பொதுக் கூட்டம் (Canada)

IMV OSA Canada Logo

குளிர் கால ஒன்று கூடல் 2013 

Idaikkadu 2013 Meeting 22.09

வணக்கம். நாம் வருடாவருடம் நடாத்தி வரும் குளிர் கால ஒன்று கூடல் 2013 பற்றிய ஆலோசனை பகிர்தலும் எதிர் கால செயற்பாடுகள் பற்றிய கருத்துக்கள் உள்வாங்கல் என்ற அடிப்படையில் வருகின்ற ஞாயிறுக்கிழமை (22.09.2013) அன்று காலை 10:00 மணியளவில் திரு.மூர்த்தி அவர்களின் இல்லத்தில் கூடுவதென தீர்மானிக்கப் பட்டுள்ளது.எனவே அங்கத்தவர்கள் நலன் விரும்பிகள் கலந்து கொண்டு தங்கள் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் வழங்கி சிறப்புற நடாத்த ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

இடம்: திரு.மூர்த்தி அவர்களின் இல்லம் (27 loggerhead grove)

காலம்: 22.09 2013. காலை – 10:00  மணி.

நன்றி.

நிர்வாகக் குழு.

புதிய நிர்வாக சபை

logoஇடைக்காடு பழைய மாணவர் சங்கம்(இடைக்காடு)  2013 ஆண்டிற்கான புதிய நிர்வாக சபையினை தெரிவு செய்துள்ளது.

ISO 2013 committee

திரு ந.பு. கந்தசாமி

துயர்பகிர்வோம்Mr.kanth திரு.ந.பு. கந்தசாமி

இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திரு ந.பு. கந்தசாமி அவர்கள் இன்று(24/08/2013) இடைக்காட்டில் காலமானார். அன்னார் தெய்வநாயகியின் அன்புக்கணவரும் திரு கதிரித்தம்பி (இளைப்பாறிய அதிபர்) அவர்களின் அன்புச் சகோதரரும் தவபுண்ணியமூர்த்தி, தவமணி, முத்துராசா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது

இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

தகவல்
முத்துராசா (மகன்) London 07565528677

சிவசுந்தரம் அருணாசலம்

sivasuதுயர்பகிர்வோம்

மண் மகிழ: 16 09 1934
கண் நெகிழ: 18 08 2013

திரியாய், திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கனடா ஸ்காபரோவை வதிவிடமாகவும் கொண்ட சிவசுந்தரம் அருணாசலம் அவர்கள் 18. 08. 2013 ஞாயிற்றுக் கிழமை அன்று அதிகாலை கனடாவில் காலமானார். அன்னார் காலஞ்சென்ற அருணாசலம் கனகம்மா தம்பதிகளின் அருமைப் புதல்வரும், காலஞ் சென்ற பொன்னம்பலம் ஆசைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும், சரஸ்வதி அவர்களின் ஆசைக் கணவரும் காலஞ்சென்றவர்களான நாகம்மா, செல்வநயினார், கதிரவேற்பிள்ளை, சிவசுப்ரமணியம், புவனேஸ்வரி அரசரத்தினம், சிவசண்முகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும் செல்வரத்தினம் (வவுனியா), பஞ்சாட்சரம் (பிரான்ஸ்) ஆகியோரின் அருமை அண்ணாவும் கனடாவில் வசிக்கும் சிவாஜினி (சிவா), தயாளினி (ரதி), திலீபன், மந்தாகினி (ரமா) ஆகியோரின் அருமைத் தந்தையும், ராஜதுரை (ராஜா) , விஜயகுமார் (குமார்), ஜெயந்தினி, நந்தகுமார் ஆகியோரின் அன்பு மாமாவும் வைசால், சாருஜன், ஜெனுசன், கபிஷன், சாம்பவி, சரன், மான்ஷி, ரிஷியா ஆகியோரின் அரிய பேரனும் ஆவார். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது

Summer Get-Together 2013 Pictures

Update By: Website Committee
Date: August 11, 2013

img_7780
IMG_7590

 

The summer get-together 2013 photos are now available for viewing. You can view them in the gallery. If there are any photos that you would like us to remove, please contact us.

திருமதி பாக்கியம் சுப்ரமணியம்

துயர்பகிர்வோம்

 
இடைக்காடு ,செட்டியளவுவினை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி பாக்கியம் சுப்ரமணியம் அவர்கள் 03/08/2013 அன்று இடைக்காட்டில் காலமானார். அன்னார் காலம்சென்ற திரு சுப்ரமணியம் அன்பு மனைவியும், வசீகரன்(கனடா ), யசோதரன்(லண்டன் ), தயாபரன்( இடைக்காடு), ஜெயசிறீ(இடைக்காடு), லோகநாதன் யசோதரா(கனடா ), கந்தையா சுபத்திரா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயுமாவார். வசந்தமலர்(கனடா), சரவணபவான், லோகநாதன், கந்தையா, யாலினி, கஜனி அவர்களின் அன்பு மாமியுமாவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். இறுதிச் சடங்குகள் விபரம் பின்பு அறியத் தரப்படும்.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகட்கு

 
யசோதரன்: 00 44 792 148 1594 (லண்டன்)

விருந்துபசாரம்

IMV OSA Canada Logo
560 Tickets Sold
440 Tickets Unsold

IdaikkaduGala2013Ticket

இடைக்காடு பழைய மாணவர் சங்கம் – கனடா
விருந்துபசாரம்

எமது சங்கமானது 1992இல் ஆரம்பிக்கப்பட்டு 20 ஆவது வருட பூர்த்தி விழாவினை கொண்டாடும்முகமாக ஓர் விருந்துபசார விழா ஒழுங்கு செய்யப் பட்டுள்ளது. இந் நிகழ்வுக்கு அனைவரும் வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

முக்கிய குறிப்பு

உங்கள் வருகையினை உறுதிப் படுத்திக் கொள்ளவும்.

If you plan on attending, please confirm beforehand so we may book the seats in advance, thank you.

தொடர்புகளுக்கு

மூர்த்தி – (416) 292 – 2453
கிரி – (416) 669 – 2409
ஜெயன் – (416) 817 – 0604

திருமதி கதிரித்தம்பி செல்வபாக்கியம்

துயர்பகிர்வோம்

திருமதி கதிரித்தம்பி செல்வபாக்கியம் இடைக்காட்டில் இறைபதமடைந்தார். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி கதிரித்தம்பி செல்வபாக்கியம் 29-07-2013 திங்கட்கிழமை இரவு 6-00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இறைபதமடைந்தார். அன்னார் இளைப்பாறிய ஆசிரியர் கதிரித்தம்பி அவர்களின் அன்பு மனைவியும், ஆசிரியர்களான முத்துலட்சுமி, சிவயோகராணி, சிவமலர். ஆகியோரின் அன்புத்தாயாரும், கந்தசாமி, ராஜசேகர், கனகக்கோன் ஆகியோரின் அன்பு மாமியாருமாவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 30-07-2013 அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சாமித்திடல் மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது

தொடர்புகளுக்கு

சிவமலர் -மகள்: 01194773075768

Summer Get-Together 2013 – Thank You

thank-you

அனைவருக்கும் நன்றிகள்

இடைக்காடு பழைய மாணவர் சங்கம் கனடா கடந்த ஜூலை (July 21, 2013) ஒழுங்கு செய்த வருடாந்த ஒன்று கூடலில் கலந்து கொண்டு மிகச் சிறப்பாக நடைபெற உதவிய அனைவருக்கும், மற்றும் இத் திகதியில் நடத்துவதற்கு Neilson Park இனை பதிவு செய்துதவிய திரு. வை. பொன்னீஸ்வரன் அவர்களுக்கு அனைவர் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்.

மேலும் நன்றிக் குரியவர்களாக, அனைத்து இளையோருக்கும், இணையத் தள, வானொலி ஊடகப் பிரிவினருக்கும் அனைத்து வகையான பொருட்களையும் ஏற்றி இறக்கி உதவி செய்த அனைவருக்கும், நிதியினை சேகரித்து தந்தோருக்கும் BBQ உணவுகளை தகுந்த நேரத்தில் நல்ல முறையில் அளித்த அனைவருக்கும் பொழுது போக்கு விளையாட்டுக்களை ஒழுங்கு செய்து நடாத்திய தன்னார்வ இளையோருக்கும், தேநீர் ,சாப்பாடுகளை அங்கே சமைத்து பரிமாறிய அனைவருக்கும் புகைப்படக்கருவி, புகைப் படங்களை எடுக்க உதவிய அனைவருக்கும் நிறைவாக Park கினை சுத்தம் செய்த அனைவர்க்கும் மனம் மகிழ்ந்து நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இவ் ஒன்று கூடலில் ஏதும் குறை நிறைகள் இருப்பின் உங்கள் ஆக்க பூர்வமான கருத்துக்களை நிர்வாக உறுப்பினர்களிடம் பரிமாறிக் கொள்ளவும்.

நன்றி.
நிர்வாகக்குழு.

Angeli Easwaramoorthy Bharathanatya Arangetram

எமது மகள் அஞ்சலி இன் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெறவுள்ளது. இதில் எமது அனைத்து உறவுகளும் கலந்துகொண்டு நிகழ்சியை நிறைவுடன் நடாத்தி தருமாறு அன்புடன் அழைக்கின்றோம். அரகேற்ற நிகழ்ச்சி நேரம், இடம் பற்றிய விபரங்களை இத்துடன் உள்ள அழைப்பிதழில் இருந்து அறிந்து கொள்ளவும். மற்றும் எமது உறவுகளிடமும் இதனை அறிந்து கொள்ள முடியும். மேலும் நாட்டிய நிகழ்வில் ஆர்வம் உள்ள நண்பர்களையும் அழைத்து வந்து நிகழ்ச்சி சிறப்புற நடைபெற ஆவன செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றியுடன்,
திரு. திருமதி. சிவா, மோகனா ஈஸ்வரமூர்த்தி குடும்பத்தினர்

Invitation_preview_1 Invitation_preview_2