துயர் பகிர்வோம்.

Gnanasachithananthasivam 5

அன்னை மடியில் : 15 ஆனி 1939 ஆண்டவன் அடியில் : 13 வைகாசி 2015

அச்சுவேலி, இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட ஒய்வுபெற்ற அரசு மருத்துவர் ஞானசச்சிதானந்தசிவம் ஞானசுப்பிரமணியம் 13 வைகாசி 2015 ம் திகதி புதன்கிழமை இடைக்காடு, இலங்கையில் காலமானார். அவர் காலஞ்சென்றவர்களான ஞானசுப்பிரமணியம், சின்னம்மா தம்பதியரின் அன்பு மகனும், இராமசாமி, இராசமணி தம்பதியரின் பாசமிகு மருமகனும், ஞானசபேசன் (கனடா) இன் பிரியமான தம்பியும், சாரதாதேவியின் அன்பு கணவரும், வாகீசன், சிவதர்சினி, சர்மிளா ஆகியோரின் பாசமிகு தந்தையும், செல்வரதனி, செந்தில்ராஜ் ஆகியோரின் பிரியமான மாமனாரும், அனிஸ் இன் அன்புப் பேரனுமாவார். அன்னாரின் இறுதிச் சடங்குகள் இடைக்காட்டில் அவரில்லத்தில் புதன் கிழமை அன்று நடைபெற்று இடைக்காடு மாயனாத்தில் அவர் பூதஉடல் தகனம் செய்யப்பட்டது.

இவ்வறித்தலை உற்றாரும் உறவினர்களும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.

தகவல்

குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வாகீசன் – மகன் – அவுஸ்திரேலியா     +6139700 6127

சாரதா – மனைவி – இலங்கை       +94112364194

தர்சினி – மகள் – இலங்கை        +94711111002

 

Last Modified: May 19, 2015