பிடிப்பதற்கு காரணம் இருந்தும்,
பிடிக்காமல் போகிறது சிலரை.
வெறுப்பதற்கு காரணம் இருந்தும்,
வெறுக்க முடியவில்லை சிலரை.
காதலின் அன்பை ,
சொல்லிப் புரிய,
வைக்க முடியாது.
உன்னால் மட்டுமே — அதை
உணரமுடியும்.
பிடிப்பதற்கு காரணம் இருந்தும்,
பிடிக்காமல் போகிறது சிலரை.
வெறுப்பதற்கு காரணம் இருந்தும்,
வெறுக்க முடியவில்லை சிலரை.
காதலின் அன்பை ,
சொல்லிப் புரிய,
வைக்க முடியாது.
உன்னால் மட்டுமே — அதை
உணரமுடியும்.
ஓ…….எனதருமை
அறுபத்தேழுகளே!
நீங்கள் இன்னமும்
இளைஞர்களே…..
உங்களுக்குத் தெரியுமா,
இளமைக்கும் முதுமைக்கும்
எது எல்லைக்கோடு?
Continues here… Page 1
50 ஐத் தொட்ட 67
இடைக்காடு பழைய மாணவர் சங்க கனடா கிளையின் கோடை கால ஒன்று கூடல் -2017
எமது 2017ம் ஆண்டிற்கான கோடைகால ஒன்று கூடல், ஆவணி மாதம் 26ம் திகதி அன்று, 5555 Steeles Ave E, Toronto, ON M9L 1S7 ல் அமைந்துள்ள Milliken District Park – Picnic Area B ல் நடை பெறும் என அறியத் தருகிறோம்.
நிகழ்ச்சி நிரல், கட்டணம் பற்றிய விபரம் பின்னர் அறிய தரப்படும்.
நன்றி!
செயற்குழு
IMV-OSA Canada
துயர் பகிர்வோம்
திரு ஆறுமுகம் திருநாவுக்கரசு
(ஓய்வுபெற்ற தபால் அதிபர்)
பிறப்பு : 25 சனவரி 1926 — இறப்பு : 1 பெப்ரவரி 2017
அன்னார், ஆறுமுகம் அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற லீலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
சசிகலா, சத்தியகலா, சசிதரன், விஜயகலா, கலா, சத்தியேந்திரா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பகீரதன், ஆனந்தராஜன், இந்திராணி, சோமஸ்கந்தா, மகேஸ்வரன், சிராணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான நல்லம்மா, நடராஜா, சோமசுந்தரம், சின்னப்பு, கந்தமணி, மற்றும் சின்னம்மா, சரஸ்வதி, இலக்குமி, தெய்வநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மாணிகவாசகர், காலஞ்சென்றவர்களான முத்தம்மா, திருஞானபூங்கோதை, பத்மநாதன், இராஜரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரணவி, சங்கவி, பிரகாஷ், பிரஷாந்தன், சதீஷன், கிரிஷான், துவாரகா, தினேஷன், அரவிந்தன், றவீந், மாதங்கிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது
தனித்துவமான தன்னிகரில்லா ஆங்கில ஆசான் அமரர் அரியராசா இராசகோபால்
உலகில் இரு வகையான கல்விமான்கள் உள்ளனர். ஒருவகையினர் தமது கல்வியறிவால் தம்மைத்தாமே உயர்த்திக்கொள்கின்றனர். மற்ற வகையினர் தமது கல்வி அறிவால் மற்றவர்களை, சமுதாயத்தினை கல்விமான்களாய் ஆக்கிவிடுகின்றனர். அவர்கள் கல்வியறிவை வாரி வழங்கும் வள்ளல்கள். அவர்கள் கரங்கள் வரண்டுபோகலாம்., மனம் வரண்டுவிடுவதில்லை. மூளை வரண்டுவிடுவதில்லை. தாம் உள்வாங்கிய கல்வியறிவை நெஞ்சில் நிரப்பி வற்றாத ஊராக தன் வித்தையை விநியோகம் செய்யும் உத்தம சீலர்க்ள்.
இத்தனை தகுதிகளையும் தன்னகத்தே கொண்டு ஒளிவிளக்காய் திகழ்ந்தவர் வேறுயாருமல்ல, திறமையான ஆங்கில ஆசியராக தான் பிறந்த வளலாய் மண்ணுக்குப் பெருமை சேர்த்த அமரர் இராசகோபால் அவர்களே.
1972ல் ஒருவருடகாலம் அவரிடம் ஆங்கிலம் கற்கும் பாக்கியம் எனக்குக்கிடைத்தது. நான் பத்து ஆண்டுகள் பாடசாலையில் கல்விகற்றும் என்மூளைக்கு ஏறாத ஆங்கிலக்கல்வியை என்னமாய் புரிய வைத்தார். அவரின் ஆங்கில அறிவையும், அரிய குணாதிசயங்களையும் கண்டு நான் வியப்பதுண்டு. நான் ஆங்கிலத்தில் ஏதோ நாலு வார்த்தை எழுத வாசிக்கத் தெரியுமென்றால் அது அப்போது அவர் எனக்கு ஊட்டிய ஆங்கிலப் பால்தான் காரணம்.
தமது கல்விஅறிவின் ஒவ்வொரு சொல்லையும் விற்றுக்காசாக்க நினைக்கும் இந்தக்காலத்தில், ஒரு கல்விவள்ளலாகத் திகழ்ந்து தன் வாழ்க்கைக் காலத்தை புனித பணியுடன் நிறைவு செய்துள்ளார்.
அவர் ஆன்மா என்றும் இன்புறுவதாக.
நன்றியுடன்,
பொன். கந்தவேல்
கனடா- 647 702 7346