Articles for January 2014

வாழ்வோடிணைந்த வானொலிகள்

வாய்க்கு ருசியான அறுசுவை உணவுகள் எப்படி மனிதனை ஆட்கொண்டு நிற்கின்றதோ அதைப்போல ஏன் அதைவிட மேலாக காதுக்கினிய கீதங்கள்,மனதை மகிழ்விக்க மன இறுக்கத்தைப்போக்க களைப்படைந்த மனதுக்கு இதமான ஒத்தடம் கொடுக்க மனதை இளமையூட்ட இப்படி.. இப்படி.. எம்மை சொர்க்கத்துக்கே அழைத்துச் செல்கின்றன. இவையெல்லாம் எமக்குக் கிடைக்கிறதென்றால் அதற்குக்காரணம் வானொலிதான் என்பதை எவருமறிவர்.

Beautiful Fighter

தமிழ்
English

21வது பிறந்த நாள் வாழ்த்துக்கள் – ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பமாகட்டும்!

எமது எளிமைமிக்க இடைக்காடு மகாவித்தியாலய பழைய மாணவர்கள் சங்க அமைப்பானது கடந்த சில வருடங்களில் உள்ளமைப்பு நெருக்கடிகளாலும், செயற்பாட்டு நிலைகளில் நிலவும் பிளவுகளினாலும் அது இயங்கும் ஆற்றல் இழந்த நிலையில் இருந்து வருகின்றமை அனைவரும் அறிந்த ஒன்று. இந்த அமைப்பின் ஓர் உறுப்பினன் என்ற உரிமை கொண்ட பிரதிநிதி என்ற வகையில் எமது இன்றைய நிலைமை பற்றி எனது மனக்கண்ணில் தெறித்து நிற்கும் கருத்துக்களை உங்கள் கவனத்துக்கு முன்வைக்க விரும்புகிறேன்.

பொது கூட்டம்

2014ம் ஆண்டிற்கான புதிய செயற்குழுவின் முதலாவது பொதுக் கூட்டம்

 
இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் கனடாவின் முதலாவது பொதுக் கூட்டம் 26.01.2014 ஞாயிறு அன்று காலை 10:30 மணியளவில் நடைபெற உள்ளது .இக் கூட்டத்தில் நடப்பு வருட செயற்திட்டங்கள் மற்றும் வருட இறுதி பொதுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட செயற்திட்டங்கள் பற்றி கலந்து ஆலோசிக்கப்பட உள்ளது. அனைத்து செயற்குழு உறுப்பினர்கள் அங்கத்தவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரையும் கலந்து கொண்டு உங்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

காலம்: 26-01-2014

நேரம்: 10:30 காலை

இடம்: கணேஸ் அவர்களின் இல்லம்

அமரர். திரு. சிவஞானசுந்தரம்

என் நினைவுப்பதிவிலிருந்து…

 
அந்த நினைவுகள் என் மனதிலும் சுவடுகளாய் கூட இல்லாமல் முற்றிலும் அழிந்து போவதற்கு முன் ஒரு பிரதி எடுக்கும் ஒரு சிறிய முயற்சியே .இன்றைய தலைமுறையினருக்கு அனுபவ பகிர்வு போன்று இது அமைந்துள்ளது.

ந. குமார். லண்டன்

“Life is like a journey where you meet people on the way… some come near and some may not, but never be emotionally involved, you never know when you have to walk alone…”

– Idaikkaduweb Committee

என் நினைவுப்பதிவிலிருந்து-N.Uthayakumar(U.K)

தைத்திருநாள்

pongal year 37500

உழவர்களை மட்டுமின்றி அனைத்து மக்களையும் மகிழ்விக்கும் இத்தகையப் பொங்கல் திருநாளில், வேறுபாடுகளை மறந்து, நம்மிடையே மனிதநேய நல்லிணக்கம் நிமிர்ந்து, ஒற்றுமை, சமாதானம் நிறைந்து விளங்கிட இணைந்து மகிழ்வோம். உழவர் வாழ்க்கையில் நல்லவை நடந்திட, இல்லங்களில் எங்கும் மகிழ்ச்சி பொங்கிட, புதுப்பொங்கல் திருநாளில் புதுமைகள் பூத்து குலங்கிட தமிழர் வாழ்வில் ஏற்றங்கள் மிகுந்திட, இன்பம் காணும் நல்லாண்டாய் பொங்கட்டும் தைத்திருநாள் மலரட்டும் . மன நிம்மதியும், அமைதியும் வாழ்க்கையில் மலர இந்தப் பொங்கல் திருநாளில் அனைவரையும் வாழ்த்துகிறோம்

Contact Us

Winter Get-Together 2013 Photos

Update By: Anushan Easwaramoorthy
Date: January 12, 2014

The photos for the recent winter get-together 2013 are now available for viewing. As per usual, please contact us if there are any photos that you would like altered or removed.

2014ம் ஆண்டு புதிய நிர்வாக சபையின் அறிவித்தல்

எமது சங்கத்தின் வளர்ச்சியில் எம்மோடு தோளோடு தோள் நின்று ஆக்கமும் ஊக்கமும் அளித்துவரும் பழைய மாணவர்கள், அங்கத்தவர்கள், நலன்விரும்பிகள் அனைவருக்கும் எமது புது வருட வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளும் அதேவேளை எமது  “இத்தி மலரி”லும் இணையதளத்திலும் வெளியிடப்பட்ட யாப்பு ஒருமாதிரி (model) வடிவமாகையால் அதனை பொதுச்சபையின் அங்கீகாரத்துக்கு சமர்ப்பிக்கவேண்டுமென 29.12.2013 அன்று கூடிய பொதுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. எனவே எதிர் வரும் பங்குனி மாதம் (திகதி பின்னர் அறிவிக்கப்படும்) பொதுச்சபையைக்கூட்டி அதற்கான அனுமதி பெறுவதெனவும் தீர்மானிக்கப்பட்டது. எனவே வெளியிடப்பட்ட யாப்பினைப் பார்வையிட்டு திருத்தங்களோ மாற்றங்களோ செய்யவேண்டுமெனெத் தாங்கள் கருதினால் அதைத் தெரிவிக்குமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

கனவுலகக்கனடாவும் களையிழந்த கனடாவும்

மனிதனுடைய ஆசைக்கு அளவே இல்லை

வாய்க்கு ருசியான விதம் விதமான உணவு, அழகான  பகட்டான ஆடைகள், ஆடம்பர மாடிமனை வீடுகள், வேண்டிய இடத்துக்கு சென்றுவர சொகுசான வாகனங்கள் இனிமையான பொழுதுபோக்குச் சாதனங்கள். இப்படி உலகத்திலுள்ள அத்தனை வசதிகளும் தனக்குக் கிடைக்கவேண்டுமென இன்றைய மனிதன் விரும்புவது இயல்பானதே. அவற்றைதேடி ஓடும் மனிதனின் ஆசைகளை கனடிய மண் ஓரளவு தீர்த்து வைத்துள்ளது என்றுதான் கூறவேண்டும்.

கனவுலகக்கனடாவும் களையிழந்த கனடாவும்