மூவரின் அகால மரணம்

Subankan 1

சுபாங்கன் நிற்குணானந்தன்

Mathusha 1 - Copy

மதுஷா யசோதரன்

Kili1 - Copy

அருள்நாயகி நிற்குணானந்தன்

சுபாங்கன் நிற்குணானந்தன்
மதுஷா யசோதரன்
அருள்நாயகி நிற்குணானந்தன்
கணவனை இளவயதிலேயே இழந்து தனியாளாக வசதிகளற்ற போர்ச் சூழலில் தனது பிள்ளைகளை வளர்த்தெடுத்து தன்னுயிரையும் தனதருமைப் பிள்ளைகளின் உயிரையும் காலனுக்குக்கு கொடூரமாகக் காவு கொடுத்த கணபதிப்பிள்ளை செல்வபாக்கியத்தின் மகள் நிற்குணானந்தன் அருள்நாயகி (கிளி – 50 வயது), புதல்வன் நிற்குணானந்தன் சுபாங்கன் (20 வயது), மகள் யசோதரன் மதுஷா (மது – 28 வயது) ஆகியோரின் ஆன்மா சாந்தியடையவும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தர்மிக்கா (தர்சி – 25 வயது) யசோதரன் (30 வயது) ஆகியோர் சீக்கிரம் குணமடையவும் கனடா வாழ் வளலாய் மக்கள் ஒன்றியமும் அதன் செயற்குழுவும் எல்லாம் வல்ல வளலாய் பிள்ளையாரைப் வழிபடுவதோடு, அவர்களின் நெருங்கிய உறவுகளுடன் ஒன்றியம் தன் ஆழ்ந்த இரங்கத்தையும் துயரத்தையும் பகிர்ந்து கொள்கின்றது.

அண்மையில் கணபதிப்பிள்ளை செல்வபாக்கியத்தின் மகள் கிளி குடும்பத்தில் ஏற்பட்ட அசம்பாவிதங்களால் துயரத்தில் தவிக்கும் எஞ்சியுள்ள தர்மிகா மற்றும் அவரது ஒன்றரை வயது மகன், அக்கா கணவன் யசோதரன் வேலன் ஆகியோருக்கு ஆறுதலளிக்க புலம் பெயர் நாடுகளிலில் வாழும் உறவுகளுக்கு முடியாவிட்டாலும் அவர்களின் அவசரமான அத்தியாவசியமான பொருளாதரத் தேவைகளை சமாளிக்க தேவையான பண உதவியை எம்மால் இயன்ற அளவு உதவ கனடா வாழ் வளலாய் ஒன்றியம் வளலாய் உறவுகளின் உதவியை நாடி நிற்கிறது. தயவுசெய்து தங்களால் இயன்ற உதவியை விரைந்து அளிக்க ஒன்றிய செயற்குழுவுடன் தொடர்பு கொள்ளவும்.

தொடர்புகளுக்கு :vala-1

Last Modified: May 9, 2014