Articles for April 2017

திரு. நாகமுத்து அருளானந்தம்

துயர் பகிர்வோம்

Thipam

இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அருளானந்தம் அவர்கள் இன்று 22-04-2017 சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற நாகமுத்து(ஆசிரியர்) – சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான சின்னையா- நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் காலஞ்சென்ற பொன்னம்மாவின் அன்புக்கணவரும், புஷ்பராணி, ஜெயராணி (ஆசிரியை சுண்டிக்குளி மகளிர் கல்லூரி) ஆகியோரின் அன்புச் சகோதரரும் அருள்ரூபன், காலஞ்சென்ற பாமதி, கருணா, சுகுணா(UK) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும் சுகன்யா, தர்மரத்தினம், உதயச்சந்திரன்(UK) ஆகியோரின் அன்பு மாமனாரும் சதுர்சிகா, விதுசா ஆகியோரின் அன்பு பேரனும் ராஜேஸ்வரி, ஆறுமுகதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் இடைக்காட்டில் உள்ள அவர்களது இல்லத்தில் ஈமக்கிரியைகள் செய்யப்பட்டு சாமித்திடல் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது

தகவல்
திருமதி சுகுணா உதயச்சந்திரன் (UK) 0203 5389603 / 07507529018
திரு அருள்ரூபன்(இடைக்காடு) 0094 779353353