Articles for August 2018

2018 ம் ஆண்டிற்கான 3வது பொதுக்கூட்டம் – கனடா

September மாதம் 9ம் திகதி பிற்பகல் 4 மணி அளவில் தலைவர் பொன்னீஸ்வரன் இல்லத்தில் (4 Ritz garden court, Scarborough) நடப்பு வருடத்திற்கான பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் முடிவடைந்த கோடைகால ஒன்றுகூடல் பற்றியும் நடைபெற உள்ள குளிர்கால ஒன்றுகூடல் பற்றியும் கலந்துரையாட உள்ளதால் அங்கத்துவ உறுப்பினர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி
செயலாளர்
ப.சிவரூபன்

திருமதி பத்மலோசினிதேவி மகேசன்

2018_makesan

துயர் பகிர்வோம்

 

திருமதி பத்மலோசினிதேவி மகேசன்
இடைக்காடு, அச்சுவேலி
இடைக்காடு அச்சுவேலியைச் சேர்ந்த திரு இளையதம்பி மகேசன்(ஓய்வு நிலை பொறியியலாளர், சீமெந்து கூட்டுத்தாபனம்) அவர்களின் பாசமிகு மனைவி பத்மலோசினிதேவி 27.08.2018 அன்று காலமானார்.அவர் அமரர்கள் பண்டிதர் சின்னத்துரை பாக்கியம் தம்பதிகளின் மகளும் அமரர்கள் இளையதம்பி செல்லம்மா தம்பதிகளின் மருமகளும் வாசவன் (அவுஸ்திரேலியா) மகிபன் (கனடா) ரமேஸ் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும் யசோதா, கல்பனா, தர்சிகா ஆகியோரின் அன்பு மாமியும் ஜனனி, கண்ணன், அபிஷேக்,அர்ஜீன், அனோக்ஷா,தர்சிகா, அபிராமி ஆகியோரின் அன்புப் பாட்டியுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30.08.2018 வியாழக்கிழமை மு.ப 10.00 மணியளவில் அவர்களின் இல்லத்தில் நடைபெற்று தகனக்கிரியைகளுக்காக இடைக்காடு சாமித்திடல் மயானத்திற்கு எடுத்துச ;செல்லப்படும.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது

தகவல்
இ.மகேசன்
கணவர்
தொ.பே 0212231637

திரு ஐயாத்துரை சிவநிதி (குட்டி)

Mr Iyathurai Sivanithiதுயர் பகிர்வோம்

திரு ஐயாத்துரை சிவநிதி (குட்டி)

2016_gh

தோற்றம் 01 யூன் 1963
மறைவு 13 ஆகஸ்ட் 2018
யாழ்.இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஐயாத்துரை சிவநிதி (குட்டி) 13/08/2018 திங்கட்கிழமை (இன்று) காலை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற ஐயாத்துரை சின்னமணி தம்பதிகளின் அன்பு மகனும் கலைச்செல்வியின் பாசமிகு கணவரும் மதூரிகா, விந்துசன், நிகாரிகா மற்றும் டனுவின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வேல்முருகன்(அப்பு), கலாமாலினி, கிஸ்ணபவான் மற்றும் காலஞ்சென்ற சத்தியமூர்த்தி ஆகியோரின் அன்புச் சகோதரனும் கலைச்செல்வன், கலையரசன் மற்றும் நந்தகுமார் ஆகியோரின் மைத்துனருமாவார்.

அன்னாரின் ஈமைக் கிரியைகள்  அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக வளலாய் கூனங்காடு இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் அயலவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் குடும்பத்தினர்
தொடர்பு கொள்ள:-

வேல்முருகன்(அப்பு)  905 294 4707
+94771777505