துயர் பகிர்வோம்.

திரு. அரியராசா இராஜகோபால்

Thipam

வளலாய் அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட அரியராசா இராஜகோபால் (ஆங்கிலபாட ரியூசன் ஆசிரியர்) இன்று 09-02-2016 வளலாயில் இறைபதமடைந்தார். அன்னார் காலம் சென்றவர்களான அரியராசா சிவக்கொழுந்து தம்பதிகளின் சிரேஸ்ட மகனும் ருக்குமணிதேவி (அன்னக்கொடி), சிவபாலன் (கனடா), குணபாலன் (கனடா) , கமலாதேவி (ராணி) (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரனும், மகேந்திரன், யோகேஸ் வரி. சாந்தினி, ரட்ணஜோதி ஆகியோரின் அன்பு மைத்துனரும், அர்ச்சுன், சரண்யா, ஆருண்யா, சுபாகர் ,நிவேதிகா, தீபகா ஆகியோரின் அன்பு  பெரியப்பாவும், சாரு, ஆரதி ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 10-02-2016 புதன்கிழமை வளலாயில் உள்ள அன்னாரின் இல்லத்தில் இடம் பெற்று பூதவுடல் நீர்ப்பெட்டி இந்து மயான த்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும். 

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.

தகவல் :
அ. சிவபாலன் (சகோதரர்) மொன்றியால் கனடா: 514-744-2905

தொடர்புகளுக்கு:
அ.குணபாலன் -மொன்றியால் கனடா : 514-748-4991