பண்டிகைகள்

diwali 2013

பண்டிகைகள் ஏன், எதற்காக என்ற கேள்வி ஏதேனும் ஒரு நேரத்தில் நமக்குள் தோன்றத்தான் செய்கிறது. நம் அகத்தையும் புறத்தையும் நன்கு புதுப்பித்துக் கொள்ளவும், புத்துணர்ச்சியையும் மறுமலர்ச்சியையும் ஏற்படுத்திக் கொள்ளவும் ஏற்படுத்தப் பட்டவையே, பண்டிகைகள்! குறிப்பாக, தீபாவளி பண்டிகைக்குள் இருக்கிற தத்துவங்களை அறிவதும் தெளிவதும் அவசியம்.
ஏன் பட்டாசு வெடிக்கிறோம்?
பகவான் ஸ்ரீகிருஷ்ணர், நரகாசுரனை வதம் செய்தார். ‘என்னுடைய இறந்த நாளை அனைவரும் கொண்டாட வேண்டும்’ என நரகாசுரன், ஸ்ரீகிருஷ்ணரிடம் வேண்டினான் என்கின்றன, புராணங்கள். அதனால்தான் பட்டாசு வெடித்து, தீபாவளி கொண்டாடுகிறோம். பேராசை, பெருங்கோபம், பொருட்பற்று, பகுத்தறிவின்மை, கர்வம், பொறாமை ஆகிய தீய குணங்கள், அரக்கர்களுக்கு இணையானவை. பட்டாசைப்போல் இவை பொசுங்கி, நாம் நற்குணங்களுடன் திகழவேண்டும் என்கிற தத்துவமும் இதில் அடங்கியிருக்கிறது.
எண்ணெய் தேய்த்து நீராடுவது ஏன்?
நல்லெண்ணெய்யில், ஸ்ரீமகாலட்சுமி சிறந்து திகழ்கிறாள்; நீராடப் பயன்படுத்து கிற வெந்நீரில், கங்காதேவி வாசம் செய்கிறாள் என்கின்றன சாஸ்திரங்கள். ‘ஜலே கங்கா, தைலே லக்ஷ்மீ’ என்பார்கள். அதனால்தான், தீபாவளி நாளில், ”கங்கா ஸ்நானம் ஆச்சா?” என்று விசாரித்துக் கொள்கிறோம். எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால், உடலில் இருக்கிற மாசு களைகிறது. உள்ளத்து மாசுகளையும் களைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம். இதனை சம்ஸ்கிருதத்தில் ‘தோஷ அபநயநம்’ என்பார்கள். அதாவது, குறைகளை நீக்குவது என்று அர்த்தம்.
புத்தாடை எதற்காக?
குறைகளைத் தள்ளி, நற்குணங்களைப் பெறுவதே புத்தாடை அணிவதன் நோக்கம்.
‘குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்’ என்கிறார் திருவள்ளுவர். இதனை சற்றே மாற்றி, நம் குணங்களை நாமே ஆய்வுக்கு எடுத்துக் கொள்வது சிறப்பு! ஒருவன் வாழ்வில் வெற்றிபெற வேண்டுமானால், அவன் அதிகமாகத் தூங்கக் கூடாது; நேரங்கெட்ட நேரத்தில் உறங்கக் கூடாது; எப்போதும் சோர்வடையக்கூடாது. சோம்பேறியாக, பயம் கொண்டவனாக, சுருங்கச் செய்யவேண்டிய காரியத்தை நீட்டிச் செய்பவனாக இருக்கக் கூடாது. மனித வளர்ச்சியை தடுக்க வல்லவை, இவை!
ஷட்தோஷா: புருஷேநேஹ ஹாதவ்யா பூதிமிச்சதா
நித்ரா தந்த்ரா பயம் க்ரோத: ஆலஸ்யம் தீர்கஸுத்ரதா
அதாவது, ‘மேன்மையை விரும்பும் மனிதனால் கைவிடப்பட வேண்டிய குணங் கள் (குறைகள்) ஆறு. அவை… உறக்கம், சோர்வு, பயம், கோபம், சோம்பல், காலந் தாழ்த்திச் செயல்படுதல்’ என்கிறது இந்த ஸ்லோகம். இந்தத் தீய குணங்களைத் தள்ளி நற்குணங்களைக் கொள்வதை மனதில் கொண்டு புத்தாடை உடுத்தி, அவரவர் களுக்குரிய சமயச் சின்னங்களை அணிவது அவசியம். நற்குணங் களை வளர்க்க, இதன் மூலம் சங்கல்பம் செய்கிறோம்.
பெரியோரை வணங்குதல்
எண்ணெய் தேய்த்து நீராடி, புத்தாடை உடுத்தி, இறைவனையும் பெரியோர்களை வணங்குகிறோம். விடிகாலையில் எழுந்து, தான் அன்று செய்ய வேண்டிய நல்லறப் பணிகளையும். ஒப்புயர்வற்ற பரம்பொருளையும் சிந்தித்து, தாய் தந்தையைத் தவறாமல் தொழ வேண்டும் என்பதே சான்றோர்கள் கண்ட வாழ்வியல் கோட்பாடு என்கிறது ஆசாரக் கோவை. பெரியோர்களைப் பணிந்து, சாஷ் டாங்கமாக நமஸ்கரிப்பது என்பது, நம் ஆணவ- அகங்காரத்தை போக்கும்; நம்மைச் செம்மைப்படுத்தும்; ஆனந்தம் தரும்.
விளக்கேற்றி வழிபடுதல்
தீபம் என்றால் விளக்கு; ஆவளி என்றால் வரிசை. தீபாவளி என்றால், தீபங்களின் வரிசை! முற்காலங்களில், தீபாவளியன்று கார்த்திகை மாதத்தைப் போல, வரிசையாக விளக்கேற்றி வழிபடுவார்கள். அந்த வழக்கம் காலப்போக்கில் மாறிவிட்டது. தீபாவளி அன்று, வரிசையாக தீபங்களை ஏற்றி வைத்து வழிபடுவதே உத்தமம்! ‘அறிவாகிய விளக்கை ஏற்றி, பரம்பொருளை அறிந்துகொள்ளுங்கள். இறையருளால் உங்கள் துன்பங்கள் எல்லாம் நீங்கும். மெய்ப்பொருள் தத்துவத்தை, தகுந்த குருநாதர் விளக்கிச் சொன்னால், அது தெளிவாக விளங்கும்’ என்கிறார் திருமூலர். ‘தனக்குப் பாழ்அற்றறிவு இல்லாத உடம்பு’ என்கிறது நான்மணிக் கடிகை. மனிதனின் மாபெரும் சிறப்பே அறிவுதான். ஆகவே, அகத்தில் உள்ள அறிவொளியைப் புறத்தில் வழிபடுவதே, ஒளி வழிபாட்டின் உள்ளார்ந்த தத்துவம்.
இனிப்பு வழங்குதல்
இனிப்புகளை இறைவனுக்கு நைவேத்தியம் செய்து, அனைவருக்கும் வழங்குகிறோம். எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும்; ஆனந்தமாக இருக்க வேண்டும் என்கிற பரந்த மனப்பான்மையின் வெளிப்பாடு இது! இந்த உலகில், நாம் அழுவதற்காகப் பிறக்கவில்லை. எல்லோரும் இன்புற்று வாழ் வதற்கே பிறந்திருக்கிறோம். இன்பத்தை நாம் உணர்ந்து, பிறருக்கும் அந்த இன்பத்தை வழங்க வேண்டும். அதனை வலியுறுத்தவே, இனிப்பு வழங்குகிறோம். இந்தச் செயலால், அன்பு நிறைந்ததாக மாறிவிடும் இந்த உலகம்!
மேலும் இந்த நன்னாளில், ஸ்ரீமகாலட்சுமி மற்றும் ஸ்ரீகுபேர பூஜைகளைச் செய்து வழிபடுகின்றனர். எதைச் செய்தாலும், அதன் தத்துவத்தை அறிந்து, உணர்ந்து செய்யுங்கள். இல்லையெனில், வருங்காலத் தலைமுறையினர் இதனை அர்த்தமற்றது என்று ஒதுக்கிவிடுவர். குழந்தைகளுக்கு இவற்றை எடுத்துச் சொல்லி, தீபாவளித் திருநாளை, மனம் தித்திக்கக் கொண்டாடுங்கள்!

நன்றி : சுவாமி ஓங்காரநந்தர்

குளிர் கால ஒன்றுகூடல் 2013 சிறப்புக் கூட்டம் .

IMV OSA Canada Logoவணக்கம்,  

இதுவரை கிடைக்கப் பெற்ற நிகழ்ச்சிகளை ஒழுங்கு நிரல் படுத்தல்  ,உணவு ஒழுங்குகள், அரங்க ஒழுங்குகள் என்ற அடிப்படையில் வருகின்ற ஞாயிறுக்கிழமை (03.11.2013) அன்று காலை 10:00 மணியளவில் திரு.மூர்த்தி அவர்களின் இல்லத்தில் கூடுவதென தீர்மானிக்கப் பட்டுள்ளது.எனவே அங்கத்தவர்கள் நலன் விரும்பிகள் கலந்து கொண்டு தங்கள் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் வழங்கி சிறப்புற நடாத்த ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

முக்கிய குறிப்பு இதுவரை நிகழ்ச்சிகளை பதிவு செய்து கொள்ளாதவர்கள் 31.Oct. 2013 இற்கு முன்னர் உரியவர்களிடம் பதிவு செய்து கொள்ளவும்.

இடம்: திரு.மூர்த்தி அவர்களின் இல்லம் (27 loggerhead grove)

காலம்: 03.11 2013காலை – 10:00  மணி.

நன்றி.

நிர்வாகக் குழு.

திருமதி நடராசா செல்லம்மா

துயர்பகிர்வோம்
sellamaமண்ணில் : 02.29.1930
விண்ணில் 09.30.2013
வளலாயைப் பிறப்பிடமாகவும் வவுனியா, வளலாய் ஆகிய இடங்களில் வசித்தவருமான திருமதி நடராசா செல்லம்மா அவர்கள் 09.30.2013 அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான, கந்தையா நடராசாவின் அன்பு மனைவியும், நாகமுத்து, காமாச்சிப்பிள்ளை தம்பதியினரின் அருமை மகளும், கந்தையா, நல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும், நாகமுத்து, திருநாவுக்கரசு ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
அன்னார் இராசகுமார் (லண்டன்), பிரதாபன், (பிரான்ஸ்), சுகந்தி (இலங்கை) மணிவண்ணன், (லண்டன், ஐக்கிய இராச்சியம்.) சுபாங்கி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும் சாந்தினி பிரதாபன், இராசேந்திரம், கவிதா மணிவண்ணன், ஞானசேகரன் ஆகியோரின் ஆசை மாமியாரும் பிரசாந்த் சங்கீத்தா, சாரங்கி, லக்ஷ(க் ஷ)காந்த், கோபிகா, அபிஷன், அனிஸ், அகிஸ், அஷ்னி, அஷ்வின் ஆகியோரின் அன்புமிகு பாட்டியுமாவார்.
அன்னாரின் இறுதிச் சடங்குகள் 10.03.2013 வியாழக்கிழமை அன்று வளலாயில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, அவர் பூதவுடல கூனங்காடு, வளலாய் இந்து மாயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது
தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
சுகந்தி (இலங்கை) 94 217900384
மணிவண்ணன்( இலண்டன் )44 2036325437
பிரதாபன்( பிரான்ஸ் )33 143849621
கீதா( பிரான்ஸ் )33 247270282

Winter Get-Together 2013

prizes-and-awards-52இடைக்காடு மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கம் – கனடா கிளையின்  குளிர் கால ஒன்று கூடல் 2013.
sep.22 ,2013 இல் கூடிய பொதுக் கூட்டத்தில் Dec.25,2013 ம் திகதி குளிர் கால ஒன்று கூடல் கூடுவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதற்கமைவாக இவ் வருடமும் நாம் புதிய பல எம்மவர்களின் கலை நிகழ்ச்சியுடன் எமது இடைக்காடு மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கம் -கனடா வின் 20 ஆவது நிறைவு விழாவினை பூர்த்தி செய்ததின் நினைவாக மலர் ஒன்றினை வெளியிட உள்ளோம் .
கலைநிகழ்ச்சிகள் .
முக்கியமாக கலை நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்பவர்கள் தயவு செய்து ஒரு சில முக்கிய குறிப்புக்களை கவனத்தில் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.
1.நிகழ்ச்சிகளை Oct.31.2013 இற்கு முன்னர் உங்கள் விபரங்களை உரியவர்களிடம் பதிவு செய்து கொள்ளவும்.
2.நிகழ்ச்சிகளை தரம் குன்றாமல் குழு நிகழ்வாகவோ அல்லது ஒரு நிகழ்வில் பலர் பங்கு பற்று முகமாக சிறப்புற அமைத்துக் கொள்ளவும். மேலதிக விபரங்களுக்கு உரியவர்களிடம் தொடர்பு கொள்ளவும்.
3.நிகழ்வுகளை குறித்த நேரத்தில் ஆரம்பிப்பதற்கும் குறித்த நேரத்தில் முடிப்பதற்கும் தயார்ப் படுத்திக்கொள்ளவும்.
4.ஒரு சில தனி நபர் நிகழ்வுகளுக்கு மட்டும் நேரம் இருப்பதினால் முதல் பதியும் நபர்களின் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படும்.
நிகழ்வுகளை பதிவு செய்வதற்கு ,
திரு.மூர்த்தி . (416) 292-2453
திரு.பொன்னிஸ்வரன் . (416) 439 -8613
திரு  . செல்வராஜ்  . (905) 796-3294
திருமதி.பத்மா நவகுமார். (416) 759-0063
திரு.ஜெயகுமார். (416) 290-6816
கட்டண விபரம்.
Family – $50
senior couples- $30
single or over 21 working people- $20
மேலும் விபரங்களை அறிய நிர்வாகத்தினருடன் தொடர்பு கொள்ளவும்.
நாம் இவ் ஒன்று கூடலானது எங்கு நடைபெறும் என்பதனை உரிய ஒழுங்குகள் செய்ததன் பின்னர் அறியத் தருகின்றோம்
நன்றி.
நிர்வாகம் .
24-09-2013

Gala Fundraiser 2013 Photos

Update By: Website Committee
Date: September 21, 2013

IMG_0183

The gala fundraier 2013 photos are now available for viewing. You can view them in the gallery. If there are any photos that you would like us to remove, please contact us.

Gala 2013

IMV OSA Canada Logo

20-20-20 (!)

இது என்ன மூன்று 20. இதுதான்  Sep 2/2013 இல் ஒரு இனிய மாலைப் பொழுதில் இடைக்காடு பழைய மாணவர் சங்கம் கனடாவின்  20 ஆவது ஆண்டு நிறைவினை முதன்மைப் படுத்தி புதிய ஒரு முயற்ச்சியாகிய ” நிதி சேகரிப்பிற்கான விருந்துபச்சாரம்”( Gala dinner Fundraiser)  .

20 ஆவது வருடத்தில் 20 dollar இல் 20 ஆயிரம் dollar ஐ நோக்கிய இம் முயற்ச்சியே ஆகும்.(1000 tickets)

பொதுக் கூட்டம் (Canada)

IMV OSA Canada Logo

குளிர் கால ஒன்று கூடல் 2013 

Idaikkadu 2013 Meeting 22.09

வணக்கம். நாம் வருடாவருடம் நடாத்தி வரும் குளிர் கால ஒன்று கூடல் 2013 பற்றிய ஆலோசனை பகிர்தலும் எதிர் கால செயற்பாடுகள் பற்றிய கருத்துக்கள் உள்வாங்கல் என்ற அடிப்படையில் வருகின்ற ஞாயிறுக்கிழமை (22.09.2013) அன்று காலை 10:00 மணியளவில் திரு.மூர்த்தி அவர்களின் இல்லத்தில் கூடுவதென தீர்மானிக்கப் பட்டுள்ளது.எனவே அங்கத்தவர்கள் நலன் விரும்பிகள் கலந்து கொண்டு தங்கள் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் வழங்கி சிறப்புற நடாத்த ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

இடம்: திரு.மூர்த்தி அவர்களின் இல்லம் (27 loggerhead grove)

காலம்: 22.09 2013. காலை – 10:00  மணி.

நன்றி.

நிர்வாகக் குழு.

புதிய நிர்வாக சபை

logoஇடைக்காடு பழைய மாணவர் சங்கம்(இடைக்காடு)  2013 ஆண்டிற்கான புதிய நிர்வாக சபையினை தெரிவு செய்துள்ளது.

ISO 2013 committee