20-20-20 (!)

இது என்ன மூன்று 20. இதுதான்  Sep 2/2013 இல் ஒரு இனிய மாலைப் பொழுதில் இடைக்காடு பழைய மாணவர் சங்கம் கனடாவின்  20 ஆவது ஆண்டு நிறைவினை முதன்மைப் படுத்தி புதிய ஒரு முயற்ச்சியாகிய ” நிதி சேகரிப்பிற்கான விருந்துபச்சாரம்”( Gala dinner Fundraiser)  .

20 ஆவது வருடத்தில் 20 dollar இல் 20 ஆயிரம் dollar ஐ நோக்கிய இம் முயற்ச்சியே ஆகும்.(1000 tickets)

IMG_0183

2013 இன் நிர்வாகக் குழுவினரின் நேர்த்தியான திட்டமிடலுக்கு அமைய எமது கிராமத்துக்கு அப்பால் பலரையும் அழைத்து எம்மைப் பற்றி அறிய வைக்கும், அங்கீகாரத்தை பெற வைக்கும் ஒரு முயற்சி. கூடவே எமது சங்கத்திற்கான வளங்களை  பெருப்பித்தல் என்ற நல்ல நோக்கம் நிற்கின்றது என்பதை  நீங்கள் யாபேரும் அறிவீர்கள்.மற்றும் இடைக்காடு பழைய மாணவர் சங்கத்தில் கனடாவில் 1992 இல் இருந்து இன்று வரை உள்ள எமது செயற்ப்பாடுகள், உதவிகள், வரலாற்றையும்; எமது கிராமத்தின் பதிவுகளையும் ஆவணப்படுத்தும்  முகமாக நாம் ஒரு மலரை வெளியிட வேண்டும் என்ற முயற்சிக்கான முன்னோடியாகவும் அமையஇருக்குகின்றது என்பதையும் நாம் இவ்விடத்தில் பதிவு செய்கின்றோம்.

மேலும் Aug 3, 2013 இல் இருந்து Sep 2, 2013இல் 615 Tickets விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 12,300 கனடியன் நிதியினை பெற்ற சங்கமானது இவ் விருந்துபச்சார செலவுக்காக 3,500 dollar களைக் மட்டும் கொடுத்து 8,800 dollar களை சங்கத்துக்கு சேமித்துக் கொடுத்துள்ளது. மேலும் இவ் நிதி சேகரிப்பு தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது என்பதனை உங்களுக்கு இதன் மூலம் அறியத்தருகின்றோம் .இது வரையில் பங்களிப்பு செய்யாதவர்கள் செய்ய விரும்புபவர்கள் நிர்வாகக் குழுவினருடன் தொடர்பு கொண்டு உங்கள் பங்களிப்பினை செய்யவும்.

இறுதியாக, இவ் நிதியினை சேகரிக்க உதவி புரிந்தோருக்கும் இவ் நிகழ்வினை சிறப்புற நடைபெற முன்னணியில், பின்னணியில் உழைத்த அனைவருக்கும், தெளிவான  உறுதியுடன் நிதிப் பங்களிப்பினை செய்த அனைவருக்கும் இடைக்காடு பழைய மாணவர் சங்கம்-கனடா தனது மனமார்ந்த நன்றியினை மீண்டும் தெரிவித்துக் கொள்கின்றது.

நன்றி.

நிர்வாகக்குழு,

இடைக்காடு பழையமாணவர் சங்கம்-கனடா

19/09/2013 .

Last Modified: January 14, 2014