குளிர்கால ஒன்றுகூடல், இத்தி மலர் வெளியீடு  திட்டமிட்டபடி நடைபெறும்

நிகழ்வு நடைபெறும் நேரம் – 4.00 pm – 12.00 Midnight

Toronto பெரும் பாகத்தில் ஏற்பட்ட பனிப்புயலினால் நாம் பல வகையான அசௌகரியங்களுக்கு உள்ளானபோதும் நிலைமைகள் வழமைக்கு விரைவாக திரும்பி வருகின்றன. இந்தவகையில் நாம் திட்டமிட்டபடி இடைக்காடு பழைய மாணவர் சங்கம்-கனடா நடாத்தும் குளிர்கால ஒன்றுகூடல் – 2013  நடைபெறும் என்பதனை தெரிவித்துக் கொள்ளுகின்றோம். (Grand Luxe Banquet Hall) இதில் ஏதும் மாற்றம் ஏற்படின் நாளை (25-12 -2013 ) பகல் 12.00 மணிக்கு இற்கு முன்னர் அறியத்தருகின்றோம்.

முக்கிய குறிப்பு: நீங்கள் நிகழ்வுக்கு போகுமுன்னர் தயவு செய்து இணையதளத்தை பார்வையிட்டு எங்கு என்பதனை உறுதி செய்து கொள்ளவும்.

இத்தி மலலரில் இருந்து

புலம்பெயர்ந்து வாழும் நாமும் நன்றி மறக்கவில்லை

எப்போது இங்கு வந்தோமோ அப்போதே தொடங்கிவிட்டோம் எம் பணியை

நாம் இப்போது பராயமடைந்த இருபது ஆண்டு இளைஞன்,- படைக்கின்றோம்

”இடைக்காடு இத்திமலர்” என்னும் மலரினை உனக்கு சமர்ப்பணமாய்

நன்றி,
இடைக்காடு பழைய மாணவர் சங்கம் – கனடா

Last Modified: January 15, 2014