Articles for April 2014
Mr S.Sayampar Vaithilingam
Mr S.Vaithilingam has passed away in Wales, United Kingdom on 19/04/2014.
Viewing: Thursday 24th. and Friday 25th. 8.30 am- 5.00 pm; St. James Funeral Home 31 St. James Gardens, Fynone,Swansea, SA1 6DT.Cremation: Saturday,26-04-2014 at 9.30am Morriston Crematorium, Heol |
Pentre Felen, Swansea, SA6 6BY.
Near Junction 46 on M4;
Take A48 Clasemont Road;
After a few hundred yards turn right onto Heol Pentre Felen;
Crematorium will be on the left.
Informer:Daughter -Uma 00 44 179 244 9099 – UK land line
00 44 78 71 59 90 14 UK Mobile
வாழ்வாங்கு வாழ்ந்த ஒரு மனிதர்
வாழ்வாங்கு வாழ்ந்த ஒரு மனிதர்நூறு வயதுவரை வாழ்வது பெரிய விடயமல்ல. வாழும் காலத்தில் எப்படி வாழ்ந்தோம், |
என்ன செய்தோம் என்பதே பெரிய விடயம்.
அந்த வகையில் எம்மூரில் பிறந்து பல கஸ்டத்தின் மத்தியிலும் கல்விகற்று விவசாய இயந்திர பொறியியலாளராகி விவசாய பூமியாகிய எம் நாட்டுக்கும் எம்மக்களுக்கும் அளப்பரிய சேவையாற்றிய திரு பொன்னையா வேலாயுதபிள்ளை அவர்கள் 17.4.2014 அன்று கனடாவில் காலமானார்.
அவர் தனது ஆரம்பக்கல்வியை இடைக்காடு மகாவித்தியாலயத்திலும் புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரியிலும் பின்னர் தனது உயர் கல்வியை கட்டுபெத்தை ஜேமன் இயந்திர தொழில் நுட்ப நிறுவனத்திலும் கல்விகற்று இயந்திர பொறியியலாளராக வெளியேறினார்.
இலங்கை விவசாயத்திணைக்களத்தில் பண்ணை இயந்திரப் பொறியியலாளராக தனது பணியை ஆரம்பித்த திரு வேலாயுதபிள்ளை அவர்கள் தனது திறமையாலும் புத்திசாலித்தனத்தாலும் விடாமுயற்சியாலும் மிக விரைவிலேயே உயர் பதவியை அடைந்ததுடன் பலராலும் விரும்பப்படும் பலராலும் அறியப்பட்ட ஒருமனிதராகி விட்டார். எவருடனும் நட்புடன் பழகும் அவர் விளையாட்டு, நாட்டியம், வித்தைவிளையாட்டு (Magic show) என பன்முக ஆற்றல்கொண்ட ஒருவராக விளங்கினார். விவசாயத்திணைகளத்தில் எதாவது விழாக்கள் நடைபெற்றால் அவரது நிகழ்ச்சியும் தவறாது நடைபெறும்.
எமது நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகாரணமாக நாட்டைவிட்டு வெளியேறி சில வருடங்கள் ஆபிரிக்காவின் சாம்பியாவில்(Zambia) பணிபுரிந்த அவர் பின்னர் கனடாவில் குடியேறி தனது மனைவியுடனும் இரு மகன்களுடனும் வாழ்ந்துவந்தார்.
கனடாவிலும் இவரது திறமையைத்தேடி பல பதவிகள் வந்தன. அதனால் ஒருகுறையுமில்லாது செழிப்பான வாழ்வு வாழ்ந்துவந்தார்.
தான் எப்படி வசதியாக வாழ்ந்தாலும் தனது இளமைக்காலத்தையும் தான் பட்ட கஸ்டங்களையும் தான் பிறந்த ஊரையும் என்றுமே அவர் மறக்கவில்லை. 2009ல் வன்னியில் ஏற்பட்ட கொடிய யுத்தத்தால் அனைத்தையும் இழந்து நிற்கதியான மக்களுக்கு, மீண்டும் அவர்கள் தம் தொழிலை ஆரம்பிபதற்கும் தான் கல்வி கற்ற பாடசாலைக்கும் அடுத்தவருக்கும் தெரியாமல் அவர் ஆற்றிய உதவிகள் அளப்பரியன..
அண்மைக்காலமாக அவர் நோய்வாய்ப்பட்டிருந்தாலும் இவ்வளவு விரைவில் எம்மைவிட்டுச்செல்வாரென நாம் நினைத்திருக்கவில்லை.
மனிதன் நினைப்பதுண்டு, வாழ்வு நிலைக்குமென்று.,
கடவுள் நினைப்பதுண்டு, பாவம் மனிதனென்று
ஆம், விதி மிக வலிமையானது.
அவர் ஆன்மா சாந்தி பெறட்டும்.
பொன் கந்தவேல்
இடைக்காடு, கனடா
18.4.2014
திரு .பொன்னையா வேலாயுதபிள்ளை
துயர்பகிர்வோம்http://t.co/7R3XgtdO44
திரு பொன்னையா வேலாயுதபிள்ளை (Technical Officer FMTC- அநுராதபுரம்) அன்னை மடியில் : 25 நவம்பர் 1939 — ஆண்டவன் அடியில் : 17 ஏப்ரல் 2014 |
யாழ். இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா வேலாயுதபிள்ளை அவர்கள் 17-04-2014 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், முருகேசு பொன்னையா, செல்லர் பொன்னு தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவகுரு சிவக்கொழுந்து தம்பதிகளின் பெறாமகனும், வள்ளிநாயகி அவர்களின் அன்புக் கணவரும், சிவராம், சிவசிறி ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான தியாகராசா, கனகராசா, மற்றும் கண்மணி, அன்னம், சிவகாமிப்பிள்ளை, முருகையா, மீனாட்சி, நடராஜா, தேவசிகாமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும், அனுஷயா, சியாமினி ஆகியோரின் அன்பு மாமனாரும், தெய்வநாயகி, முருகதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும், மேதா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்மனைவி, பிள்ளைகள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 20/04/2014, 04:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி: Glendale Funeral Home & Cemetery, 1810 Albion Road, Etobicoke, ON M9W 5T1, Canada(Tel: +14166791803)
பார்வைக்கு
திகதி: திங்கட்கிழமை 21/04/2014, 04:00 பி.ப — 08:00 பி.ப
முகவரி: Glendale Funeral Home & Cemetery, 1810 Albion Road, Etobicoke, ON M9W 5T1, Canada(Tel: +14166791803)
கிரியை
திகதி: செவ்வாய்க்கிழமை 22/04/2014, 08:30 மு.ப — 10:30 மு.ப
முகவரி: Glendale Funeral Home & Cemetery, 1810 Albion Road, Etobicoke, ON M9W 5T1, Canada(Tel: +14166791803)
தகனம்
திகதி: செவ்வாய்க்கிழமை 22/04/2014 — 11:00 மு.ப
முகவரி: Glendale Funeral Home & Cemetery, 1810 Albion Road, Etobicoke, ON M9W 5T1, Canada(Tel: +14166791803)
அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.
தொடர்புகளுக்கு
சிவராம் — கனடா
தொலைபேசி: +16473903392
+14162413392