இது ஒரு புதிய தொடக்கம்

எமது இனிய உறவுகளே வணக்கம்.!!!

நாம் நேசித்த மண்ணும்,வீடும், சுற்றமும், நாம் வாழ்ந்த கிராமமும் எமக்கு தொலைதூரமாகி  வெகுநாட்கள் சென்று விட்டன. புலம்பெயர்ந்த தேசங்கள் எமது நிரந்தர முகவரிகள் ஆகின.எல்லோர் மனதிலும் எங்கோ ஓரிடத்தில் எமது பழைய நினைவுகள் வந்து வந்து சென்று தான் போகின்றது.இப்போது புலம்பெயர்ந்த தேசங்களில் இரண்டாவது தலைமுறையினர் வாழ்வை ஆரம்பித்துள்ளார்கள்.இருப்பினும் நாம் எங்கு வாழ்ந்தாலும் எப்படி வாழ்ந்தாலும் எமது மண்ணில் வாழ்ந்த காலங்களை நினைக்கும் போதெல்லாம் மனதில்  மகிழ்ச்சியும் புத்துணர்வும் ஏற்படுகின்றது.

இத்தரணத்தில் எமது இளைய தலைமுறையினருக்கு ஒரு சரியான அடித்தளத்தை புலம்பெயர்ந்த தேசத்திலும் எமது தேசத்திலும் இளையோர்கள் மத்தியில் உருவாக்க வேண்டிய ஒரு கடமை பாட்டில் நாம் அனைவரும் ஒரு புள்ளியில் இணைய முனைகின்றோம்.அவர்களுக்கு எம்மாளான  அடிப்படை உதவிகளை செய்து கொடுக்க வேண்டிய கடமைப்பாடு உடையவர்களாக இருக்கிறோம் அல்லவா<>?

கல்வி வளர்ச்சிக்கு பலமான அத்திவாரம் இடுவதும், பொருளாதாரத்தில் தன்னிறை கொண்டு வருதலும், சுய தொழில் முயற்சிக்கு கை  கொடுப்பதும், ஆரோக்கியமான சுகாதார சூழ்நிலையில் வாழ வைப்பதும் ஒரு பலமான ஆரோக்கியமான சமூகத்தை கட்டி எழுப்புவதும் எமது நோக்கமாக அமைகின்றது.

மேற்கூறிய குறிக்கோளை அடைவதற்கு உங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கின்றோம். தனித்துவத்தையும்,கலாச்சார செழுமையையும், நம் இனத்தின் விளிமியங்களையும், ஒரு நல்ல உன்னதமான வளர்ச்சியான சமுதாயத்தை கட்டி எழுப்புவதற்கு இதை ஒரு ஆரம்ப நாளாகவும் ஆரம்ப புள்ளியாகவும் தமிழர் திருநாளாம் தை திருநாளில் ஆரம்பிக்கின்றோம் உங்கள் அனைவருக்கும் நன்றிகள் நன்றிகள் நன்றிகள் அனைவருக்கும் எமது பொங்கல் தின நல் வாழ்த்துக்கள் மீண்டும் சமூக வலை அமைப்பின் ஊடாக மீண்டும் இணைவோம்.