2016_gh

துயர் பகிர்வோம்.

திரு கார்த்திகேசு கிருஸ்ணபவன் இறைபதமடைந்தார்.
இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும்
கொண்ட கார்த்திகேசு கிருஸ்ணபவன் நேற்று 07-08-2016 அன்று தனதில்லத்தில் இறைபதமடைந்தார். அன்னார் காலம் சென்றவர்களான ஜயன்குட்டிவளவு கார்த்திகேசு மனோண்மணி தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், தெய்வமலரின் அன்புக் கணவருமாவார்.
மேலும் அன்னார் சிவலிங்கம், காலம் சென்ற சிவராசா, தங்கராசா ( கனடா ) , சிவேஸ்வரி, கனகசபை ( கனடா), காலம் சென்ற அருட்கோயில் ஆகியோரின் அன்புச் சகோதரருமாவார்..
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பாடசாலை வீதி, குளுப்பன்கலட்டியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் சாமித்திடல் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது

தகவல்;
க. தங்கராசா  ( சகோதரர் ) கனடா –416–284–7534.