வருடாந்த பொதுக்கூட்டம் 30.12.2017

IMG_2089

 

இடைக்காடு பழைய மாணவர் சங்கம் – கனடாவின் வருடாந்த நிர்வாகசபை பொதுக்கூட்டம் 3:00 P.M. மணியளவில் கனடா பெரிய சிவன் ஆலயத்தில் நடைபெற தீர்மானிக்கப்பட்டுள்ளது . அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். Date – 30/12/2017 (Saturday) Time – 3:00 P.M. Place – 1148 Bellamy Rd N, Scarborough, ON M1H 1H2.

நன்றி,

நிர்வாகக்குழு!

நினைவில் அகலா நன்றிகள்.

 நினைவில் அகலா நன்றிகள்.

 

தந்தையாய் வழிகாட்டியாய் வீரத்தின் உருவமாய் அல்லும் பகலும் அயராமல் எம்மை நேரிய வழியில் வாழ்வியலில் வழிகாட்டியாய் விளங்கிய ஆருயிர்த் தந்தை சி.நா.சுப்ரமணியம் அவர்களின் மறைவுச்  செய்தி கேட்டு எம்மை தேற்றி ஆறுதல் படுத்திய உற்றார் , உறவினர்,நண்பர்கள், அனைவர்க்கும் நேரிடையாகவும், தொலைபேசியூடாகவும்,சமூக வலைத்தளங்களினூடாகவும் துயரத்தில் பங்கெடுத்துக் கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டவர்களுக்கும் ,மலர் வளையங்கள் வைத்தவர்களுக்கும் , மலர் தூவி அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், அஞ்சலி உரை  வழங்கியவர்களுக்கும், மருத்துவர்கள்,தாதிமார்களுக்கும் இறுதி வழிஅனுப்பும் கிரியைகளை நேர்த்தியுடன் செய்தவர்களுக்கும், இன்றைய 31 ம் நாள் சாந்தி பிரார்த்தனைகளில் கலந்து கொண்டவர்களுக்கும் ,மற்றும் நாம் குறிப்பிட மறந்த பல வழிகளிலும் எமக்கு உதவிய அன்பு நெஞ்சங்களுக்கும் பணிவுடன் நன்றி நவில்கின்றோம்.
அப்பாவின் இனிய நினைவுகளோடு,

மனைவி

பிள்ளை

Schlarship for SUBRAMANIAM

அமரர் சி.நா.சுப்பிரமணியம் ஞாபகார்த்தபுலமைப்பரிசில் நிதியம்

easwaramoorthy 1114இடைக்காட்டை பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் சின்னதம்பி நாகமுத்து சுப்பிரமணியம் ஞாபகார்த்தமாக, அன்னாரது குடுப்பத்தினரால் “அமரர் சி.நா.சுப்பிரமணியம் ஞாபகார்த்த புலமைப்பரிசில் நிதியம்” 19.12.2017 அன்று தாபிக்கப்பட்டுள்ளது. மேற்படி நிதியமானது யா/இடைக்காடு மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கத்தினால் நிர்வகிக்கப்பட்டுவருகின்றது.
ஆரம்பநிதி : ரூபா500,000.00 (ரூபா. ஐந்நூறு ஆயிரம்)
முதன்மை நோக்கம் : மாணவர்களின் விளையாட்டு செயற்றிறனை ஊக்கப்படுத்தல்
அமரர் சி.நா.சுப்பிரமணியம் அவர்கள் தனது கல்வியை 1934ம் ஆண்டு தொடக்கம் 1944 வரை இடைக்காடு புவனேஸ்வரி வித்தியாலயத்திலும் 1944ம் ஆண்டு தொடக்கம் 1946 வரை புத்தூர் சோமஸ்கந்த கல்லூரியிலும் கல்வி பயின்றார். இவர் கல்வி பயிலும் இறுதிக்காலங்களில் விளையாட்டுகளில் ஈடுபாட்டினை கொண்டிருந்தார். மேலும் இவர் 1966-1967 மற்றும் 1967-1968 காலப்பகுதியில் எமது சங்கத்தின் செயலாளராக கடமை ஆற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பழையமாணவர் சங்கம் – J-IMV

இடைக்காடு பழையமாணவர் சங்கம், கனடா- மாரிகால ஒன்றுகூடல்- 2017

IMG_8707

 

இடைக்காடு பழையமாணவர் சங்கம், கனடா- மாரிகால ஒன்றுகூடல்- 2017

இவ் வருடத்திற்கான குளிர்கால ஒன்று கூடல் 25.12.2017 அன்று பிற்பகல் 4.00 p .m. மணிக்கு ஆரம்பமாகி நள்ளிரவு 12 மணிவரையும் நடைபெறும். எமது சிறார்கள் முதல் முதியோர் வரை கலை நிகழ்ச்சிகளை குதூகலமாக வழங்க இருக்கிறார்கள். அன்றைய தினம் அனைவரும் உங்கள் நேரங்களை ஒதுக்கி இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு வேண்டுகின்றோம்.

மண் வாசம் – 2017

போட்டி வினாக்கள் கீழ் காணப்படும் விடயங்களில் எடுக்கப்படும் :

1) வெள்ளி விழா மலர் -2016

2) இத்தி மலர் -2013

3) பாடசாலை சார்ந்தவை

4) எமது கிராமம் சார்ந்தவை

5) இலக்கியம் சார்ந்தவை

6) ஆன்மிகம் சார்ந்தவை

7) விவசாயம் சார்ந்தவை

8) பொது அறிவு

9) முது மொழிகள்

10) ஊர் நிகழ்வுகள்

இடைவேளைக்குப் பின் வினாக்கொத்து வழங்கப்பட்டு விடைகள் 10:30 மணிக்கு கையளிக்கப்பட வேண்டும்.

இடம் : St. Peter & Paul Banquet Hall 231 Milner Ave Scarborough, ON M1S 5E3

நேரம்: 4 p.m.

கட்டணம்: தனி நபர் $20

முதியவர் (தனி ) $20

குடும்பம் $60

குளிர்கால ஒன்று கூடலின் போது volunteer work செய்ய விரும்பும் மாணவர்கள் தங்கள் பெயர்களை செயற்குழுவிடம் முன்பதிவு செய்யுமாறு வேண்டிக்கொள்ளப்படுகிறீர்கள். தங்கள் பதிவுகளை December 16 ம் திகதிக்கு முதல் மேற்கொள்லாம். மேலும் 2017 ஆம் ஆண்டின் செயற்குழுவின் பதவிக்காலாம் முடிவடைவதால் 2018 ம் ஆண்டிற்கான புதிய செயற்குழு அன்றே தெரிவு செய்யப்படும்.

அனைவரையும் ஒத்துழைக்கும் வண்ணம் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

அன்புடன்,

செயற்குழு  உறுப்பினர்கள்

திரு இரத்தினசபாபதி வைரமுத்து

துயர் பகிர்வோம்

Mr Rathinasabapathi Vairamuthu

திரு இரத்தினசபாபதி வைரமுத்து அவர்கள்

மண்ணில்:
விண்ணில்: நவம்பர் 30 2017
வளலாய் அச்சுவேலியை பிறப்பிடமாகவும் மொன்றியோல் கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு இரத்தினசபாபதி வைரமுத்து (சின்னக்கடவுள்) அவர்கள் இன்று வியாழக்கிழமை (நவம்பர் 30 2017) சிவபதம் அடைந்தார்.
காலஞ்சென்ற திருமதி நாகரத்தினம் இரத்தினசபாபதி அவர்களின் அன்புக் கணவனும்,
காலம் சென்றவர்களான வைரமுத்து செல்லாச்சிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும், முத்துலிங்கம் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் பிரியமான மருகனும்,
காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம், (பெரிய கடவுள்) சிவக்கொழுந்து ஆகியோரின் சகோதரரும்,
காலஞ்சென்ற இராசதுரை, நேசரத்தினம், (அவுஸ்திரேலியா) அன்னரத்தினம், (அவுஸ்திரேலியா) காலஞ்சென்ற குணரத்தினம், செல்வரத்தினம், (அவுஸ்திரேலியா) தங்கரத்தினம் (இலங்கை) ஆகியோரின் பிரியமிகு மைத்துனரும்,
கனடாவில் வசிப்பவர்களான வசந்துராதேவி, சரோஜினிதேவி, கணேசலிங்கம், கணேசானந்தம், மிதிலாதேவி, காலஞ்சென்ற கணேசகுமார், கணேசராஜா, அம்பிகாதேவி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கனடாவில் வசிப்பவர்களான கந்தசாமி, கணேசதாசன், உமா, நிர்மலாதிகுமார், (ஆதி) மாலினி, மகாதேவி, (மைதிலி) மற்றும் சுகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்
கனடாவில் உள்ள பானுஜா, தர்சன், கவீன்தன், துவாரகன், கவுசல்ஜன், ஜோவிதன், சஹானா, பிரியந்தி, கௌவத்ரிகா, பவித்திரன், பிரணவ், நிதின், அஸ்வின் ,தனுஜன், பிந்துஜா, தர்னிக்கா, ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஐஸ்விக்கா, ஆருசன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்படுகின்றனர்.
அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது

 

தகவல்
குடும்பத்தினர்

Funeral Home:
4275, boul. des Sources
Dollard-des-Ormeaux, Quebec
H9B 2A6
Viewing will be held on Saturday
December 2nd, 2017. 5:00pm-9:00pm
சனிக்கிழமை டிசம்பர் 2 2017.
பி.ப. 5:00 மணி – பி.ப.9:00 மணி பார்வைக்கு வைக்கப்படும்
Cremation will be held on Sunday
December 3rd, 2017. 9:00am-1:00pm
இறுதிச் சடங்குகள் மற்றும் தகனம்
டிசம்பர் 3, 2017 மு.ப.9:00 மணி – பி.ப. 1.00 மணி
Contact Numbers:
Ganesh (son): (514) 516-3415
Ananthan (son): (514) 620-6092
Saro (daughter): (514) 696-6003
Ambika (daughter): (514) 747-7989
Rajan (son): (514) 829-7326

மண்ணில் பிறந்து மாண்புற வாழ்ந்து,

மண்ணில் பிறந்து மாண்புற வாழ்ந்து, மண்ணோடு மண்ணாகி……………

Mr Nagamuthu Subramaniyam

ஈழ மண்ணில் பிறந்து புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்துவரும்கால் 22.11.2017 அன்று சிவபதமடைந்த அமரர் நாகமுத்து சுப்ரமணியம் அவர்கள் பற்றிய நீங்காத நினைவுகள்….
இன்று எம்மிடையே வாழ்ந்துவரும் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒருசில மூத்த முன்னோடிகளில் ஒருவராக நேற்றுவரை வாழ்ந்து வந்த திரு நாகமுத்து சுப்ரமணியம் எம்மை விட்டுப் பிரிந்தது அவர் குடும்பத்துக்கு மட்டுமல்ல எம்மூருக்கும் எம் சமுதாயத்துக்கும் பாரிய இழப்பாகவே நாம் கருதுகின்றோம்.
24.2.1926 அன்று எமது தாயகமான இடைக்காட்டில் அவதரித்து அங்கேயே கல்வி கற்று ஓர் அரச உத்தியோகத்தராக தன் வாழ்வினை அமைத்துக் கொண்ட அவர் எமதூரில் தமது உறவினரான சிவகாமிப்பிள்ளை என்பவரை தன் வாழ்க்கைத் துணைவியாகக் கொண்டு சீரிய சிறப்பான இல்லற வாழ்வின் அறுவடையாக ஏழு மழலைகளைப் பெற்றெடுத்தார். பொறுப்புமிக்க ஓர் குடும்பத் தலைவனாக தனது அத்தனை பொறுப்புகளையும் நிறைவேற்றி தன்னைப் போன்று தன் சிறார்களையும் சமூக முன்னோடிகளாக வளர்த்தெடுத்தார்.
தன் குடும்பத்தில் மட்டுமல்ல எமதூரின் பாடசாலை வளர்ச்சியிலும் பற்றுக்கொண்டு தன்னாலான அத்தனை பங்களிப்பையும் மேற்கொண்டு ஓர் சமூக அக்கறையுள்ள குடிமகனாகவும் வாழ்ந்து வந்தார்.
காலம் ஓடியது. எமது தாயகத்தில் நாட்டுப் பிரச்சினை நாழுக்கு நாள் மோசமாகி வந்தது.பலரும் புலம்பெயர்ந்து மேலைத் தேசத்துக்கு குடிபெயர்ந்தனர். அவரும் புலம்பெயர்ந்து கனடாவில் தனது பிள்ளைகளுடன் இணந்துகொண்டார். இங்கு வந்திருந்தாலும் தாயகத்துடன் உள்ள உறவுகளுடனும் ஊருக்கு வேண்டிய உதவிகளையும் மேற்கொண்டு வந்தார்.
புலம்பெயர்ந்த எமதூர் மக்களில் அதிகளவானோர் கனடாவில் தங்கியிருந்ததாலும் உள்நாட்டுப்போரின் காரணமாக அம்மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டும் உள்ளதனாலும் தாயகத்து மக்களுக்கு பொருளாதர உதவியையும் குறிப்பாக பாடசாலை அபிவிருத்திக்கு இங்கு பழைய மாணவர் சங்கத்தினை உருவாக்கி அதன் மூலம் பாடசாலை அபிவிருத்திக்கு பாரிய பங்களிப்பை செய்வதற்கு இவரின் புத்திரர்களும் முன்னோடிகளாகத் தந்தை வழி நின்று, ஏன் அவரைவிட சிறப்பாகச் செயற்படுவதைக்காணும்போது,
தந்தை மகற்றாற்று நன்றி வையத்து முந்தி இருப்பச் செயல் என்பதுபோல் அவ்வாறே
மகன் தந்தைகாற்று முதவி இவன் தந்தை என்னோற்றான் கொல்லெனும் சொல்
என்றவாறு இம் மண்ணிலும் தந்தையும் அவர் தம் மக்களும் இங்கும் மற்றையோருக்கும் முன்னோடியாக திகழ்கின்றனர்.
அது மட்டுமன்றி எமது தாயகத்தில் பாடசாலை கணணிப்பிரிவு, ஊர் விளையாட்டு மைதானம், அண்மையில் தாபிக்கப்பட்ட நம்பிக்கை நிதியம் அதன் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் முதலிய நடவடிக்கைகள் இவர் தமது பிள்ளைகளை எவ்வாறு நெறிப்படித்தியுள்ளார் என்பதை எமக்குக் காட்டி நிற்கின்றன.
பிறப்பு எப்படி இயற்கையானதோ மரணமும் அவ்வாறு இயற்கையானதே.
தான் பூரணமான வாழ்வை வாழ்ந்து போகும்போது வெறும் கையுடன் போகவில்லை தனது அடையாளமாக தன்னைபோல்…தன்னைவிட சிறப்பான புத்திரர்களை இக் கனடிய மண்ணில் விட்டுச் சென்றுள்ளார்.
உடல் பிரிந்தாலும் அவர் ஆன்மா என்றுமே இன்புற்றிருப்பதாக.

கனடா வாழ் இடைக்காடு வளலாய் உறவுகள்.
23.11.2017

திரு.நாகமுத்து சுப்ரமணியம்,

துயர் பகிர்வோம்

 

easwaramoorthy 1114

 திரு.நாகமுத்து சுப்ரமணியம்.

மலர்வு: 24 மாசி 1926 உதிர்வு: 22 கார்த்திகை 2017.

 

யாழ்.இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு.நாகமுத்து சுப்ரமணியம்( S.N.மணியம்) அவர்கள் 22-11-2017  புதன்கிழமை  கனடாவில் இறைபதம் எய்தினார்.

அன்னார் காலஞ்சென்ற  நாகமுத்து-சின்னப்பிள்ளை ம்பதிகளின்  அன்பு மகனும், காலஞ்சென்ற  வேலுப்பிள்ளை-செல்லம்மா தம்பதிகளின் அருமை மருமகனும்,

சிவகாமிப்பிள்ளையின் பாசமிகு கணவரும்,

சிதம்பரப்பிள்ளை, சின்னத்துரை, தம்பு, தெய்வானை, ராஜா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
பரமேஸ்வரி, கங்காதேவி, வரலட்சுமி ஆகியோரின் அருமை மைத்துனரும்,

சிவகுமார்,

நவகுமார்,

ஜீவகுமார்,

காலஞ்சென்ற செல்வகுமார்,

சிவச்செல்வி,

ஜெயகுமார்,

வாசுகி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சியாமளா, பத்மாவதி, கலாராணி, குகதாசன், நிவஷா, சரவணபவான் ஆகியோரின்  மாமனாரும்,

துஷ்யன், சுஜிதன், அபிலன், வர்ஷினி, ராதன், அஷ்வினி, அகிலினி, இலக்கியன், பிரணவன், காவியன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது

 

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் :

 

Schedule(s)

Viewing

Date:

Saturday 25/11/2017, 05:00 PM — 09:00 PM

Address:

LOTUS Funeral and Cremation Centre

121 Cityview Drive

 Etobicoke, Ontario M9W 5A8

WWW.Lotusfuneralandcremation.com 

Cremation

Date:

Sunday 26/11/2017, 06:00 AM – 09:00 AM

Address:

LOTUS Funeral and Cremation Centre

121 Cityview Drive

 Etobicoke, Ontario M9W 5A8

WWW.Lotusfuneralandcremation.com 

 
தொடர்புகளுக்கு:
மனைவி — கனடா
416 – 9966816
மகன் – கனடா
416 – 7590063
மகன் – இலங்கை
512 – 223390
071 – 6463701
மகன் – அவுஸ்திரேலியா
612 – 9680 9959
மகள் – அவுஸ்திரேலியா
612 – 96391646
குடும்பத்தினர்.

 

இடைக்காடு பழையமாணவர் சங்கம், கனடா- மாரிகால ஒன்றுகூடல்- 2017

IMG_8707

 

 

நிகழ்ச்சிகள் ஒழுங்கு அமைப்புக்கான பொதுக்கூட்டம். November 4,2017 (சனி ) 3 p.m. மணிளவில் Sirsivakasaivasi இல்லத்தில் நடைபெறும். அனைவரும் பங்குபற்றுமாறு வேண்டுகின்றோம். Place: 3 Pinoak Street Scarborough ON M1X 1W6 Time: November 4, 2017 @ 3 p.m. நன்றி !