Articles for March 2014

திரு.கணபதிப்பிள்ளை கிருஸ்ணர்

துயர்பகிர்வோம்2014_krishnar_picture

திரு.கணபதிப்பிள்ளை கிருஸ்ணர் இறைபதமடைந்தார்.
இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும்
கொண்ட கணபதிப்பிள்ளை கிருஸ்ணர் 26-03-2014 புதன்கிழமை அன்னாரது இல்லத்தில் இறைபதமடைந்தார்.
அன்னார் காலம் சென்றவர்களான கணபதிப்பிள்ளை -நாகாத்தை தம்பதியினரின் மகனும், சின்னாச்சி, வள்ளிப்பிள்ளை, கந்தையா ஆகியோரின் அன்புச் சகோதரரும், பொன்னம்மாவின் அன்புக் கணவருமாவார். அன்னார் சிவலிங்கம் (கனடா), சிவமலர் (கனடா) ஆகியோரின் அன்புத்தந்தையாரும், முத்துலட்சுமி, சிறீகுகன் ஆகியோரின் அன்பு மாமனாரும், யேனுகா, சனுஜன், கீரன், மிதுசன் ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27-03-2014 வியாழக்கிழமை அன்னாரது இல்லத்தில் நடை பெற்று பூதவுடல் சாமித்திடல் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.
அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.
தொடர்புகளுக்கு;
க. சிவலிங்கம்; 416-430-0378
சிவமலர்; 416-297- 0733
தகவல்; சிவலிங்கம் (மகன்)
189 PHYLLIS AVE, SCARBOROUH ON ,M1M1Y9.

வாழ்வோம் .. வாழவிடுவோம்


idai - Nelam

இது அவசர உலகம். உடனே பலன் கிடைக்கவேண்டும். அதன் பின் விளைவுகளை எவருமே சிந்திப்பதில்லை.

எப்போதெல்லாம்  மனிதன் இயற்கையை அனுசரித்து வாழ்ந்தானோ அப்போதெல்லாம்  அவன் வாழ்வு அமைதியாக இருந்தது. இயற்கையை எப்போது மனிதன் சுரண்டிப்பார்க்க வெளிக்கிட்டானோ அப்போது இயற்கையும் சீற்றம் கொள்ளத்தொடங்கிவிட்டது. வழமையான காலநிலை நிகழ்வுகள் தடம்புரண்டுவிட்டன. எப்போது மழை வேண்டுமோ அப்போது வெயில் வாட்டிஎடுக்கின்றது. எப்போது வெயில் வேண்டுமோ அப்போது  மழையும் சூறாவளியும் அடாவடித்தனம் செய்கின்றன.

Click here to continue reading. 

 

 

 


 

சிக்கனம்

சிந்திப்போம்…. சிரிப்போம்…

சிக்கனம்Thi-pon

பணம்…..இன்றைய உலகில் எம்மை வாழவைக்கும் உயிரில்லாத, ஒரு உயிருள்ள ஜீவன்.

கவலையில்லாமல், மகிழ்ச்சியாக, நிம்மதியாக வாழ்வதற்கு, அயலவர்கள், மனைவிமக்கள், உறவினர், ஊரவர் எம்மை மதிப்பதற்கு, சமூகத்தில் ஓர் அந்தஸ்து கிடைப்பதற்கு,  எல்லாமே எம்மிடமுள்ள பணத்தின் அளவைக்கொண்டுதான் தீர்மானிக்கப்படுகின்றது

இப்படியான பணத்தை பலரும் பலவாறு கூறியுள்ளார்கள்..

காசேதான் கடவுளடா., கடவுளுக்கும் இது தெரியுமப்பா.

கைக்கு கைமாறும் பணமே உன்னைக்கைப்பத்த நினைக்குது மனமே.

இல்லானை இல்லாளும் வேண்டாள்.

கழுத்துவரைக்கும் பணம் இருந்தால் நீ அதற்கு எசமான்., கழுத்திற்கு மேலே பணம் இருந்தால் அது உனக்கு எசமான்.

அளவுக்கு மேலே பணம் வைத்திருந்தால் அவனும் திருடனும் ஒன்றாகும்.

உன்னிடம் பணம் இல்லாவிடால் உன்னை மற்றவர்களுக்கு தெரியாது, உன்னிடம் பணம்  இருந்தால் உனக்கு மற்றவர்களைத் தெரியாது..

இப்படி ஒரு விசித்திரமான பொருள்தான், பணம்.

உயிரில்லாத பணம் உயிருள்ள மனிதனைப் பாடாய்ப்படுத்துகின்றது.

பணம் என்ன பணம், இன்றுவரும் நாளை போகும்.,பணத்தை என்றும் சம்பாதித்துக் கொள்ளலாம். ஆனால் குணம் தான் முக்கியமானது என வாய் கிழியக்கத்தினாலும் நடைமுறையில் பணத்துக்கு இணையாக ஏதுமில்லை. பணத்தை தேடி யார்தான் ஓடுவதில்லை?

பணம் என்றால் பிணமும் வாய்திறக்கும் என்று சும்மாவா சொன்னார்கள்?

இப்படியான பணத்தை எங்கே தேடுவது? எப்படி சம்பாதிப்பது?

ஒகோவென்று சம்பாதிப்போர் கடனில் தத்தளிக்கும்போது குறைவான வருமானம் பெறும் சிலர் ஓகோவென்று இருக்கிறார்களே, அது எப்படி?

காரணம் சிக்கனம் தான்.

வரவு எட்டணா, செலவு பத்தணா என்றால் எப்படி பணத்தினை மீதப்படுத்தமுடியும்?

குருவியின் தலையில் பனங்காயை வைத்தால் .. அதோ கதிதான்.

விரலுக்கேற்ற வீக்கம் வேண்டும்.

எம் தராதரத்தை எண்ணுவதில்லை, வரட்டுக் கெளரவம் கொடிகட்டிப்பறக்கிறது.

என் நண்பன் ஒரு கார் வைத்திருந்தால் நான் இரண்டு கார் வைத்திருக்கவேண்டும்.

என் தம்பி வீடு வாங்கிவிட்டால் நான் அதைவிடப் பெரிதான வீடு வாங்கவேண்டும்.

பகட்டுக்காக பிறந்தநாள் கொண்டாட்டம், பூப்புனிதநீராட்டு விழா, தகுதிக்கு மிஞ்சிய ஆடம்பரத் திருமணம், வீட்டில் ஏற்கனவே எல்லாம் இருந்தும், கழிவு விலையில் கிடைக்கிறது என்பதற்காக கடன்பட்டு ஆடம்பரப்பொருட்களை வாங்கி வீட்டில் குப்பைகளை நிரப்பிவிடுகின்றோம்.

எமது நாட்டில் கடனற்ற நிம்மதியான வாழ்வு வாழ்ந்த நாம் கனடா வந்து கடன்காரர் ஆகிவிட்டோம். காரணம் பணத்தாசை, வரவுக்குமிஞ்சிய செலவு.

கடனை அடைக்கவேண்டுமென்பதற்காக இரவு பகல் பாராது ஒரு வேலைக்கு இரு வேலை.  மனைவிகூட வீட்டில் இருக்கமுடியவில்லை. பிள்ளைகளுடன்  பொழுதைக்கழிக்க முடியவில்லை. கடன்பட்டு வாங்கிய வீட்டில் படுத்துறங்க நேரமில்லை.

நித்திரையைத் தொலைத்துவிட்டோம். நிம்மதியை இழந்துவிட்டோம்.

சரி, குறைவாகச் செலவழிப்போம், சிக்கனமாக இருப்போம் என்பதற்காக மலிவானதை வாங்கி மறுநாளே குப்பைக்கூடையை நிரப்பிவிடுகின்றோம் .பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான கதையாக..

சிக்கனம் முக்கியம், புத்திசாலித்தனம் அதைவிட முக்கியம்.

தன் நிலை அறிந்த மனிதன் ஊரவரைப்பற்றிக் கலைப்படுவதில்லை. அவன் நிம்மதியாக உறங்குகிறான், அவன் கதவை கடன்காரன் தட்டுவதில்லை.

தன்நிலை அறியாதவன், ஊதாரித்தனமானவன், உறக்கத்தை தொலைத்து நிற்கிறான். கடன்காரன் அவன் உடன்பிறப்பாகி விடுகின்றான்.

இப்போதெல்லாம் எவரும் கடிதம் எழுதுவதில்லை., அதற்கான தேவை இல்லாது போய்விட்டது.

அப்போதெல்லாம் கைபேசிகள் இல்லை. எல்லாவற்றுக்கும் கடிதம்தான்.

தபால் உறை மலிவானது, தபால் அட்டை அதைவிட மலிவானது.

அவர் ஒரு சிக்கனவாதி, கடிதம் போடுவதற்கு தபாலகம் போனார்., விசாரித்தார். தபாலுறை 15 சதம், தபாலட்டை 10 சதம். ஒரு தபாலட்டையை வாங்கி கடிதம் எழுதினார். இடம் போதவில்லை .இன்னொரு அட்டையைவாங்கி எழுதி முடித்தார்.

ஐந்து சதம் மிச்சம்பிடிக்கப்போய் ஐந்து சதம் மேலதிக நட்டம் ஏற்பட்டுவிட்ட்து.

வேடிக்கை என்ன தெரியுமா?

உரியவருக்கு ஒரு தபாலட்டை மட்டுமே கிடைத்தது, மற்றது கிடைக்கவில்லை.

கடிதம் கிடைத்தவருக்கு ஒன்றுமே புரியவில்லை.

பணத்தையும் இழந்து…பலனையும் இழந்து….

சிக்கனம் தேவை,  புத்திசாலித்தனமான சிக்கனம் தேவை.

அம்பலம்  –  கனடா  10.2.2014

நன்றி: ஈழநாடு