IMG_2090

இ.ம.வி ப.மா.ச கனடா – கோடைகால ஒன்று கூடல் – 2018

இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க கனடா கிளையினர் வருடா வருடம் நடாத்துகின்ற கோடைகால ஒன்று கூடல் இம்முறையும் 2018ம் ஆண்டு வருகிற ஆடி மாதம் 22ம் திகதி ஞாயிற்றுக்கிழமை (Sunday July 22nd) அனைவரினதும் முதல் தெரிவான நீல்சன்பூங்காவில் (Nelson Park) நடைபெறுவதற்கான முன்பதிவுகள் திட்டமிட்டபடி நடைபெற்றது அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சி. .வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கும் மற்றும் இங்குள்ளவர்களின் வேலை மற்றும் தமது குடும்ப நிகழ்வுகளை இந்தநாளை தவிர்த்து ஒழுங்கு செய்ய வசதியாக நாம் முன்கூட்டியே அறியத்தருகின்றோம். குழந்தைகள் தொடக்கம் முதியோர் வரை விளையாட்டுக்கள், பொழுது போக்கு நிகழ்ச்சிகள் என பலநிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன. காலையுணவின்பின் உதைபந்தாட்டத்துடன் ஆரம்பமாகி மதிய இடைவேளைநிறைவில் சிறுவர்களுக்கான ஒட்டப்போட்டிகள் நடைபெறும். அதை அடுத்து சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் ,குடும்பத்தவர்க்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுடன் குறிப்பாக கயிறு இழுத்தல், விநோதஉடை,சாக்கோட்டம், மூன்றுகால் ஒட்டம், தண்ணீர்வாரி இறைத்தல் என்பனசில. மாலையில் சிற்றுண்டியுடன் தேநீரும் வீடுதிரும்புமுன் மேலும் விரும்பியவர்க்கு நெருப்பில் வேகவைத்த இறைச்சியுடன் இரவு உணவுவழங்கப்படும். அத்துடன் ஊரிலே உண்டுமகிழ்ந்த பலவிதமான உணவுவகைகளை உண்ணும் அரியசந்தர்ப்பமும் இதுவே. வெற்றியீட்டிய சிறார்களுக்கு வெற்றிகேடயங்கள் வழங்கப்பட்டு நிகழ்ச்சிகள் நிறைவுக்குவரும். இம்முறையும் எமதூர் உறவுகள் தம் குடும்பத்தாருடன் முழுமையான கோடைகால ஒன்றுகூடலை இன்புடன் அனுபவிக்க எமதுசெயற்குழு அன்புடன் அழைக்கின்றது. இந்த ஒன்றுகூடலை திறம்பட நடாத்திமுடிப்பதற்கு அனைவரின் பூரணஒத்துழைப்பையும் இன்றையசெயற்குழு வேண்டிநிற்கின்றது. வழமைபோல் காலநிலை எமக்குசாதகமாக இருக்கும் எனஎண்ணி அந்த ஒன்றுகூடலுக்கான எதிர்பார்ப்புடன் உங்கள் உதவியினை நாடிநிற்கும் இந்த ஆண்டிற்கான செயற்குழு.

நன்றி.

குறிப்பு :நிகழ்ச்சிகள் யாவும்குறித்த நேரத்தில் ஆரம்பமாகி குறித்த நேரத்திற்கு நிறைவுக்குவருவதனால் விரும்பியவர்கள் தமது நண்பர்களுடன் இருந்து அளவளாவி செல்வதற்கான சந்தர்ப்பமே அதிகம் உண்டு.