துயர்பகிர்வோம்

2014_sellama

திருமதி. நமசிவாயம் செல்லம்மா

அன்னார்
அச்சுவேலி இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி
நமசிவாயம் செல்லம்மா 26.5.2014 அன்று இடைக்காட்டில் காலமானார். அன்னார் காலம்சென்ற வேலுப்பிள்ளை நமசிவாயத்தின் (கட்டிட படவரைஞர்) அன்பு மனைவியும் சரஸ்வதியின் (ஆயுள்வேத வைத்தியர்) அன்புத்தாயாரும் காலம் சென்றவர்களான திரு கந்தையா(BA), திரு நமசிவாயம் (சின்னத்துரை), திரு கதிரித்தம்பி, திரு திருநாவுக்கரசு, மற்றும் திருமதி நடராசா சின்னத்தங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியுமாவார்.
அன்னார் கணபதிபிள்ளை , சின்னம்மாவின் மகளும் வேலுப்பிள்ளை, கதிராசிபிள்ளையின் மருமகளும், சின்னத்தம்பியின் (பாரதியார்) மைத்துனியும் ஆவர்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28.5.2014 அன்று இடைக்காட்டில் அன்னாரின் வீட்டில் நடைபெற்று சாமித்திடல் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்கப்படுகின்றனர்.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.

தகவல் மருமக்கள் (கனடா)
ந. கணேஸ்வரன் (சின்னையா) 905-417-7821
ந.சிவராசா
ந.சிவகுமாரு(சிவா)

 
Last Modified: May 28, 2014