இடைக்காடு பழையமாணவர் சங்கம் கனடா நிர்வாகசபைக்கூட்டக்குறிப்பு – 01.06.2014

New Logoஇடைக்காடு பழையமாணவர் சங்கத்தின் நிர்வாகசபைக்கூட்டம் 01.6.2014 ஞாயிறன்று இல.91  மொண்டியோ றைவ் (Mondeo Drive) திரு செ. கணேஸ் அவர்களின் இல்லத்தில் காலை 10.30 மணியளவில் ஆரம்பமானது.

திரு பொ.கந்தவேல் தலைமையில் ஆரம்பமான கூட்டத்துக்கு நிவாக சபை அங்கத்தினர்களும் மற்றும் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். இவ்வாண்டுக்கான கோடைகால ஒன்றுகூடல் நெல்சன் பூங்காவில் 03.08.2014 (ஞாயிறு) அன்று நடைபெறவுள்ளதால் அவ்வொன்றுகூடலை சிறப்புற நடாத்துவதற்காகவே முக்கியமாக இக்கூட்டம் கூட்டப்படுவதாகவும், எனவே அனைவரும் தமது ஆக்கபூர்வமான கருத்துக்களைத் தெரிவித்துதவும்படி தலைவர் கேட்டுக்கொண்டார்.

அதன்படி ஒன்றுகூடலில் முக்கிய நிகழ்வுகளாக  விளையாட்டும் மற்றும் உணவு வழங்கலும் இடம்பெறுவதனால் அதற்காக  தனித்த்னியே மூவரடங்கிய குழுவினைத் தெரிவுசெய்யவேண்டுமென அங்கத்தவர்கள் அபிப்பிராயப்பட்டதனால் அவ்வாறு இரு குழுக்கள் தெரிவுசெய்யப்பட்டன.

ஒன்றுகூடலில் கலந்துகொள்வோருக்கான கட்டணம் கடந்தவருடத்தைப் போலவே அறவிடுவதெனவும் ஆரம்பமுதல் இறுதிவரை பணத்தைப்பெறுவதற்கு இருவர் கடமையில் ஈடுபடவேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

அடுத்து 23.3.2014 அன்று கனடா சன்னதிகோவிலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்  நிச்சயித்தபடி  சங்க யாப்பினை  இணையதளத்தில் வெளியிடுவதெனவும் அது தொடர்பாக எவராவது கருத்துத் தெரிவிக்கவிரும்பினால் அதற்கு சந்தற்பம் வழங்கப்படவே\ண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது.

இறுதியாக எமது பாடசாலைக்கு இரண்டு மாடிக்கட்டிடத்தினை தனது செலவில் அமைத்துக்கொடுத்த திரு நமசிவாயம் அவர்களின் துணைவியார் திருமதி நமசிவாயம் செல்லம்மா இடைக்காட்டில் காலமானதால் அவரைக் கெளரவிக்கும் பொருட்டு  இடைக்காட்டில் அஞ்சலி நிகழ்வொன்றை நடாத்தும்படி இடைக்காடு பழையமாணவர் சங்கத்தைக் கேட்டுக்கொள்வதென்றும்  நாங்களும் அவரைக் கெளரவிக்கும் பொருட்டு கோடைகால ஒன்றுகூடலின்போது அவரது ஞாபகார்த்தமாகப் பரிசும் வழங்குவதெனவும் முடிவானது.

மதியம் 12.00 மணியளவில் கூட்டம் இனிதே நிறைவேறியது.

 

ந. சிவகுமாரு

செயளாளர் – 6.1.2014

Last Modified: July 5, 2014