இடைக்காடு பழைய மாணவர் சங்கம்-கனடா 31.03.2013 இல் குறித்த நேரத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் கடந்த இரு தாசாப்தமாக இக் கிராமத்தவர்களின் ஒத்துழைப்புடன் இயங்கி வருகின்றது. அவ் வகையில் இச் சங்கமானது தனது இலக்குகளில் அடுத்த படி முறையில் எமது உறவுகளை தெரியப்படுத்தி அவற்றை வலுப் படுத்தி ஆர்வம் ஏற்ப்படுத்தும் முகமாக தனது20ஆவது வருட பூர்த்தி விழாவினை கலை நிகழ்வுகளுடன் கூடிய இராப் போசனத்துடன் கொண்டாடுவது என பல வகையான நீண்ட ஆலோசனைகளின் பின்னர் சமூகமளித்த அங்கத்தவர்களினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இவை பற்றிய விபரங்கள் பின்னர் அறியத் தரப்படும்.

அடுத்ததாக பாடசாலையினால் அனுப்பி வைக்கப்பட்ட விபரங்கள் பற்றிய கலந்துரையாடல்களின் பின்னர் பழைய மாணவர்சங்கமானது விஞ்ஞான, பௌதிகவியல், இரசாயனவியல், உயிரியல், கலையியல், தமிழ் ஆகிய ஆய்வுகூடங்களுக்கான உடனடித் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான உபகரணங்களை பெறுவதற்கு ஆவன செய்தலும் நிதி உதவி செய்வதுமென தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் நாம் கடந்த காலங்களில் செய்த ஒரு சிலசெயல் திட்டங்களின் தகவல்கள் பற்றிய நீண்ட விரிவான கலந்துரையாடல் ஆலோசனைகளின்பின்சமூகமளித்த அங்கத்தவர்களினால் பூரணப் படுத்தப்பட்டன. பிற விடையங்களான இணையத்தள தொழில் நுட்ப விரிவாக்கம் நிரவாகத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டதுஅதனை உரியவர்கள் மூலம் விரைவாக நிவர்த்திசெய்வதற்கு நிர்வாகம் ஆவன செய்வதாக தீர்மானிக்கப்பட்டது.மற்றும் பழைய மாணவர் சங்கத்தினை பதிவு செய்வது பற்றிய ஆலோசனை முன்வைக்கப்பட்டதுஅதனை நிர்வாகம்கவனத்தில்எடுத்தக்கொள்கின்றது.

இக் கலந்துரையாடல் மிகவும் ஆரோக்கியமாக நடைபெற்று கூட்டம் நிறைவு பெற்றது.

நன்றி

Last Modified: July 10, 2013