நன்றிகள்

Thank

இடைக்காடு பழைய மாணவர் சங்கத்தின் (கனடா) 9 ஆவது குளிர்கால ஒன்றுகூடலும் 20 ஆவது நிறைவினை முன்னிட்டு வெளிவந்த இத்திமலரும்,இந்த பொல்லாத காலநிலையிலும் (Bad weather) இனிதே நிறைவுற்றுள்ளது. இந் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும், கலைநிகழ்ச்சிகளை வழங்கிய கலைஞர்களுக்கும், அதனை தமது நிர்வாக திறமையாகவும்,நேர்த்தியாகவும், ஒழுங்கமைத்து வழங்கிய பெற்றோர்களுக்கும், அதனை கற்றுக்கொடுத்தவர்களுக்கும்,பரிசில்களை வழங்கிய குடும்பத்தினருக்கும், DJ வழங்கியவர்களுக்கும்,இந்த மண்டபத்தை ஒழுங்கு செய்தவர்களுக்கும், உணவினை சுவைபட தயாரித்து வழங்கியோருக்கும், Trophy வழங்கிய ஏகாம்பரம் குடும்பத்தினருக்கும், இத்திமலரினை வெளிக்கொணர்வதுக்கு அயராது உழைத்த மலர்க் குழுவினருக்கும், இவ் ஆவணப்படுத்தலில் தமது அனுபவப்பகிர்வினை பதிவு செய்தவர்களுக்கும் நேர்த்தியான முறையில் புகைப்பட, ஒளிப்பட பதிவுகளை செய்தவர்களுக்கும், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர்களுக்கும் மற்றும் அனைத்து வகையிலும் தமது ஒத்துழைப்புகளை வழங்கிய அனைவருக்கும் மேலும் இதில் நாம் குறிப்பிட தவறிய அனைவருக்கும் இடைக்காடு பழைய மாணவர் சங்கம் – கனடா தனது இதயம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றது.

முக்கிய அறிவித்தல்

DSC00815

குளிர்கால ஒன்றுகூடல், இத்தி மலர் வெளியீடு  திட்டமிட்டபடி நடைபெறும்

நிகழ்வு நடைபெறும் நேரம் – 4.00 pm – 12.00 Midnight

Toronto பெரும் பாகத்தில் ஏற்பட்ட பனிப்புயலினால் நாம் பல வகையான அசௌகரியங்களுக்கு உள்ளானபோதும் நிலைமைகள் வழமைக்கு விரைவாக திரும்பி வருகின்றன. இந்தவகையில் நாம் திட்டமிட்டபடி இடைக்காடு பழைய மாணவர் சங்கம்-கனடா நடாத்தும் குளிர்கால ஒன்றுகூடல் – 2013  நடைபெறும் என்பதனை தெரிவித்துக் கொள்ளுகின்றோம். (Grand Luxe Banquet Hall) இதில் ஏதும் மாற்றம் ஏற்படின் நாளை (25-12 -2013 ) பகல் 12.00 மணிக்கு இற்கு முன்னர் அறியத்தருகின்றோம்.

முக்கிய குறிப்பு: நீங்கள் நிகழ்வுக்கு போகுமுன்னர் தயவு செய்து இணையதளத்தை பார்வையிட்டு எங்கு என்பதனை உறுதி செய்து கொள்ளவும்.

இத்தி மலர்

Idaikkadu cover

இதோ மலர்கிறது  இடைக்காடு ம. வி. பழைய மாணவர் சங்கம் – கனடா வின் “இத்தி மலர்”

 

குயிலினிது யாழினிது கொம்புத்தேன் மிக இனிது

கல்லாலும் புதராலும் பல காலம் கறைபடிந்த

பொல்லாத இடைக்காட்டுப் புறநிலத்தில் புதுமையதாய்

பல்லாரும் பலகலைகள் பயின்றின்று பயன்பெறவே

வல்லார்செய் கலைக்கூட இத்திமலர் துலங்குகிறதே.

அன்போடு அழைக்கின்றோம்

raffle

25/12/2013 இல் நடைபெற உள்ள குளிர்கால ஒன்று கூடல் மற்றும் இத்தி மலர் வெளியீட்டை சிறப்புற நடத்துமுகமாக DOOR PRIZES அளிக்க

விரும்புவோர் திரு. மூர்த்தி அவர்களிடம் தொடர்பு கொள்ளவும் –  (416) 292 – 2453

திரு வேலுப்பிள்ளை கந்தசாமி

kanthsamy 2013

துயர்பகிர்வோம்

உதயம்: 1920-03-30               மறைவு: 2013-12-16

திரு வேலுப்பிள்ளை கந்தசாமி (மாப்பாண வாத்தியார்) இறைபதமடைந்தார்.

இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை கந்தசாமி (இளைப்பாறிய ஆசிரியர்) திருகோணமலையில் 2013-12-16 திங்கள் இரவு இறைபதமடைந்தார்.

அன்னார் இளைப்பாறிய ஆசிரியை மங்கையர்க்கரசியின் அன்புக் கணவரும், முத்துவேல் (அமெரிக்கா), செல்வவேல் ( அமெரிக்கா), முருகவேல் (கிளிநொச்சிக் கல்விப்பணிப்பாளர்), தெய்வராணி (திருகோணமலை), செல்வராணி (ஆசிரியை, திருகோணமலை), கதிரவேல் (அப்பு, அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தந்தையுமாவார். அன்னார் ரோகிணி, சுசீலா, அனுஷா, செல்வநாதன், இடைக்காடர் சின்னையா, சிவமதி ஆகியோரின் அன்பு மாமனாரும் சுஜா, கஜன், பிரசன்னா, பிரித்திகா, துளசிகா, தர்சிகா, சாரங்கன், சரண்யா, சிந்துஜா, சகானா, சிறீராம், விசால் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை செவ்வாய்க் கிழமை (2013-12-17) வேல்வாசம் தேற்றாவடி இடைக்காட்டில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சாமித்திடல் மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

நிகழ்ச்சிகள் ஒழுங்குஅமைப்புக்கான பொதுக் கூட்டம்

* The time and location of the winter get-together has not changed due to the freezing rain. Please proceed normally.

WinterGetTogether2013Ticketநிகழ்ச்சிகள் ஒழுங்குஅமைப்புக்கான  பொதுக் கூட்டம்

15.12.2013 (ஞாயிறு)  காலை 10: 00 மணிக்கு தலைவரின் இல்லத்தில் நடைபெறும். அனைவரும் இந் நிகழ்ச்சி ஒழுங்கமைப்பதில் பங்குபற்றுமாறு வேண்டுகின்றோம்.

இடம்: திரு. மூர்த்தி அவர்களின் இல்லம் (27 Loggerhead Grove)

காலம்: 15/12/ 2013 காலை – 10:00 மணி

திரு. ஆறுமுகம் கந்தையா

Thipam

திரு. ஆறுமுகம் கந்தையா காலமானார்

 

இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திரு. ஆறுமுகம் கந்தையா அவர்கள் 06.12.2013 அன்று இடைக்காட்டில் காலமானார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 06.12.2013 அன்று இடைக்காட்டில் நடைபெற்றது. அன்னாரின் துயரத்தில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.

 

திருமதி. குழந்தையார் கதிர்காமு (கதிரித்தம்பி)

kathi

துயர்பகிர்வோம

திருமதி.குழந்தையார் கதிர்காமு (கதிரித்தம்பி) காலமானார்.

இடைக்காட்டைப்  பிறப்பிடமாகவும்  வதிவிடமாகவும்  கொண்ட  திருமதி.குழந்தையார் கதிர்காமு (கதிரித்தம்பி) இன்று (07.12.2013) இடைக்காட்டில்  காலமானார்.

இவர்காலம்சென்றகதிர்காமு (கதிரித்தம்பி) வின்அன்புமனைவியும், கணபதிப்பிள்ளை(இடைக்காடு), காலம்சென்றசரஸ்வதி, கந்தையா(கனடா), சறோஜினி(இலங்கை), அருட்செல்வன் (அவுஸ்திரேலியா), ராஜசேகர் (இலங்கை), ஆறுமுகசாமி (இலண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

குளிர்கால ஒன்றுகூடல் 2013

web admin

கனடா பழைய மாணவர் சங்கம் 2013

குளிர்கால ஒன்றுகூடல்

 
இவ் வருடத்திற்கான குளிர்கால ஒன்றுகூடல் 25.12.2013 அன்று (புதன்கிழமை) பிற்பகல் 4:00 p.m மணிக்கு ஆரம்பமாகி இரவு 11:00 p.m மணிவரையும் எமது சிறார்கள் முதல் முதியோர் வரை கலை நிகழ்ச்சிகளை குதூகலமாக வழங்க இருக்கின்றார்கள் . அன்றைய தினம் அனைவரும் உங்கள் நேரங்களை ஒதுக்கி இந் நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு வேண்டுகின்றோம். இவ் வருடம் சிறப்பு நிகழ்வாக கனடா பழைய மாணவர் சங்கத்தின் பெரு முயற்ச்சியின் பயனாக ஆவணப்படுத்தப்பட்டுள்ள இடைக்காடு இத்தி மலர் வெளியீடும் இடம்பெறும் என்பதனை அறியத்தருகின்றோம். உங்கள் அனைவரின் நல் இதயங்களின் பூரண உத்துழைப்புடன் இந் நிகழ்வினை சிறப்புற நடத்த உதவுமாறு வேண்டிநிற்கின்றோம்.

பண்டிகைகள்

diwali 2013

பண்டிகைகள் ஏன், எதற்காக என்ற கேள்வி ஏதேனும் ஒரு நேரத்தில் நமக்குள் தோன்றத்தான் செய்கிறது. நம் அகத்தையும் புறத்தையும் நன்கு புதுப்பித்துக் கொள்ளவும், புத்துணர்ச்சியையும் மறுமலர்ச்சியையும் ஏற்படுத்திக் கொள்ளவும் ஏற்படுத்தப் பட்டவையே, பண்டிகைகள்! குறிப்பாக, தீபாவளி பண்டிகைக்குள் இருக்கிற தத்துவங்களை அறிவதும் தெளிவதும் அவசியம்.
ஏன் பட்டாசு வெடிக்கிறோம்?
பகவான் ஸ்ரீகிருஷ்ணர், நரகாசுரனை வதம் செய்தார். ‘என்னுடைய இறந்த நாளை அனைவரும் கொண்டாட வேண்டும்’ என நரகாசுரன், ஸ்ரீகிருஷ்ணரிடம் வேண்டினான் என்கின்றன, புராணங்கள். அதனால்தான் பட்டாசு வெடித்து, தீபாவளி கொண்டாடுகிறோம். பேராசை, பெருங்கோபம், பொருட்பற்று, பகுத்தறிவின்மை, கர்வம், பொறாமை ஆகிய தீய குணங்கள், அரக்கர்களுக்கு இணையானவை. பட்டாசைப்போல் இவை பொசுங்கி, நாம் நற்குணங்களுடன் திகழவேண்டும் என்கிற தத்துவமும் இதில் அடங்கியிருக்கிறது.
எண்ணெய் தேய்த்து நீராடுவது ஏன்?
நல்லெண்ணெய்யில், ஸ்ரீமகாலட்சுமி சிறந்து திகழ்கிறாள்; நீராடப் பயன்படுத்து கிற வெந்நீரில், கங்காதேவி வாசம் செய்கிறாள் என்கின்றன சாஸ்திரங்கள். ‘ஜலே கங்கா, தைலே லக்ஷ்மீ’ என்பார்கள். அதனால்தான், தீபாவளி நாளில், ”கங்கா ஸ்நானம் ஆச்சா?” என்று விசாரித்துக் கொள்கிறோம். எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால், உடலில் இருக்கிற மாசு களைகிறது. உள்ளத்து மாசுகளையும் களைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம். இதனை சம்ஸ்கிருதத்தில் ‘தோஷ அபநயநம்’ என்பார்கள். அதாவது, குறைகளை நீக்குவது என்று அர்த்தம்.
புத்தாடை எதற்காக?
குறைகளைத் தள்ளி, நற்குணங்களைப் பெறுவதே புத்தாடை அணிவதன் நோக்கம்.
‘குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்’ என்கிறார் திருவள்ளுவர். இதனை சற்றே மாற்றி, நம் குணங்களை நாமே ஆய்வுக்கு எடுத்துக் கொள்வது சிறப்பு! ஒருவன் வாழ்வில் வெற்றிபெற வேண்டுமானால், அவன் அதிகமாகத் தூங்கக் கூடாது; நேரங்கெட்ட நேரத்தில் உறங்கக் கூடாது; எப்போதும் சோர்வடையக்கூடாது. சோம்பேறியாக, பயம் கொண்டவனாக, சுருங்கச் செய்யவேண்டிய காரியத்தை நீட்டிச் செய்பவனாக இருக்கக் கூடாது. மனித வளர்ச்சியை தடுக்க வல்லவை, இவை!
ஷட்தோஷா: புருஷேநேஹ ஹாதவ்யா பூதிமிச்சதா
நித்ரா தந்த்ரா பயம் க்ரோத: ஆலஸ்யம் தீர்கஸுத்ரதா
அதாவது, ‘மேன்மையை விரும்பும் மனிதனால் கைவிடப்பட வேண்டிய குணங் கள் (குறைகள்) ஆறு. அவை… உறக்கம், சோர்வு, பயம், கோபம், சோம்பல், காலந் தாழ்த்திச் செயல்படுதல்’ என்கிறது இந்த ஸ்லோகம். இந்தத் தீய குணங்களைத் தள்ளி நற்குணங்களைக் கொள்வதை மனதில் கொண்டு புத்தாடை உடுத்தி, அவரவர் களுக்குரிய சமயச் சின்னங்களை அணிவது அவசியம். நற்குணங் களை வளர்க்க, இதன் மூலம் சங்கல்பம் செய்கிறோம்.
பெரியோரை வணங்குதல்
எண்ணெய் தேய்த்து நீராடி, புத்தாடை உடுத்தி, இறைவனையும் பெரியோர்களை வணங்குகிறோம். விடிகாலையில் எழுந்து, தான் அன்று செய்ய வேண்டிய நல்லறப் பணிகளையும். ஒப்புயர்வற்ற பரம்பொருளையும் சிந்தித்து, தாய் தந்தையைத் தவறாமல் தொழ வேண்டும் என்பதே சான்றோர்கள் கண்ட வாழ்வியல் கோட்பாடு என்கிறது ஆசாரக் கோவை. பெரியோர்களைப் பணிந்து, சாஷ் டாங்கமாக நமஸ்கரிப்பது என்பது, நம் ஆணவ- அகங்காரத்தை போக்கும்; நம்மைச் செம்மைப்படுத்தும்; ஆனந்தம் தரும்.
விளக்கேற்றி வழிபடுதல்
தீபம் என்றால் விளக்கு; ஆவளி என்றால் வரிசை. தீபாவளி என்றால், தீபங்களின் வரிசை! முற்காலங்களில், தீபாவளியன்று கார்த்திகை மாதத்தைப் போல, வரிசையாக விளக்கேற்றி வழிபடுவார்கள். அந்த வழக்கம் காலப்போக்கில் மாறிவிட்டது. தீபாவளி அன்று, வரிசையாக தீபங்களை ஏற்றி வைத்து வழிபடுவதே உத்தமம்! ‘அறிவாகிய விளக்கை ஏற்றி, பரம்பொருளை அறிந்துகொள்ளுங்கள். இறையருளால் உங்கள் துன்பங்கள் எல்லாம் நீங்கும். மெய்ப்பொருள் தத்துவத்தை, தகுந்த குருநாதர் விளக்கிச் சொன்னால், அது தெளிவாக விளங்கும்’ என்கிறார் திருமூலர். ‘தனக்குப் பாழ்அற்றறிவு இல்லாத உடம்பு’ என்கிறது நான்மணிக் கடிகை. மனிதனின் மாபெரும் சிறப்பே அறிவுதான். ஆகவே, அகத்தில் உள்ள அறிவொளியைப் புறத்தில் வழிபடுவதே, ஒளி வழிபாட்டின் உள்ளார்ந்த தத்துவம்.
இனிப்பு வழங்குதல்
இனிப்புகளை இறைவனுக்கு நைவேத்தியம் செய்து, அனைவருக்கும் வழங்குகிறோம். எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும்; ஆனந்தமாக இருக்க வேண்டும் என்கிற பரந்த மனப்பான்மையின் வெளிப்பாடு இது! இந்த உலகில், நாம் அழுவதற்காகப் பிறக்கவில்லை. எல்லோரும் இன்புற்று வாழ் வதற்கே பிறந்திருக்கிறோம். இன்பத்தை நாம் உணர்ந்து, பிறருக்கும் அந்த இன்பத்தை வழங்க வேண்டும். அதனை வலியுறுத்தவே, இனிப்பு வழங்குகிறோம். இந்தச் செயலால், அன்பு நிறைந்ததாக மாறிவிடும் இந்த உலகம்!
மேலும் இந்த நன்னாளில், ஸ்ரீமகாலட்சுமி மற்றும் ஸ்ரீகுபேர பூஜைகளைச் செய்து வழிபடுகின்றனர். எதைச் செய்தாலும், அதன் தத்துவத்தை அறிந்து, உணர்ந்து செய்யுங்கள். இல்லையெனில், வருங்காலத் தலைமுறையினர் இதனை அர்த்தமற்றது என்று ஒதுக்கிவிடுவர். குழந்தைகளுக்கு இவற்றை எடுத்துச் சொல்லி, தீபாவளித் திருநாளை, மனம் தித்திக்கக் கொண்டாடுங்கள்!

நன்றி : சுவாமி ஓங்காரநந்தர்