அனைவருக்கும் எமது 2013 ம் வருடத்தின் வாழ்த்துக்கள் . 6.01.2013 இல் எமது இவ் வருடத்தின் நிர்வாகசபையின் கலந்துரையாடல் நடைபெற்றது .இதில் தம்பு முருகேசமூர்த்தி, சுப்ரமணியம் ஜெயகுமார்,நாகமுத்து செல்வபவன் ,கந்தசாமி அருணகிரி, மகாலிங்கசிவம் நந்தகுமார்,தம்பி ஐயா திரிபுரபவன்,ஈஸ்வரமூர்த்தி அனுஷன் ,பொன்னம்பலம் கந்தவேள்,சிதம்பரப்பிள்ளை நல்லதம்பி ஆகியோர் கலந்து கொண்டு தமது அனுபவங்களையும் ஆலோசனை களையும் தெளிவுடன் எடுத்துக் கூறினார்கள் . சென்ற வருடத்தின் அனைத்து நிர்வாக சபையினருக்கும் மற்றும் ஊக்கமும் ஒத்துழைப்பும் வழங்கிய அனைவருக்கும் புதிய நிர்வாக சபையினர் நன்றிகளை தெரிவித்துக்கொண்டு. இவ் வருடத்திற்கான பின்வரும் செயல் திட்டங்கள் பற்றி ஆலோசனை செயப்பட்டது.கடந்த கால செயல் முறையும் நடைமுறை தடங்கல்களும் அவைகளை தவிர்த்தலும் சிறந்த முறையில் செயல்படுவதும். அனைத்து அங்கத் தவர்களையும் இன்முகத்துடன் வரவேற்று அவர்களின் ஆலோசனையுடன் அங்கத்துவபணத்தினை பெற்று கொள்ளுதல்.(குடும்பம் – $15,தனிநபர் – $10, தயவு கூர்ந்து எமது முன்னேற்றத்திற்கு துணை நிற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.)
- கோடைகால குளிர்கால ஒன்று கூடல்கள் பற்றிய திட்டமிடல்கள்.
- இணையத்தள செயல் பாடுகள் . தற்போது நடைமுறையில் உள்ள http://www.idaikkaduweb.com, http://www.idaikkadu.com, http://www.valalai.com ஆகிய வற்றில் சம காலத்தில் செய்திகளை பகிர்ந்து கொள்ளுதல் .
- இடைக்காடு பழைய மாணவர் சங்கம், பாடசாலைகளில் இடையிலான நிர்வாக செயல்பாட்டு கருத்து பரிமாற்றங்களை ஆரோக்கியமான முறையில் பேணுதல் .
- இடைக்காடு பழைய மாணவர் சங்கத்தின் 20 ஆவது வருட பூர்த் தியினை (1992-2012) கொண்டாடுதல்.
- இனி வரும் வருடங்களில் எமது வரவு செலவு கொடுப்பனவுகள் அனைத்தும் நிர்வாக சபையின் அனுமதியுடன் அனைத்து தரப்பினருக்கும் தெரியப் படுத்துதல்.
- இது வரையில் நாம் செய்த ஒரு சில செயல் திட்டங்கள் இன்று வரையில் (6.01.2013) அதற் குரிய பூரணப் படுத்தப்பட்ட தகவல்கள் இன்றி உள்ளன. அதனை உரியவர்களிடம் இருந்து பெற்று பூர்த்தி செய்தல்.
- அனைத்து புலம் பெயர்ந்த உறவுகளுடன் கருத்து பரிமாற்றங்களை நிர்வாக சபையின் ஊடாக பேணுதல்.
- இவ் வருட கோடைகால ஒன்று கூடல் ஜூலை 21, 2013 Neilson Park இல் நடைபெறும் என்பதனை அறியத் தருகின்றோம்.
அனைத்து விடையங்களும் கலந்து ஆலோசிக்கப் பட்டு கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.
நன்றி