ஐம்பதை(50) கடந்து போகும் ஞாபகங்கள்………...

ஐந்து வயதில் ஆரம்பப்பள்ளியில்
அறிமுகமானோம் அத்தனை பேரும்
உள்ளூரில் கல்வி
அதுவே எங்கள் உலகம்
பள்ளிப் படிப்பு முடிந்ததும்
பாதைகள் மாறின
ஆயினும் வாழ்க்கைப்
பயணம் தொடர்ந்தது.
வெடியோசை
வானத்தில் வல்லூறென
இயந்திரப் பறவைகள்
வாழ்கையே போராட்டமானது.
புலம்பெயர்வு முடிவானது.
உறவு நட்பு தூரமானது.
குடும்பம் பிள்ளைகள் என்று
சுருங்கிப் போனது எம் வாழ்க்கை
பள்ளிப் பருவத்து நினைவுகள்
அவ்வப்போது வந்து போகும்
எப்போதாவது காணும் நண்பர்கள்
கடமை கடன் குடும்பநலன்
எம்மை உறங்கவிடாது
ஓடவைத்தது.
பணமே உலகமானது
இன்று அகவை ஐம்பதில்
ஒன்றாய் கூடினோம்
ஆயிரம் கனவுகள் மனதில்
இனம் புரியா உணர்வுகள்
தொடர வேண்டும்
 இந் நிகழ்வும் எம் நட்பும்
இதுவே என் விருப்பம்.

1967

ஆக்கம் : சிவசொரூபி தங்கராஜா (செல்வி)