சிவமயம்

இடைக்காடு அருள்மிகு காசி விசுவநாதர்(முனியப்பர்)ஆலயம்

கும்பாபிஷேக தின இரண்டாவது ஆண்டு பூர்த்தி விழா.
25.05.2013 சனிக்கிழமை.
மெய்யடியார்களே,
சகல செல்வங்களும் ஒருங்கே அமைந்ததும் சைவமும் தமிழும் நறுமணம் வீசும் எம் இடைக்காடு ஊரிலே கேவிள் பதி மருதடியில் கோவில் கொண்டெழுந்து அருள் பாலிக்கும் அருள் மிகு காசி விசுவநாதர் ஆலய கும்பாபிஷேக தின ஆண்டு நிறைவு விழா விஜய வருடம் வைகாசித் திங்கள் 12ம் நாள் (25.05.2013) பூரணையும் வைகாசி விசாக நட்சத்திரமும் சித்த யோகமும் கூடிய சுப நாளான சனிக்கிழமை அன்று நடை பெற திருவருள் கூடிஉள்ளது .

அன்றைய தினம் காலையில் மூலவருக்கும் மற்றும் சகல பரிவார மூர்த்திகளுக்கும் விஷேட அபிசேகங்கள் நடைபெற்று அதனைத் தொடர்ந்து விஷேட பூசைகளும் நடைபெறவுள்ளது.
மாலையில் பூசைகள் நடைபெற்று காசி விசுவநாத பெருமானுக்கும் விசாலாட்சி அம்மைக்கும் திருக்கலியாணம் நடை பெற்று வீதி உலாவும் நடை பெற உள்ளது.

பக்தர்கள் யாவரும் இவ் விழாவில் பங்கேற்று காசி விசுவநாத பெருமானின் அருளை பெற்று ஏகுமாறு அன்புடன் அழைக்கின்றோம் .இவ் விழாவிற்கு உபயம் செய்ய விரும்பும் அடியார்கள்  ஆலய நிர்வாகத்துடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.

இங்கனம்
செயலாளர்  ,
வே.கணேசலிங்கம் (அப்பன்)
தொடர்புகட்கு -077-1619359
ஆலய பரிபாலனசபை ,
இடைக்காடு அருள்மிகு காசி விசுவநாதர் ஆலயம்.