வருடாவருடம் நடைபெறுகின்ற எமது கோடைகால ஒன்றுகூடல்

இந்த ஒன்றுகூடலானது எமது அனைத்து வேலைகளையும் சற்று நிறுத்தி ஊரவர்கள் எல்லோரும் ஒன்றுகூடி சுக நலன்கள் விசாரித்து, எமது பாரம்பரிய விளையாட் டுக்களை கண்டுகளித்து நாமும் பங்கு பற்றி எமது சிறார்களின் சிறந்த எதிர் காலத்தினைக் கட்டி எழுப்புவதே இதன் நோக்கம். அன்றையதினம் வெதுப்பிய உணவுவகைகள்(BBQ)) சிற்றுண்டிகள் தேனீர், குளிர்பானம் பரிமாறப்படும். மற்றும் சிறுவர்களுக்கான பழம் பொறுக்கல் தொடக்கம், காற்பந்து விளையாட்டு, ஓட்டப்போட்டிகள், கயிறுஇழுத்தல் நடைபெறும். காற்பந்து மற்றும் சிறு குழந்தைகள் புதிதாக பதிவு செய்பவர்கள் தமது பதிவுகளை நிகழ்ச்சிகள் ஆரம்பமாவதற்குமுன் விளையாட்டிற்கு பொறுப்பானவர்களிடம் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

இம்முறை PAPER CUPS, FOAM PLATES ஒருமுறை பாவித்தபின் எறிகின்ற பொருட்கள் போன்ற கழிவுகளின் பாவனைக் குறைப்பை கடைப்பிடிக்க வேண்டிய நிலையில் உள்ளோம். இதற்காக சில விசேடமான நடைமுறைகளை செய்யவேண்டியுள்ளது இதனை மைதானத்தில் தெளிவாக அறிவுறுத்தப்படும் அதனை பின்பற்றி நடக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். எமது மேலதிகமான கழிவுகளை நிகழ்வின்பின் விட்டுச் செல்வோமாயின் மேலதிக கட்டணம் செலுத்த வேண்டி வரும்.

நிகழ்ச்சிகள் காலை 9-00 மணிக்கு ஆரம்பமாகி மாலை 8-00 மணிக்கு நிறைவடையும். குறித்த நேரத்தில் திறம்பட நடாத்தி முடிக்க இருப்பதனால் பெற்றோர்களிடமிருந்தும் வயதுவந்த மாணவர்களிடமிருந்தும் அலுவலர்களை இந்த செயற்குழு அன்புடன் எதிர்பார்க்கின்றது.

கட்டணங்கள் – குடும்பம் – 35-00 டொலர்கள்
முதியோர்  தனிநபர் – 15-00 டொலர்கள்
இடம – NEILSON  PARK, SCARBOROUGH, NEILSON & FINCH

காலம் July 21, 2013
நேரம – காலை 9-00 மண – மாலை 8-00 மணி வரை

நன்றி.
அனைவரும் வருக! ஆதரவு தருக!!

Summer Get-Together 2013: Sports Day Itinerary


View Larger Map

Last Modified: July 22, 2013