எமது சங்கத்தின் வளர்ச்சியில் எம்மோடு தோளோடு தோள் நின்று ஆக்கமும் ஊக்கமும் அளித்துவரும் பழைய மாணவர்கள், அங்கத்தவர்கள், நலன்விரும்பிகள் அனைவருக்கும் எமது புது வருட வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளும் அதேவேளை எமது  “இத்தி மலரி”லும் இணையதளத்திலும் வெளியிடப்பட்ட யாப்பு ஒருமாதிரி (model) வடிவமாகையால் அதனை பொதுச்சபையின் அங்கீகாரத்துக்கு சமர்ப்பிக்கவேண்டுமென 29.12.2013 அன்று கூடிய பொதுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. எனவே எதிர் வரும் பங்குனி மாதம் (திகதி பின்னர் அறிவிக்கப்படும்) பொதுச்சபையைக்கூட்டி அதற்கான அனுமதி பெறுவதெனவும் தீர்மானிக்கப்பட்டது. எனவே வெளியிடப்பட்ட யாப்பினைப் பார்வையிட்டு திருத்தங்களோ மாற்றங்களோ செய்யவேண்டுமெனெத் தாங்கள் கருதினால் அதைத் தெரிவிக்குமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

மேலும், இவ் வருடக் கோடை கால ஒன்றுகூடல் வழமைபோல் நெல்சன் பார்க்கில் Aug.3.2014 (Long Weekend) நடைபெற தீர்மானிக்கப்பட்டுள்ளது. அனைத்து விடயங்களிலும் திறம்படச் செயற்பட்ட சென்ற வருட நிர்வாக சபையினருக்கு நன்றியினை தெரிவித்துக் கொண்டு தங்கள் அனைவரின் பூரண ஒத்துழைப்புடன் மென்மேலும் வளர்ச்சிப் பாதையில் இடைக்காடு பழைய மாணவர் சங்கம் – கனடாவினை வளர்ப்போமாக.

நன்றி,
ந. சிவகுமாரு
செயலாளர்