தமிழ்
English

21வது பிறந்த நாள் வாழ்த்துக்கள் – ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பமாகட்டும்!

எமது எளிமைமிக்க இடைக்காடு மகாவித்தியாலய பழைய மாணவர்கள் சங்க அமைப்பானது கடந்த சில வருடங்களில் உள்ளமைப்பு நெருக்கடிகளாலும், செயற்பாட்டு நிலைகளில் நிலவும் பிளவுகளினாலும் அது இயங்கும் ஆற்றல் இழந்த நிலையில் இருந்து வருகின்றமை அனைவரும் அறிந்த ஒன்று. இந்த அமைப்பின் ஓர் உறுப்பினன் என்ற உரிமை கொண்ட பிரதிநிதி என்ற வகையில் எமது இன்றைய நிலைமை பற்றி எனது மனக்கண்ணில் தெறித்து நிற்கும் கருத்துக்களை உங்கள் கவனத்துக்கு முன்வைக்க விரும்புகிறேன்.

எமது வழிகாட்டிகளும் எமது இலட்சிய தரிசன ஆத்மாக்களுமான எமது பெற்றோர்கள் தாங்கள் அனுபவித்த, தாங்கள் நேசித்த இடைக்காட்டின் அடையாளங்களை இங்கு கனடாவில் உருவாக்கிட எடுத்த முயற்சிகளை இதுகாலவரை எமது சமூகத்தின் இளம் தளிர்களான நாங்கள் பெரும்பாலும் ஓர் ஓரத்தில் நிற்கும் பார்வையாளர்களாக நின்று அவதானித்து வந்திருக்கின்றோம். அந்த முயற்சியில் அவர்கள் கடந்து வந்துள்ள பாதை மிகவும் கரடுமுரடானது. எமக்கு மகிழ்ச்சிகளைத் தந்த ஒன்று கூடல்களில் இணைந்து கொள்பவர்களின் எண்ணிக்கை வருடா வருடம் குறைந்து கொண்டே வருகிறது. பொதுக்கூட்டங்களில் பங்குபற்றுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, பொதுக் கூட்டங்களின் போது எமது இளைஞர்கள் மற்றும் பெண்கள் பங்கு பற்றுவதென்பது பூஜ்ஜியமாகியுள்ளது.

இங்கு இளைஞர்களின் பங்குபற்றும் எண்ணிக்கை பூஜ்ஜியத்தை அடைந்திருப்பதானது உங்களிற் பலரால் கற்பனை பண்ணிப்பார்க்கக் கூடிய அளவையும் விட ஓர் அச்சம் தரும் நிலையை எட்டியுள்ளது. இந்நிலையை மாற்றி எதிர்வரும் பத்து வருடங்களில் இடைக்காடு மகாவித்தியாலய பழைய மாணவர்கள் சங்க அமைப்பானது கணிசமான இளைஞர்களைக் கொண்டதாக இருக்க ஆவன செய்ய வேண்டும். எதிர்வரும் அடுத்த 20 ஆண்டுகளில், அனைவரும் என்றில்லாவிட்டாலும் பெரும்பாலான எண்ணிக்கை கொண்ட எம்  இளைஞர்கள் எமது இந்த அமைப்பில் இணைந்து செயலாற்றும் நிலைமை ஏற்பட வேண்டும்.

எதிர்வரும் பத்தாண்டுகளில் எமது மூத்த தலைமுறையினர் தமது அறிவார்ந்த அனுபவங்களை அவர்களின் இளைய தலைமுறையினருக்கு பரிமாற்றம் செய்வதென்பதே இங்கு சரியான கண்ணோட்டமாகும். இல்லாவிட்டால், யார் எமது எதிர்கால அறிவார்ந்தோர், எமது வரலாற்றைப் புதிய தலைமுறைக்கு பரிமாற்றம் செய்வார்? எமது தந்தையர் பிறந்து விளையாடி வளர்ந்த பிரதேசமான இடைக்காடு ஏன் இடை – காடு என ஆனது என எனது பிள்ளைகள் கேட்கிறபோது நான் எந்தப் பதிலையும் சொல்ல முடியாதவனாக நிற்கும் நிலை ஏற்படும். எனக்கு மட்டுமல்ல இங்கு எவருக்கும் அந்நிலையே ஏற்படும். இதனால் எக்காலத்துக்கும் இழக்கப் போகிறவைகள் உங்களது அரிய அனுபவங்களே! உங்களிடம் பல்லாண்டுகளாகச் சேர்ந்திருக்கும் ஞானங்களே! உங்களின் நீண்ட பயண போராட்டங்களே!

எங்களிடையே நிலவும் உள்ளமைப்பு நெருக்கடிகளை ஒரு கணம் விலக்கி வைப்போம். பிரதானமான விடயங்களில் அவை சிறியவையானாலும் எமது கவனங்களை அவற்றைக் குறித்து செலுத்துவோம்.

பொதுவாக எமது இளைஞர்கள் அறைகுறைத் தமிழர்களாகவே உள்ளனர். விதிவிலக்குகளாக சிலர் உள்ளனர். எனினும் அறைகுறை நிலையே பொதுவாக நிலவும் உண்மை. உண்மையில், வருடாந்த குளிர்கால ஒன்று கூடலுக்கான சடங்குகள் தொடர்பான அறிவிப்பாளராக செயற்படுவதற்கு தமிழ் அறிவாற்றல் கொண்ட இளைஞர் ஒருவரை இன்று எம்மத்தியில் காண்பதென்பது மிகவும் சிரமமானதொன்றாகும். இந்த வருடம் குளிர்கால ஒன்று கூடல் விழாவில் தமிழ் அறிவிப்பாளராக நான் செயற்பட்டேன். இதில் 10 சதவீதமான எனது இரவு நேரத்தை தமிழில் பேசுவதற்காக சிரமப்பட்டு ஒதுக்கினாலும் மிகுதி அறிவிப்புக்களை ஆங்கிலத்திலேயே செய்தேன். இது எனது தனி ஒருவனின் பிரச்சினை மட்டுமல்ல, மாறாக, இங்கு எமது சமூகப் பிரச்சினையாகவே உள்ளது.

மூத்த தலைமுறையினரான உங்களை விட்டால் வேறு யார்தான் எமது இளைஞர்களுக்கு தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும், வரலாற்றையும் கற்பிக்கப் போகிறார்கள்? விரைந்து நாம் எம்மை ஒரு ஸ்தாபனமாக உருவாக்காது விட்டால் கனடா இடைக்காடு மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கம் செயற்பாடின்றி வீழ்வது உறுதி! இங்கு தமிழ் இனி மெல்லச் சாகும் என்னும் நிலை ஏற்பட்டேயாகும்.

இன்னும் ஒரு சில தசாப்தங்களில் எமது மூத்த தலைமுறையினராகிய நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்து விடுவீர்கள். நாங்கள் உங்களை மீள…. மீள…. நினைவிற் கொள்வோம். வருடங்கள் கடந்தாலும்….. நாங்கள் உங்கள் பெயர்களை மீண்டும் மீண்டும் உச்சரிப்போம். உங்களைப் பற்றிய நினைவுகள் எமது மனங்களில் நிழலாடிக் கொண்டேயிருக்கும். நீங்கள் இறப்பீர்கள்,; ஆனால் மறக்கப்படமாட்டீர்கள். எனினும் 20 வருடங்கள், 50 ஆண்டுகள், 100 ஆண்டுகள் எனக் கடக்கும் போது நிலைமை என்னவாகும். உங்கள் உடல் எரிக்கப்படலாம் அல்லது புதைக்கப்படலாம் . அதன் பின்னர், உங்கள் பெருமிதங்கள், கம்பீரங்கள், உங்கள் ஆளுமைகள், நீங்கள் சாதித்தவைகள் என்பவற்றில் எதுவுமே எஞ்சாமல் போய்விடக் கூடும் அல்லவா?; சில நாட்குறிப்புகளில் எழுதிவைத்த அடிக்குறிப்புகள் போலவோ அல்லது முக்கியத்தவம் இழந்து மூலைகளுக்குள் தூக்கி வீசப்பட்டு மக்கிக் கொண்டிருக்கும் பழைய ஏடுகள் போல உங்களைப் பற்றிய நினைவுகளும் காலப்போக்கில் மங்கிப் போய்விடும்.

நீங்கள் எங்களுக்கு விட்டுச் செல்லப்பட வேண்டியவைகள் உங்களால் சுய தேவைகளுக்காக சேர்க்கப்படட பொருட் சொத்துகளல்ல. அவை நிலைக்க மாட்டாதவை. மாறாக நாங்கள் விரும்பி வேண்டுவது விலைமதிக்க முடியாத பெருமைமிக்க பாரம்பரியங்கள். 100 ஆண்டுகள் கடந்தாலும் அவையே எங்களில் உங்கள் நினைவுகளை என்றும் மங்காது நீடித்து வாழவைக்கும். அந்த பெருமைமிக்க பாரம்பரியங்களே எமது வரலாற்று ஏடுகளில் முக்கியத்துவம் பெற்று நிற்கும்.

ஆற்றலுடன் இயங்கும் நிலை கொண்ட கனடா இடைக்காடு மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கம் ஒரு பெருமை மிக்க பாரம்பரியம். வலிமையோடும், வளத்தோடும் உள்ள கிராமங்களில் வளரும் இடைக்காடும் ஒரு பெருமைமிக்க பாரம்பரியம். தமிழ்க்கலாச்சாரத்தையும், தமிழ் மொழியையும் தமிழ் வரலாற்றையும் தாங்கி முன்னேற்றகரமாக செயற்படும் ஒரு கனடிய இளைஞர் சமூக அமைப்பை உருவாக்குவது ஒரு பெருமை மிக்க பாரம்பரியமே.

ஆகவே, அனைத்து இடைக்காடு மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கத்தவர் அனைவரும் – இன்னமும் செயலூக்கத்துடன் உள்ளவர்களும், சற்று செயலூக்கம் குன்றி நிற்பவர்களும் என உள்ள அனைவரும் எமக்குள்ளேயே ‘புதிய வரலாற்றைப் படைக்க ஒன்றிணைவோம்’ என்ற அறை கூவலை எழுப்புவோம்.

(தமிழ் ஆக்கம்: சிவா. மு. ஈஸ்வரமூர்த்தி) (தை 14, 2014)


Happy 21st Birthday – A New Chapter Begins!

In the past years, it is not a secret, that we’ve been plagued with internal strife and operational dilemma in our humble Idaikkadu Maha Vidyalayam Old Students Association (IMV OSA) community. As a representative and member of the IMV OSA youth, I’d like to provide my viewpoints on our current situation.

As youth, we’ve stood by, mostly on the sidelines, and watched as our parents – our mentors, our role models – attempt to recreate in Canada, some semblance of what they had and what they loved in Idaikkadu. The path has been rough to say the least. As a collective, we enjoy the get-togethers less and less each year. General meetings have fewer and fewer participants. To top it all off, our youth and female participation in general meetings is 0% as of late. That’s right, 0%.

Please remember, a 0% youth participation rate is an extremely frightening statistic. More so than many of you may imagine. In 10 years, presumably a large quantity of the IMV OSA committee will consist of our current, missing in action, youth. In 20 years, a majority, if not all, of the IMV OSA committee will consist of us youth – or at least thats how it should be.

To put this into perspective, you, our upper generation, have 10 very short years to pass on your wisdom, to us, your youth. If not, who will be our future wisemen? Who will pass on our history? When my children ask me why Idaikkadu is named Idai-kadu, I will have no answer. No one will. Lost forever, will be your years of experience. Lost forever, will be your years of wisdom. Lost forever, will be your years of struggle.

Let’s leave our internal strife at a side for a moment. Let’s focus on a smaller, but perhaps more important matter.

In general, our youth have sub-par Tamil. There are exceptions, but this is a generally agreed upon fact. Honestly, we always have a lot of trouble finding a youth representative to be the Tamil master of ceremonies for the annual winter get-together. I did it this year. I probably spoke a total of 10% of the night in Tamil, reverting to English for the rest. This is my problem as an individual, but also our problem as a community. Who else will teach our youth Tamil language, culture and history, but you, our upper generation? If we don’t organize ourselves soon, the fall of the Canadian IMV OSA will be but a minor issue. Tamil itself will be dead.

In a few decades, many of you will have passed away. We will remember you. We will speak your names in years to come, resuscitating the vestige that is you, if only briefly. You may be dead, but not forgotten. But what about in 20 years? 50 years? 100 years? After you’ve been buried, burned or tossed to sea, nothing will remain. Your ego, your pride, your personality? All lost. Your accomplishments? Vaguely remembered as a footnote in some diary, buried away in archives upon archives of other insignificant accomplishments.

No, what you will leave behind is not so materialistic, selfish or mortal. What you will leave behind, is your immortal legacy. In 100 years, your legacy is all that will keep your memory alive. Your legacy is all that will be significant in the history books. Founding a strong and functionality Canadian IMV OSA, is a legacy. Growing Idaikkadu into one of the strongest and most respected villages, is a legacy. Creating one of the only Canadian youth communities that carry on Tamil culture, Tamil language and Tamil history, is a legacy.

To all IMV OSA members who are active, and especially to all IMV OSA members who are inactive. What do you say? Shall we make some history?

Last Modified: February 11, 2014