வலயமட்ட வலைப்பந்தாட்டம் – 2019

IMG-594811612f26eed94a854e5af372506e-V

எமது பாடசாலையின் 18 வயதிற்குட்பட்ட வலைப்பந்தாட்ட அணியினர் வலய மட்ட இறுதிப்போட்டியில் யா/சுண்டுக்குளி மகளிர் கல்லூரியுடன் போட்டியிட்டு சமநிலையில் நிறைவு பெற்றது (21:21). பின்னர் மேலதிய நேரம் வழங்கப்பட்டு போட்டியில் எமது அணியினர் 4 : 2 எனும் விகிதத்தில் புள்ளிகளை பெற்று வெற்றியை தமதாக்கி வலயமட்ட சம்பியனாக தெரிவு செய்யப்பட்டனர். சென்ற வருடமும் எமது பாடசாலை அணியினரே வலய மட்ட சம்பியனாக தெரிவுசெய்யப்படமை குறிப்பிடத்தக்கது.

இவ் அனைத்து வெற்றிக்கும் வழிவகுத்த எமது பாடசாலை அதிபர், ஆசிரியர் குழாம் மற்றும் மாணவர்கட்கு எமது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

OSA-J-IMV

Olympiad 2019 ( Grade 6)

Science

யாழ் வலயமட்டத்தில் நடாத்தப்பட்ட விஞ்ஞான பாட ஒலிம்பியாட் போட்டியில் தேசிய பாடசாலைகளான வேம்படி மகளிர் கல்லூரி மற்றும் யாழ் இத்துக்கல்லூரி மாணவர்களிற்கு அடுத்ததாக எமது பாடசாலையின் பின்வரும் இரு மாணவர்களும் சிறந்த பெறுபேற்றைப் பெற்றனர்.

  • நகுலன் வித்தகி
  • மதிவண்ணன் யாழவன்

 

Maths

யாழ் வலயத்தால் நடாத்தப்பட்ட கணிதபாட ஒலிம்பியாட் போட்டியில் தெரிவு செய்யப்பட்ட எமது பாடசாலை மாணவர் விபரம்:

  • தீலீபன் கீர்த்திகன்
  • மதிவண்ணன் யாழவன்

OSA-J/IMV

Puthandu

tamnewyea

THANK YOU

THANK YOU

In this difficult time on behalf of our family, we would like to thank all those who came to our home, funeral and called to convey their kind condolences.  Appreciate sharing the notice on the website, your global reach enabled the timely transfer of details.  Thank you again to the administrators of this site.

2016_ghBy : Nagulan 

இ.ம.வி ப.மா.ச கனடா – கோடைகால ஒன்று கூடல் – 2019

logo-mapleleaf

இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க கனடா கிளையினர் வருடா வருடம் நடாத்துகின்ற கோடைகால ஒன்று கூடல் இம்முறையும் 2019ம் ஆண்டு வருகிற ஆடி மாதம் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை (Sunday July 21st) நீல்சன்பூங்காவில் (Nelson Park) நடைபெறுவதற்கான முன்பதிவுகள் திட்டமிட்டபடி நடைபெற்றது . வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கும் மற்றும் இங்குள்ளவர்களின் வேலை மற்றும் தமது குடும்ப நிகழ்வுகளை இந்தநாளை தவிர்த்து ஒழுங்கு செய்ய வசதியாக நாம் முன்கூட்டியே அறியத்தருகின்றோம்.

நன்றி.

செயற்குழு!

 

அனைத்து எம் உறவுகளுக்கு,

அனைத்து எம் உறவுகளுக்கு,

இடைக்காடு கலைமகள் சனசமூக நிலையத்தினரின் உதவி கோரல்.

இந் நிலையமானது பல சகாப்தங்களாக பல இடையூறுகளுக்கு மத்தியில் இயங்கிவரும் வேளையில்

தற்போதைய சூழ்நிலையில் சில வேலைகளை நாம் பூர்த்தி செய்ய வேண்டியுள்ளதால் அங்கத்தவர்கள்,நலன்விரும்பிகள் தங்களால் ஆன உதவிகளை வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

நன்றி

தற்போது நாம் மேற்கொண்டுள்ள விடயங்களின் விபரங்களை கீழே தருகின்றோம்.

Open link below to view letters:

https://drive.google.com/drive/folders/1EofjRpd8T8goPnBCyLcmQZi_RDphgTEQ?usp=sharing

மேலேஉள்ள ஏதாவது ஒன்று உங்கள் கைகளில் கிடைத்துவிட்டதா ?

 

ticket-new

எமது குளிர்கால ஒன்றுகூடலுக்கு இன்னும் சொற்பநாட்களே உள்ளன. ஒழுங்குகள் யாவும் பூர்த்தியாகிவிட்டது இன்னும் ஏன் தாமதம் ? உங்களுக்கான நுழைவுச்சீட்டுக்களை பெற்றுக்கொண்டு உங்கள் வரவை உறுதிப்படுத்துவதன் மூலம் கடைசி நேர தடங்கல்களை தவிர்த்துக்கொள்ளுங்கள். எவ்வகை பனிமழை பொழியினும் எமது கோடைகால ஒன்றுகூடல் போன்றே இதுவும் நடந்தேதீரும் என்கிறார்கள் செயற்குழுவினர். மழலைகள் தாம் தமிழிலேபாடவும், ஆடவும் முடியுமென்கிறார்கள்  .சிறார்கள் விடுவார்களா என்ன தமது இசைக்கருவிகளை மீட்டுகிறார்கள் .  DJ இளைஞர்குழுவினர் தமது தயார்படுத்தலில் இம்முறையும் முன்னணியில் இருக்க மற்றும் அறிவிப்பாளர்களாக பல்கலைமாணவர்கள் மூவர் தோன்றுகிறார்கள். வயது வந்தவர்களும் தாமும் சளைத்தவர்கள் இல்லை என்கிறார்கள். .சிறப்புவிருந்தினர்களோ ஏற்கனவே கனடாவந்து தாம் ஊரிலேபார்க்காத ஒன்றுகூடலா!!! என்ன!!! என எண்ணி முகாமிட்டிருக்கிறார்கள்.

வழமைபோல் தெரிந்த மண்டபம், விசாலமான வாகனதரிப்பிடவசதி, நெடுச்சாலைக்கு அண்மையாக, எல்லோருக்கும் இலகுவில் வரக்கூடிய குறைந்த தொலைவில் அமைந்திருக்கிறது. .வாருங்கள். வந்து நிகழ்ச்சிகளை கண்டுகளியுங்கள் உண்டுமகிழுங்கள். கூடி குதூகலியுங்கள். இது நிகழ்ச்சிகள் மட்டுமல்ல மறந்துவிடாதீர்கள். .எம் வருங்கால சந்ததிக்கான மேடை அமைத்து கொடுத்து அவர்களின் ஆக்கங்களை ஊக்கப்படுத்துங்கள். அவர்களே உங்களின் பலமான சொத்து .

ஒருநாளாவது வேலைக்கு ஓய்வுகொடுங்கள் மக்காள். நண்பர்கள் உறவினர்கள் ஊரவர்கள் யார் என்பதை ஒருமுறை முழங்குங்கள். ஒருநாளாவது உங்கள் மணித்தியாலங்களை நண்பர்கள், சகமாணவர்களுடன் , உறவுகளுடன் செலவிடுங்கள். நம் பிள்ளைகளுக்கோர் ஓர் உறவுப்பாலத்தை ஏற்படுத்துங்கள் .

நன்றி

என்றும் உங்களை வாஞ்சையுடன் காத்திருக்கும் செயற்குழுவினர்.

குறிப்பு :அச்சிடப்பட்ட அநேகமான நுழைவுச்சீட்டுக்கள் விற்பனையாகி விட்டதனால் இன்னமும் தமது நுழைவுசீட்டுக்களை பெறாதவர்கள் அருகில் உள்ள பின்வரும் அங்கத்தவர்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். வருவோரின் எண்ணிக்கையை பொறுத்து மேலும் அச்சிடுவதற்கு வசதியாக இருக்கும்.

சத்தியா உதயன் : 416 724 7471

கிளி காசி               :416 289 1673

லோஜி சேகர்        :905 940 2454

செல்வராஜ்           :416 525 4548

ரூபன்                     :647 981 3136