துயர்பகிர்வோம்
மண் மகிழ: 16 09 1934
கண் நெகிழ: 18 08 2013
திரியாய், திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கனடா ஸ்காபரோவை வதிவிடமாகவும் கொண்ட சிவசுந்தரம் அருணாசலம் அவர்கள் 18. 08. 2013 ஞாயிற்றுக் கிழமை அன்று அதிகாலை கனடாவில் காலமானார். அன்னார் காலஞ்சென்ற அருணாசலம் கனகம்மா தம்பதிகளின் அருமைப் புதல்வரும், காலஞ் சென்ற பொன்னம்பலம் ஆசைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும், சரஸ்வதி அவர்களின் ஆசைக் கணவரும் காலஞ்சென்றவர்களான நாகம்மா, செல்வநயினார், கதிரவேற்பிள்ளை, சிவசுப்ரமணியம், புவனேஸ்வரி அரசரத்தினம், சிவசண்முகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும் செல்வரத்தினம் (வவுனியா), பஞ்சாட்சரம் (பிரான்ஸ்) ஆகியோரின் அருமை அண்ணாவும் கனடாவில் வசிக்கும் சிவாஜினி (சிவா), தயாளினி (ரதி), திலீபன், மந்தாகினி (ரமா) ஆகியோரின் அருமைத் தந்தையும், ராஜதுரை (ராஜா) , விஜயகுமார் (குமார்), ஜெயந்தினி, நந்தகுமார் ஆகியோரின் அன்பு மாமாவும் வைசால், சாருஜன், ஜெனுசன், கபிஷன், சாம்பவி, சரன், மான்ஷி, ரிஷியா ஆகியோரின் அரிய பேரனும் ஆவார். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது
Continue reading…