துயர்பகிர்வோம்
சிற்றம்பலம் துரைரத்தினம் ( பெரியதுரை ) விசுவமடுவில் இறைபதமடைந்தார்.
இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், விசுவமடுவை வதிவிடமாகவும் கொண்ட திரு சிற்றம்பலம் துரைரத்தினம் (பெரியதுரை) விசுவமடுவில் நேற்று 07-07-2013 ஞாயிற்றுக்கிழமை இறைபதமடைந்தார்.
அன்னார் காலம் சென்றவர்களான சிற்றம்பலம் இராசம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வரும், காலம் சென்ற தம்பு தம்பதிகளின் மருமகனும் கண்ணகியின் அன்புக் கணவரும், காலம் சென்ற மதுரா, பிரதீபா, சயந்தன் (மொன்றியல்-கனடா), அனுசியா, காலம் சென்ற பவிந்தன் ஆகியோரின் அன்புத்தந்தையும் ஆவார்.
மேலும் புஸ்பராணி கந்தசாமி ( மில்ரன் -கனடா), வீரேஸ்வரன் -இடைக்காடு, காலம் சென்ற சோதீஸ்வரன் -சுவிஸ், விக்கினேஸ்வரன் -சுவிஸ் ஆகியோரின் அன்புச் சகோதரருமாவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை விசுவமடுவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் விசுவமடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.
அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது
முக்கிய குறிப்பு –அவரது மகன் சயந்தன் தந்தையாரின் இறுதி நிகழ்வுகளூக்காக தற்சமயம் விசுவமடுவில் உள்ளார்.
Continue reading…