Winter Get-Together 2013 Photos

Update By: Anushan Easwaramoorthy
Date: January 12, 2014

The photos for the recent winter get-together 2013 are now available for viewing. As per usual, please contact us if there are any photos that you would like altered or removed.

2014ம் ஆண்டு புதிய நிர்வாக சபையின் அறிவித்தல்

New Logo

எமது சங்கத்தின் வளர்ச்சியில் எம்மோடு தோளோடு தோள் நின்று ஆக்கமும் ஊக்கமும் அளித்துவரும் பழைய மாணவர்கள், அங்கத்தவர்கள், நலன்விரும்பிகள் அனைவருக்கும் எமது புது வருட வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளும் அதேவேளை எமது  “இத்தி மலரி”லும் இணையதளத்திலும் வெளியிடப்பட்ட யாப்பு ஒருமாதிரி (model) வடிவமாகையால் அதனை பொதுச்சபையின் அங்கீகாரத்துக்கு சமர்ப்பிக்கவேண்டுமென 29.12.2013 அன்று கூடிய பொதுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. எனவே எதிர் வரும் பங்குனி மாதம் (திகதி பின்னர் அறிவிக்கப்படும்) பொதுச்சபையைக்கூட்டி அதற்கான அனுமதி பெறுவதெனவும் தீர்மானிக்கப்பட்டது. எனவே வெளியிடப்பட்ட யாப்பினைப் பார்வையிட்டு திருத்தங்களோ மாற்றங்களோ செய்யவேண்டுமெனெத் தாங்கள் கருதினால் அதைத் தெரிவிக்குமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

கனவுலகக்கனடாவும் களையிழந்த கனடாவும்

pon.kan

மனிதனுடைய ஆசைக்கு அளவே இல்லை

வாய்க்கு ருசியான விதம் விதமான உணவு, அழகான  பகட்டான ஆடைகள், ஆடம்பர மாடிமனை வீடுகள், வேண்டிய இடத்துக்கு சென்றுவர சொகுசான வாகனங்கள் இனிமையான பொழுதுபோக்குச் சாதனங்கள். இப்படி உலகத்திலுள்ள அத்தனை வசதிகளும் தனக்குக் கிடைக்கவேண்டுமென இன்றைய மனிதன் விரும்புவது இயல்பானதே. அவற்றைதேடி ஓடும் மனிதனின் ஆசைகளை கனடிய மண் ஓரளவு தீர்த்து வைத்துள்ளது என்றுதான் கூறவேண்டும்.

கனவுலகக்கனடாவும் களையிழந்த கனடாவும்

 

Happy New Year/Bonne Année

IMV2014As we move into the new year of 2014, we celebrate not only what the future holds, but of all of our accomplishments, joys, wonders of 2013. May this new year be as prosperous, joyous and wondrous as the last. We would like to extend our warmest wishes and a happy new year to all of you.

– இடைக்காடு பழைய மாணவர் சங்கம் – கனடா

புதிய நிர்வாக குழு – 2014

2013_imvosa-canada

இன்று நடைபெற்ற வருடாந்த பொதுக் கூட்டத்தில் சென்ற நிர்வாகக் குழுவினரின் செயற்பாடுகள் பற்றிய குறை நிறைகள் விரிவான வாத பிரதிவாதங்களுக்கு உட்பட்டு அதற்குரிய தெளிவாடல்கள் வழங்கப்பட்ட பின்னர், 2014ம் ஆண்டுக்குரிய புதிய நிர்வாகசபை தெரிவு செய்யப்பட்டது.

2014 Committee

General Meeting 2013/2014

New Logo

வருடாந்த  பொதுக்கூட்டம்

 
29.12.2013 இடைக்காடு பழைய மாணவர் சங்கம் – கனடாவின் வருடாந்த நிர்வாகசபை பொதுக்கூட்டம் காலை 10:30 AM மணியளவில் கனடா செல்வசன்னதி முருகன் ஆலயத்தில் நடைபெற தீர்மானிக்கப்பட்டுள்ளது . அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

நன்றிகள்

Thank

இடைக்காடு பழைய மாணவர் சங்கத்தின் (கனடா) 9 ஆவது குளிர்கால ஒன்றுகூடலும் 20 ஆவது நிறைவினை முன்னிட்டு வெளிவந்த இத்திமலரும்,இந்த பொல்லாத காலநிலையிலும் (Bad weather) இனிதே நிறைவுற்றுள்ளது. இந் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும், கலைநிகழ்ச்சிகளை வழங்கிய கலைஞர்களுக்கும், அதனை தமது நிர்வாக திறமையாகவும்,நேர்த்தியாகவும், ஒழுங்கமைத்து வழங்கிய பெற்றோர்களுக்கும், அதனை கற்றுக்கொடுத்தவர்களுக்கும்,பரிசில்களை வழங்கிய குடும்பத்தினருக்கும், DJ வழங்கியவர்களுக்கும்,இந்த மண்டபத்தை ஒழுங்கு செய்தவர்களுக்கும், உணவினை சுவைபட தயாரித்து வழங்கியோருக்கும், Trophy வழங்கிய ஏகாம்பரம் குடும்பத்தினருக்கும், இத்திமலரினை வெளிக்கொணர்வதுக்கு அயராது உழைத்த மலர்க் குழுவினருக்கும், இவ் ஆவணப்படுத்தலில் தமது அனுபவப்பகிர்வினை பதிவு செய்தவர்களுக்கும் நேர்த்தியான முறையில் புகைப்பட, ஒளிப்பட பதிவுகளை செய்தவர்களுக்கும், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர்களுக்கும் மற்றும் அனைத்து வகையிலும் தமது ஒத்துழைப்புகளை வழங்கிய அனைவருக்கும் மேலும் இதில் நாம் குறிப்பிட தவறிய அனைவருக்கும் இடைக்காடு பழைய மாணவர் சங்கம் – கனடா தனது இதயம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றது.

முக்கிய அறிவித்தல்

DSC00815

குளிர்கால ஒன்றுகூடல், இத்தி மலர் வெளியீடு  திட்டமிட்டபடி நடைபெறும்

நிகழ்வு நடைபெறும் நேரம் – 4.00 pm – 12.00 Midnight

Toronto பெரும் பாகத்தில் ஏற்பட்ட பனிப்புயலினால் நாம் பல வகையான அசௌகரியங்களுக்கு உள்ளானபோதும் நிலைமைகள் வழமைக்கு விரைவாக திரும்பி வருகின்றன. இந்தவகையில் நாம் திட்டமிட்டபடி இடைக்காடு பழைய மாணவர் சங்கம்-கனடா நடாத்தும் குளிர்கால ஒன்றுகூடல் – 2013  நடைபெறும் என்பதனை தெரிவித்துக் கொள்ளுகின்றோம். (Grand Luxe Banquet Hall) இதில் ஏதும் மாற்றம் ஏற்படின் நாளை (25-12 -2013 ) பகல் 12.00 மணிக்கு இற்கு முன்னர் அறியத்தருகின்றோம்.

முக்கிய குறிப்பு: நீங்கள் நிகழ்வுக்கு போகுமுன்னர் தயவு செய்து இணையதளத்தை பார்வையிட்டு எங்கு என்பதனை உறுதி செய்து கொள்ளவும்.

இத்தி மலர்

Idaikkadu cover

இதோ மலர்கிறது  இடைக்காடு ம. வி. பழைய மாணவர் சங்கம் – கனடா வின் “இத்தி மலர்”

 

குயிலினிது யாழினிது கொம்புத்தேன் மிக இனிது

கல்லாலும் புதராலும் பல காலம் கறைபடிந்த

பொல்லாத இடைக்காட்டுப் புறநிலத்தில் புதுமையதாய்

பல்லாரும் பலகலைகள் பயின்றின்று பயன்பெறவே

வல்லார்செய் கலைக்கூட இத்திமலர் துலங்குகிறதே.