எமது பாடசாலையின் பழைய மாணவராகிய திரு சிவசுப்பிரமணியம் சிவேந்திரகுமார் (வளலாய் மேற்கு) அவர்கள் அவுஸ்ரேலியாவில் இருந்து பாடசாலையை தரிசிப்பதற்காக வருகை தந்திருந்தார். மாணவர்களின் கல்வி நிலை, பாடசாலை அபிவிருத்தி, எதிர்கால கல்வி திட்டங்கள் பற்றி அதிபர் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார். அத்துடன் பாடசாலைக்கு அன்பளிப்பாக ரூபா ஒரு இலட்சம் (Rs 100,000.00) பணத்தொகையினை தந்துதவினார். இப்பணத் தொகையானது பாடசாலை Band Team ற்கான சீருடை தைப்பதற்காக பயன்படவுள்ளது. தொடர்ந்தும் பாடசாலைக்கு தன்னாலான உதவிகளை நல்குவதாக கூறியிருந்தார். இவரிற்கு நன்றிகளை தெரிவிப்பதில் எமது பாடசாலைச் சமூகம் மகிழ்வடைகின்றது.IMG_3524

IMG_3544

IMG_3547

IMG_3574

IMG_3576

J/IMV, Website Committee