
Arts | 3A | 13 |
304 |
S.Kamsini |
Idaikkadu |
Arts | A2B | 157 |
6440 |
V.Nilaksana |
Idaikkadu |
Arts | 2BC | 280 |
11478 |
T.Vinojini |
Valalai |
Arts | B2C | 919 |
33925 |
J.Tharansiga |
Valalai |
Arts | B2C | 986 |
36103 |
OSA-J-IMV
வருடாந்த பொதுக்கூட்டம் 30.12.2017
இடைக்காடு பழைய மாணவர் சங்கம் – கனடாவின் வருடாந்த நிர்வாகசபை பொதுக்கூட்டம் 3:00 P.M. மணியளவில் கனடா பெரிய சிவன் ஆலயத்தில் நடைபெற தீர்மானிக்கப்பட்டுள்ளது . அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். Date – 30/12/2017 (Saturday) Time – 3:00 P.M. Place – 1148 Bellamy Rd N, Scarborough, ON M1H 1H2.
நன்றி,
நிர்வாகக்குழு!
அமரர் சி.நா.சுப்பிரமணியம் ஞாபகார்த்தபுலமைப்பரிசில் நிதியம் – பழையமாணவர் சங்கம் – J-IMV
நினைவில் அகலா நன்றிகள்.
நினைவில் அகலா நன்றிகள்.
தந்தையாய் வழிகாட்டியாய் வீரத்தின் உருவமாய் அல்லும் பகலும் அயராமல் எம்மை நேரிய வழியில் வாழ்வியலில் வழிகாட்டியாய் விளங்கிய ஆருயிர்த் தந்தை சி.நா.சுப்ரமணியம் அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு எம்மை தேற்றி ஆறுதல் படுத்திய உற்றார் , உறவினர்,நண்பர்கள், அனைவர்க்கும் நேரிடையாகவும், தொலைபேசியூடாகவும்,சமூக வலைத்தளங்களினூடாகவும் துயரத்தில் பங்கெடுத்துக் கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டவர்களுக்கும் ,மலர் வளையங்கள் வைத்தவர்களுக்கும் , மலர் தூவி அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், அஞ்சலி உரை வழங்கியவர்களுக்கும், மருத்துவர்கள்,தாதிமார்களுக்கும் இறுதி வழிஅனுப்பும் கிரியைகளை நேர்த்தியுடன் செய்தவர்களுக்கும், இன்றைய 31 ம் நாள் சாந்தி பிரார்த்தனைகளில் கலந்து கொண்டவர்களுக்கும் ,மற்றும் நாம் குறிப்பிட மறந்த பல வழிகளிலும் எமக்கு உதவிய அன்பு நெஞ்சங்களுக்கும் பணிவுடன் நன்றி நவில்கின்றோம்.
அப்பாவின் இனிய நினைவுகளோடு,
மனைவி
பிள்ளை
அமரர் சி.நா.சுப்பிரமணியம் ஞாபகார்த்தபுலமைப்பரிசில் நிதியம்
இடைக்காட்டை பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் சின்னதம்பி நாகமுத்து சுப்பிரமணியம் ஞாபகார்த்தமாக, அன்னாரது குடுப்பத்தினரால் “அமரர் சி.நா.சுப்பிரமணியம் ஞாபகார்த்த புலமைப்பரிசில் நிதியம்” 19.12.2017 அன்று தாபிக்கப்பட்டுள்ளது. மேற்படி நிதியமானது யா/இடைக்காடு மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கத்தினால் நிர்வகிக்கப்பட்டுவருகின்றது.
ஆரம்பநிதி : ரூபா500,000.00 (ரூபா. ஐந்நூறு ஆயிரம்)
முதன்மை நோக்கம் : மாணவர்களின் விளையாட்டு செயற்றிறனை ஊக்கப்படுத்தல்
அமரர் சி.நா.சுப்பிரமணியம் அவர்கள் தனது கல்வியை 1934ம் ஆண்டு தொடக்கம் 1944 வரை இடைக்காடு புவனேஸ்வரி வித்தியாலயத்திலும் 1944ம் ஆண்டு தொடக்கம் 1946 வரை புத்தூர் சோமஸ்கந்த கல்லூரியிலும் கல்வி பயின்றார். இவர் கல்வி பயிலும் இறுதிக்காலங்களில் விளையாட்டுகளில் ஈடுபாட்டினை கொண்டிருந்தார். மேலும் இவர் 1966-1967 மற்றும் 1967-1968 காலப்பகுதியில் எமது சங்கத்தின் செயலாளராக கடமை ஆற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பழையமாணவர் சங்கம் – J-IMV
இடைக்காடு பழையமாணவர் சங்கம், கனடா- மாரிகால ஒன்றுகூடல்- 2017
இடைக்காடு பழையமாணவர் சங்கம், கனடா- மாரிகால ஒன்றுகூடல்- 2017
இவ் வருடத்திற்கான குளிர்கால ஒன்று கூடல் 25.12.2017 அன்று பிற்பகல் 4.00 p .m. மணிக்கு ஆரம்பமாகி நள்ளிரவு 12 மணிவரையும் நடைபெறும். எமது சிறார்கள் முதல் முதியோர் வரை கலை நிகழ்ச்சிகளை குதூகலமாக வழங்க இருக்கிறார்கள். அன்றைய தினம் அனைவரும் உங்கள் நேரங்களை ஒதுக்கி இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு வேண்டுகின்றோம்.
மண் வாசம் – 2017
போட்டி வினாக்கள் கீழ் காணப்படும் விடயங்களில் எடுக்கப்படும் :
1) வெள்ளி விழா மலர் -2016
2) இத்தி மலர் -2013
3) பாடசாலை சார்ந்தவை
4) எமது கிராமம் சார்ந்தவை
5) இலக்கியம் சார்ந்தவை
6) ஆன்மிகம் சார்ந்தவை
7) விவசாயம் சார்ந்தவை
8) பொது அறிவு
9) முது மொழிகள்
10) ஊர் நிகழ்வுகள்
இடைவேளைக்குப் பின் வினாக்கொத்து வழங்கப்பட்டு விடைகள் 10:30 மணிக்கு கையளிக்கப்பட வேண்டும்.
இடம் : St. Peter & Paul Banquet Hall 231 Milner Ave Scarborough, ON M1S 5E3
நேரம்: 4 p.m.
கட்டணம்: தனி நபர் $20
முதியவர் (தனி ) $20
குடும்பம் $60
குளிர்கால ஒன்று கூடலின் போது volunteer work செய்ய விரும்பும் மாணவர்கள் தங்கள் பெயர்களை செயற்குழுவிடம் முன்பதிவு செய்யுமாறு வேண்டிக்கொள்ளப்படுகிறீர்கள். தங்கள் பதிவுகளை December 16 ம் திகதிக்கு முதல் மேற்கொள்லாம். மேலும் 2017 ஆம் ஆண்டின் செயற்குழுவின் பதவிக்காலாம் முடிவடைவதால் 2018 ம் ஆண்டிற்கான புதிய செயற்குழு அன்றே தெரிவு செய்யப்படும்.
அனைவரையும் ஒத்துழைக்கும் வண்ணம் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
அன்புடன்,
செயற்குழு உறுப்பினர்கள்
திரு இரத்தினசபாபதி வைரமுத்து
துயர் பகிர்வோம்
திரு இரத்தினசபாபதி வைரமுத்து அவர்கள்
மண்ணில்:
விண்ணில்: நவம்பர் 30 2017
வளலாய் அச்சுவேலியை பிறப்பிடமாகவும் மொன்றியோல் கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு இரத்தினசபாபதி வைரமுத்து (சின்னக்கடவுள்) அவர்கள் இன்று வியாழக்கிழமை (நவம்பர் 30 2017) சிவபதம் அடைந்தார்.
காலஞ்சென்ற திருமதி நாகரத்தினம் இரத்தினசபாபதி அவர்களின் அன்புக் கணவனும்,
காலம் சென்றவர்களான வைரமுத்து செல்லாச்சிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும், முத்துலிங்கம் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் பிரியமான மருகனும்,
காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம், (பெரிய கடவுள்) சிவக்கொழுந்து ஆகியோரின் சகோதரரும்,
காலஞ்சென்ற இராசதுரை, நேசரத்தினம், (அவுஸ்திரேலியா) அன்னரத்தினம், (அவுஸ்திரேலியா) காலஞ்சென்ற குணரத்தினம், செல்வரத்தினம், (அவுஸ்திரேலியா) தங்கரத்தினம் (இலங்கை) ஆகியோரின் பிரியமிகு மைத்துனரும்,
கனடாவில் வசிப்பவர்களான வசந்துராதேவி, சரோஜினிதேவி, கணேசலிங்கம், கணேசானந்தம், மிதிலாதேவி, காலஞ்சென்ற கணேசகுமார், கணேசராஜா, அம்பிகாதேவி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கனடாவில் வசிப்பவர்களான கந்தசாமி, கணேசதாசன், உமா, நிர்மலாதிகுமார், (ஆதி) மாலினி, மகாதேவி, (மைதிலி) மற்றும் சுகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்
கனடாவில் உள்ள பானுஜா, தர்சன், கவீன்தன், துவாரகன், கவுசல்ஜன், ஜோவிதன், சஹானா, பிரியந்தி, கௌவத்ரிகா, பவித்திரன், பிரணவ், நிதின், அஸ்வின் ,தனுஜன், பிந்துஜா, தர்னிக்கா, ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஐஸ்விக்கா, ஆருசன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்படுகின்றனர்.
அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது
தகவல்
குடும்பத்தினர்