இடைக்காடு பழையமாணவர் சங்கம், கனடா- மாரிகால ஒன்றுகூடல்- 2014

New Logo

13.9.2014 அன்று கூடிய இடைக்காடு பழையமாணவர் சங்கம் கனடாவின் நிர்வாகசபைக் கூட்டத்தில் மேற்கொண்ட தீர்மானத்திற்கிணங்க, வழமைபோல் இவ்வாண்டும் 25.12.2014 அன்று மாரிகால ஒன்றுகூடலை நடாத்துவதென்றும் அதன் முக்கிய நிகழ்வாக கலை நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவோர் 31.10.2014 க்கு முன்பதாக தமது பெயர் விபரங்களை பின்வருவோரிடம் பதிவுசெய்யுமாறு தயவுடன் கேட்கப்படுகின்றனர்.

திரு சி.பொன்னீசன் 416-4398613
திரு சி.ரூபன் 416-2866567
திரு த. முருகன் 416-9095393
திருமதி. பத்மாவதி நவகுமார் 416-7882645

இருவர் ஒரே நிகழ்ச்சியை நடாத்துவதைத் தவிர்க்கும்பொருட்டு தாம் மேடையேற்றவிருக்கும் நிகழ்ச்சியை அல்லது பாடலின் பெயரினை முன்கூட்டியே தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.
மேலும் சங்கீதக்கதிரை முதலான உள்ளக விளையாட்டு நிகழ்ச்சிக்கு வேண்டிய பரிசில்களை வழங்க விரும்புவோர் தமது பெயரினை தலைவரிடமோ செயலாளரிடமோ தெரிவிக்குமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
விழா நடைபெறும் இடம் மற்றும் விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
நன்றி.
பொ.கந்தவேல் – தலைவர் -647-7027346
ந. சிவகுமாரு – செயலாளர் – 647-5054079
13.9.2014

Last Modified: September 21, 2014