திருமதி இராஜேஸ்வரி சோமசுந்தரம்
துயர் பகிர்வோம்
யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், அத்தியடி, காங்கேசன்துறை, தெல்லிப்பழை, கொழும்பு, அவுஸ்திரேலியா Perth, கனடா Mississauga ஆகிய இடங்களை வதிவிடமகாவும் கொண்ட இராஜேஸ்வரி சோமசுந்தரம் அவர்கள் 03-07-2020 வெள்ளிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னையா, சோமசுந்தரம்(முன்னாள் அதிபர்- நடேஸ்வராக் கல்லூரி, மகாஜனாக் கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,
சுந்தரேஸ்வரி(Mississauga, கனடா), காலஞ்சென்ற சுந்தரராஜன்(பிரித்தானியா) மற்றும் சுந்தரராணி(கொழும்பு), சுந்தரகாந்தி(Perth, அவுஸ்திரேலியா), சுந்தரகுமாரி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தெட்சணாமூர்த்தி, நாளினி(பிரித்தானியா), கந்தசாமி, நடேசன், பகீரதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கமலாம்பிகை ஆறுமுகம்(Scarborough) மற்றும் காலஞ்சென்றவர்களான நாகரத்தினம்-செல்லத்துரை, தங்கரத்தினம்-நாகலிங்கம், சின்னப்பாபிள்ளை- தம்பிமுத்து , தம்பி-தம்பிமுத்து ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வள்ளிநாயகி- சின்னப்பாபிள்ளை(இடைக்காடு), கமலாசினி-தம்பி(Scarborough) ஆகியோரின் மைத்துனியும்,
துளசி, அருண், பவன், சேன், அனோரா, சிந்து, மயூரி, பிருந்தன், ஆரபி ஆகியோரின் அன்புப் பாட்டியும்,ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தற்போதைய நாட்டின் சூழ்நிலை காரணமாக இந்நிகழ்வு குடும்பத்தினருடன் நடைபெறும்.
அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது
நிகழ்வுகள்
- 6th Jul 2020 8:00 AM
- Monday, 06 Jul 2020 8:00 AM – 9:00 AM
- Monday, 06 Jul 2020 9:00 AM – 10:00 AM
- Monday, 06 Jul 2020 10:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +19056298166
- Phone : +442084291974
- Phone : +94112597984
- Mobile : +61468630693
- Mobile : +19055648274
சேவை நலன் பாராட்டு விழா
சேவை நலன் பாராட்டு விழா திருமதி .ஆனந்த ஈஸ்வரி நாகநாதன் அவர்கள் 02.01.1984 இல் தனது ஆசிரியப் பணியினை வவுனியா சீ.சீ.த.க.பாடசாலையில் ஆரம்பித்து 13.07.2020 அன்று யாழ் இடைக்காடு மகாவித்தியாலயத்தில் பிரதி அதிபர் பதவி நிலையிலிருந்து ஓய்வடையவுள்ளார். அவரைக் கௌரவிக்குமுகமாக “ஆனந்த நாதம்” என்ற மலரினை பாடசாலைச் சமூகம் வெளியிடவுள்ளது. எனவே அம் மலரிற்கான ஆக்கங்களை அவரோடு படித்த நண்பர்கள்,நலன் விரும்பிகளிடமிருந்து எதிர்பார்க்கிறோம். பாடசாலைச் சமூகம் யா/ இடைக்காடு ம.வி. தொடர்புகளுக்கு: திருமதி. தயாவதி சிவஞானசீலன் 0779601516 Thayavathysivagnanaseelan@gmail.com
திருமதி யோகமங்களம் பராசக்திராஜா ( கிளி )
திருமதி யோகேஸ்வரி பாலசுப்ரமணியம் (குமுதா)
துயர் பகிர்வோம்
யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Etobicoke ஐ வசிப்பிடமாகவும் கொண்ட யோகேஸ்வரி பாலசுப்ரமணியம் அவர்கள் 16-03-2020 திங்கட்கிழமை அன்று இறைபாதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தெய்வேந்திரம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராசைய்யா, செங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பாலசுப்ரமணியம்(பாலு) அவர்களின் அன்பு மனைவியும்,
பாலேஸ்வரி(வவி- கனடா), பழனி(சுவிஸ்), செந்தில்(கனடா), சுகிர்தா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சாந்தா(கொலன்ட்), வேல்(கனடா), கேதா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பிரதீபன்(கனடா), ஜெபனா(சுவிஸ்), ஜீவானந்தி(கனடா) மற்றும் இராகுலன்(றொசான்- இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமியும்,
சிறீக்காந்தன், மொழி, பாஸ்கர் மற்றும் காலஞ்சென்ற தறுமு ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அபிராம், சாரபி, சரத்விகா, சபீதா, அஸ்வினா, அஸ்வித், அட்சயன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 22 Mar 2020 12:00 PM – 2:00 PM
- Sunday, 22 Mar 2020 2:00 PM – 4:00 PM
- Sunday, 22 Mar 2020 4:30 PM – 5:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +14164707267
- Mobile : +41764547438
- Mobile : +14162190252
- Mobile : +94777596948
- Mobile : +16478561962
- Mobile : +14162943932
- Mobile : +447405035446
திரு சந்திரகாந்தன் ராஜரத்தினம்
துயர் பகிர்வோம்
யாழ். அச்சுவேலி வளலாயைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட சந்திரகாந்தன் இராஜரட்ணம் அவர்கள் 06-03-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற இராஜரட்னம், இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராஜதுரை, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும், பத்தமலோசனி அவர்களின் பாசமிகு கணவரும், கிஷாந் அவர்களின் அன்புத் தந்தையும், காலஞ்சென்ற சிறி சிவசபேசன், கமலாசனி, சந்திரவதனி, சிவகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும், சிறிஸ்காந்தராஜா(சிறி), சிறிதரன்(வாவா), சாளினி, கணேசமூர்த்தி, சசிராஜா(தர்ஷன்), அருள்ராஜா(அருள்), நவநீதநாயகி, பவானி, லலிதா ஆகியோரின் அன்பு மைத்துனரும், துரைரட்ணம்(ரத்தினம்), குணசேகரன்(சேகர்), செல்வக்குமார்(செல்வன்) ஆகியோரின் அன்புச் சகலனும், விஜயலட்சுமி, லக்சுமி, பிரதுஷா ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரரும் ஆவார். அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றதுஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்
|
|
![]() |
|
![]() |
திரு.சிவேந்திரன் சின்னத்தம்பி
துயர் பகிர்வோம்
யாழ். உடுப்பிட்டி இலக்கிணாவத்தையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal, Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவேந்திரன் சின்னத்தம்பி அவர்கள் 02-03-2020 திங்கட்கிழமை அன்று Toronto வில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகுப்பிள்ளை தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கேதீஸ்வரி(தவம்) அவர்களின் அன்புக் கணவரும்,
வருண், கவிதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற அருந்தவமலர்(மலேசியா), அமிர்தமலர்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
இராசேஸ்வரி(கனடா) யோகேஸ்வரி(இலங்கை), ஈஸ்வரதம்பையா(Montreal), காலஞ்சென்ற நாகேஸ்வரமுத்து, ஈஸ்வரமூர்த்தி(சிவா), காலஞ்சென்ற சிவப்பிரகாசம், இராமேஸ்வரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Saturday, 07 Mar 2020 6:00 PM – 9:00 PM
- Sunday, 08 Mar 2020 8:00 AM – 9:00 AM
- Sunday, 08 Mar 2020 9:00 AM – 10:30 AM
- Sunday, 08 Mar 2020 10:30 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +16473424830
- Mobile : +16479994988
- Mobile : +14162718467
- Mobile : +15146021835
டொரோண்டோ பல்கலைக்கழகம் – தமிழ் இருக்கை
டொரோண்டோ பல்கலைக்கழகம் – தமிழ் இருக்கை நிறுவுவதற்கான நிதிப்பங்களிப்பு (Feb 21, 2020)
ரொரன்ரோ பல்கலைக்கழகம் – தமிழ் இருக்கை நிறுவுவதற்கான நிதிப்பங்களிப்பு
தாயகத்தில் யாழ். இடைக்காடு, வளலாய் கிராமங்களை பிறப்பிடமாகக் கொண்ட எமக்கு கமமும் கல்வியும் இரு கண்கள் போன்றவை.
கமம் எமக்கு உணவூட்டியது, கல்வி எமக்கு அறிவூட்டியது.
நாம் படித்த பாடசாலைக்கு நன்றிக்கடனாய் பல உதவிகளைச் செய்துவந்தோம், செய்துவருகின்றோம்.
நாம் படித்த பாடசாலை எமது தாயகத்தில் இருந்தாலும் புலம் பெயர்ந்த எமது பிள்ளைகள் பேரப்பிள்ளைகளிள் கல்வி புலம்பெயர் தேசத்தில்தான் இருக்கப்போகின்றது. எமது தாய்மொழி தமிழாக இருந்தபோதும் எமது பிள்ளைகளின் மொழி ஆங்கிலமோ, பிரான்சோ, டொச்சோ போன்ற பிறமொழியாகவே இருக்கப்போகின்றது.
எமது பிள்ளைகள் வேறுமொழியைப்பேசினாலும் அவர்களும் தமிழர்களே.
தமிழே எமது அடையாளம். எனவே எமது மொழியான தழிழை எமது பிள்ளைகளுக்கும் பேச எழுதப் பழக்கவேண்டியது எமது சமுதாயக் கடமையாகும்.
தழிழ் கற்பதற்கு நாம் அவர்களுடன் தமிழில் பேசவேண்டும். தழிழ் அறிவு மேம்படுவதற்கு தமிழைக் கற்பிக்கவேண்டும். சரி தழிழை விடுங்கள் ஆங்கிலத்துடன் இன்னொருமொழி தெரிந்திருப்பது அவர்களுக்கு மேலதிகத்தகமை அல்லவா? அது ஏன் தமிழாக இருக்கக்கூடாது? தழிழின் பெருமையை அதன் வரலாற்றுச் சிறப்பையும் அவர்கள் உணரும்போது தாமும் தழிழ் படிக்கவேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் உருவாகும்.
பல்கலைக்கழகங்கள் அறிவின் உற்பத்திச் சாலைகள். நாம் வாழும் கனடாவில் ரொரன்ரோ பல்கலைக்கழகம் உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் 19வது இடத்தில் உள்ளது.
தழிழ் மீது அக்கறையும் ஆர்வமும்கொண்ட எம்மில் பலர் இது பற்றி சிந்தித்து ரொரன்ரோ பல்கலைக்கழகத்தில் தழிழுக்கான இருக்கைஒன்றை அமைப்பதன்மூலம் தாய்மொழியாம் தழிழை வளர்க்கவும் அதன் பெருமையை உலகறியச் செய்யவும் முடியும் என எண்ணினர்.
தழிழ் இருக்கை ஒனறினை அமைப்பதற்கு ரொரன்ரோ பல்கலைக்கழகத்தை அணுகியபோது எமது மொழியின் பெருமையையும் எமது நியாயமான கோரிக்கையையுனம் ஏற்றுக்கொண்ட பல்கலைக்கழகம் அதன் ஆரம்ப கமுதலீடாக மூன்றுமில்லியன் டொலர்களை வைப்புச் செய்யும்படியும் இந்தநிதியுன் முதலீட்டில் எதிர்காலத்தில் தழிழ் இருக்கை செவ்வனே இயங்கிவரும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இப்படி ஒர் அரிய சந்தற்பம் கிடைத்ததையிட்டு நாம் கனடிய தேசத்துக்கு நன்றிகூறவேண்டும். அன்றியும் இச் சந்தற்பத்தை நழுவவிடாது பயன்படுத்திக் கொள்ளவும் வேண்டும்.
இம்முயற்சி எமக்கோ எம்மினத்துக்கோ மட்டுப்படுத்தப் பட்டதொன்றல்ல.
தமிழை அறிய, கற்க, ஆராய்ச்சிசெய்ய விரும்பிய அனைவருக்குமே தமிழ் இருக்கையின் கதவு அகலத்திறந்தே இருக்கும்.
கனடாவுக்கு புலம்பெயர்ந்து நாம் வளமாக வாழ்ந்து வருகின்றோம். எமது சந்ததியினர் கல்விமான்களாக அறிவாளிகளாக இம்மண்ணில் வாழவேண்டும். அதற்கு இத்தமிழ் இருக்கை பெருமை சேர்க்கும். எமது பிள்ளைகள் பலர் மாணவர்களாக உள்ளனர். பலர் கல்வி கற்று உயர் பதவிகளில் உள்ளனர். அவர்கள் கணிசமான ஊதியம் பெறுகின்றனர். அதேவேளை தழிழ் இருக்கைக்குழு ஒன்றரை மில்லியன் நிதியை இன்னமும் வேண்டி நிற்கின்றது. உங்களாலான நிதி உதவி அதற்கு பேருதவியாக அமையும்.
16.2.2020 அன்று நடந்த எமது பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டத்தில் நான் இவ்விடயம்பற்றிக் கூறியபோது இதன் தேவையைப் புரிந்துகொண்டு அங்கு சமூகமளித்திருந்தவர்கள் இரண்டாயிரம் டொலர் வரை அன்பளிப்புசெய்தனர். இது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக இருந்தது. இத்தொகை உரியவர்களிடம் எமது பாடசாலை பழையமாணவர்களின் சார்பாக கையளிக்கும்போது அவர்களால் வழங்கப்படும் பற்றுசீட்டை வருடாந்த வருமான கணக்கு சமர்ப்பிக்கும்போது கொடயாளிகளுக்கு அத்தொகைக்கு வரிவிலக்கு அளிக்கப்படும்.
அன்றையதினம் கூட்டத்துக்கு சமூகமளிகாதவர்கள் இப்பயனுள்ள பணிக்கு நன்கொடை வழங்க விரும்புவோர்.torantotamailchair.ca என்னும் இணைய தளத்துக்குச் சென்று Donate என்னும் தெரிவில் கொடுப்பனவுக் கானவிபரத்தைத்தெரிந்துகொள்ளலாம்.
காசோலைமூலம் கொடுப்பனவு மேற்கொள்ளவிரும்பின் university of toranto என்னுனம் பெயருக்கு வரையப்பட்ட காசோலையை என்னிடம் ஒப்படைத்தால் உரியவர்களிடம் அதனைக் கொடுத்து உங்களுக்கான பற்றுச் சீட்டைப் பெற்றுத்தரமுடியும்.
கடனட்டை மூலம் கொடுப்பனவை மேற்கொள்ளவிரும்பின் நேரடியாக( online)பங்களிப்பை செலுத்தி அதன்மூலம் உடனடியாகவே பற்றுச் சீட்டைப் பெற்றுக்கொள்ளலாம்.
எனினும் எம் அங்கத்தவர்களின் முழுத்தொகையும் ஒன்றாகச் சேர்த்து வழங்கினால் அது பெரிய தொகையாக இருப்பதுடன் எமக்கும் எம் பாடசாலைக்கும் பெருமை சேர்ப்பதாகவும் அமையும்.
இது தொடர்கபாக என்னுடன் தொடர்புகொள்ள விரும்பினால் எனது தொலைபேசி இல. 647 702 7346. email. ponkanthavel@yahoo.com.
நன்றி.
பொன்.கந்தவேல்
21.2.2020
இடைக்காடு ம.வி ப.மா .ச – கனடா கிளை பொதுக்கூட்டம் -2020
தவிர்க்க முடியாத காரணத்தினால் பிற்போடப்பட்ட எமது 2020ம் ஆண்டிட்கான பொதுக்கூட்டம் February 16, 2020 அன்று நடைபெறவுள்ளது. நலன் விரும்பிகள், பழைய மாணவர்கள் மற்றும் அங்கத்தவர்கள் அனைவரையும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்!
‘Place :126 Keeler Blvd (Uthayan Home )
‘Time :3:30 pm
‘Date :Feb 16, 2020 – Sunday
2020ம் ஆண்டிற்கான புதிய செயற்குழு உறுப்பினர் விபரம்:
தலைவர் : திரு.தம்பு நாகேஸ்வரமூர்த்தி
உப-தலைவர் : திரு.பொன்னையா உதயணன்
செயலாளர்: திருமதி. கங்காதேவி நல்லதம்பி
உப-செயலாளர் : திரு.சிவஞானரூபன் சிவஞானசுந்தரம்
பொருளாளர்: திரு.பார்த்திபன் கந்தவேல்
உப-பொருளாளர் : செல்வன். கபிலன் இரத்தினசபாபதி
பொதுக்குழு உறுப்பினர்கள்:
1.திருமதி. கீர்த்தனா அஜித்குமார்
2: திருமதி. அனுஷா சுதர்சன்
3.செல்வன்.துஷியன் நவகுமார்
4.செல்வன். ரிஷிபன் அருணகிரி
5.செல்வன். சிந்துயன் உதயணன்
கௌரவ போசகர்கள்:
- திரு.ச.கேசவமூர்த்தி
- திரு.சி. நல்லதம்பி
கௌரவ தாயக இணைப்பாளர் :
பேராசிரியர் திரு.க. சின்னத்தம்பி
நன்றி
செயற்குழு
IMV-OSA-Canada
Please click below to view குளிர்கால ஒன்றுகூடல் படங்கள் Canada -2019:
https://drive.google.com/drive/folders/1DlblGu-WyTIOz84CJDhxT_qniBykr1kV?usp=sharing