Iஇடைக்காடு பழையமாணவர் சங்கம் , கனடா பொதுக்கூட்ட அறிக்கை 03.1.2015

imv2015

இடைக்காடு பழையமாணவர் சங்கம் கனடாக் கிளையின்  பொதுக்கூட்டம் 03.1.2015 அன்று காலை 10.00 மணியளவில் தலைவர் திரு பொ. கந்தவேல் தலைமையில் கனடா செல்வச்சன்னதி கோவில் மண்டபத்தில் ஆரம்பமானது.

தலைவர் தனது வரவேற்புரையில் வருகைதந்த அனைவர்க்கும் நன்றியையும் புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டு கூட்டத்தை தொடக்கிவைத்தார். அவர் மேலும் தனதுரையில் கடந்த 2014 ம் ஆண்டில் சங்கத்தினால் நடாத்தப்பட்ட கோடைகால, மாரிகால  ஒன்றுகூடலை சிறப்புற நடாத்த உதவிய அனைவர்க்கும் செயற்குழு சார்பில் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதுடன் எதிர்காலத்திலும் சங்கத்தின் செயற்பாடுகள் சிறப்புற நடாத்துவதற்கு அனைவரதும் ஒத்துழைப்பை வேண்டிநின்றார்.

மேலும் அவர் தனதுரையில் கடந்தவருடம் 29.12.2013 அன்றுகூடிய பொதுக்கூட்டத்தில் புதிய செயற்குழுவினை தெரிவுசெய்ததுடன் ஏற்கனவே நடைமுறையிலுள்ள சங்கயாப்பு பொதுச்சபையினால் அங்கீகரிக்கப்படாமையினால் அங்கத்தவர்களின் ஆலோசனை தேவைப்படுமிடத்து வேண்டிய திருத்தங்களுடன்  பொதுச்சபையில் அங்கீகாரத்தைப் பெற தீர்மானிக்கப்பட்டதாகவும் அதன்படி 23.3.2014 அன்று விசேட பொதுக்கூட்டம் கூட்டுவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.  அன்றைய பொதுச்சபைக்கூட்டத்தில்  வேண்டிய திருத்தங்கள் சபையினரால் முன்மொழியப்பட்டு யாப்பினை இணையத்தில் வெளியிட்டு கூட்டத்தில் பங்குபற்றாத அங்கத்தவர்களின் அபிப்பிராயத்தை  ஒரு மாதகாலத்திற்குள் எழுத்து மூலம் பெறுவதென்றும் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி அபிப்பிராயங்கள் ஏதும் கிடைக்காமையினால் இப்பொதுச்சபையில் அதனை ஏற்றுக்கொள்வதாக முன்மொழியப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.

பின்னர் செயலாளர் அறிக்கை, பொருளாளர் அறிக்கை என்பன சமர்ப்பிக்கப்பட்டு சபையினரால் அனுமதிக்கப்பட்டது. இதன்போது 2013ம் ஆண்டின் செயற்குழுவினால் எமது பாடசாலைக்கு கடனடிப்படையில் வழங்கப்பட்ட ரூபா 13,000,000 (பதின்மூன்று லட்சம்) இன்னமும் எமது சொத்தாக கணிக்கப்படவேண்டும் என சபையோர் தெரிவித்ததனால் அதனை பொருளாளரின்  கணக்கறிக்கையில் குறிப்பிடப்படல்வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

பின்னர் புதிய செயற்குழு தெரிவுசெய்யப்பட்டது. அதன்படி பின்வருவோர் ஏகமனதாகத்தெரிவு செய்யப்பட்டனர்.

தலைவர்  – திரு. வே. இளங்கோ

உபதைவர்-  திரு பொ. கந்தவேல்

செயலாளர் – திரு நா. மகேசன்

உபசெயளாளர்- திரு ந. சிவகுமாரு

பொருளாளர்.   திரு. கி. புவனச்சந்திரன்

உபபொருளாளர். திரு இ. செல்வராஜ்.

பின்வருவோரும் செயற்குழு அங்கத்தினராகத் தெரிவுசெய்யப்பட்டனர்.

திரு சி. ரூபன்

திரு செ. கணேஸ்

திரு த. முருகன்

திரு க. கந்தையா

திரு. ந.சிவராசா

கூட்டத்தில் பங்குகொண்டு ஆலோசனை வழங்கிய  பேராசிரியர் சின்னத்தம்பி அண்மையில் தாயகம் திரும்பி சிலகாலம் அங்கு தங்கியிருக்க உள்ளதால் எமது சங்கத்தின் தாயக இணைப்பாளராக செயற்படுமாறும் 2016ம் ஆண்டு எமது சங்கத்தின் 25ஆவது ஆண்டு நிறைவின்போது வெளியிடவுள்ள ஆண்டுமலரினை சிறப்புற வெளியிடுவதற்கு ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப் பட்டார்.

இவ்வாண்டுக்கான கோடைகால ஒன்றுகூடல் யூலை 19 (19.07.2015) ஞாயிறு அன்று Scarborough நெல்சன் பூங்காவில் நடைபெறும் என்னும் மகிழ்வான அறிவித்தலுடன் கூட்டம் மதியம் 12.30 மணியளவில் இனிதே நிறைவேறியது.

 

ந. மகேசன் – செயலாளர்

05.1.2015.