Articles for July 2014

கோடைகால ஒன்றுகூடல் 2014 – கனடா

thumbs_img_7489கோடைகால ஒன்றுகூடல் 2014 – கனடா

வருடா வருடம் நடைபெறுகின்ற எமது கோடைகால ஒன்றுகூடல் இம்முறையும் மிகுந்த எதிர்பார்ப்புடன் திட்டமிட்டபடி நடைபெற இருப்பதால் எல்லோர் வசதி கருதியும் மீண்டும் ஒருமுறை அறியத்தருகின்றோம்.
மேலும் பூர்வாங்க வேலைகள் அனைத்தும் அனைவரினதும் ஒத்துழைப்புடன் திட்டமிடப் பட்டுள்ளது. இந்த ஒன்றுகூடலானது எமது அனைத்து வேலைகளையும் சற்று நிறுத்தி ஊரவர்கள் எல்லோரும் ஒன்றுகூடி சுக நலன்கள் விசாரித்து, எமது பாரம்பரிய விளையாட்டுக்களை கண்டுகளித்து நாமும் பங்கு பற்றி எமது சிறார்களின் சிறந்த எதிர் காலத்தினைக் கட்டி எழுப்புவதே இதன் நோக்கம்.
அன்றையதினம் வெதுப்பிய உணவுவகைகள்(BBQ), சிற்றுண்டிகள், தேனீர், குளிர்பானம் மற்றும் காலை உணவும் பரிமாறப்படும். மற்றும் சிறுவர்களுக்கான பழம் பொறுக்கல் தொடக்கம், காற்பந்து விளையாட்டு, ஓட்டப்போட்டிகள், கயிறு இழுத்தல் என்பனவற்றோடு Trophy வழங்கலும் நடைபெறும்.
இவ் வருடத்திற்கான Trophy, காலம் சென்றவர்களான திரு. திருமதி. நமசிவாயம் அவர்களின் நினைவாக, இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க கனடா கிளையினால் வழங்கப்படவுள்ளது.
காற்பந்து மற்றும் சிறு குழந்தைகள், புதிதாக பதிவு செய்பவர்கள் தமது பதிவுகளை நிகழ்ச்சிகள் ஆரம்பமாவதற்குமுன் விளையாட்டிற்கு பொறுப்பானவர்களிடம் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
இம்முறை PAPER CUPS, FORM PLATES ஒருமுறை பாவித்தபின் எறிகின்ற பொருட்கள் போன்ற கழிவுகளின் பாவனைக் குறைப்பை கடைப்பிடிக்க வேண்டிய நிலையில் உள்ளோம். இதற்காக சில விசேடமான நடைமுறைகளை செய்யவேண்டியுள்ளது இதனை மைதானத்தில் தெளிவாக அறிவுறுத்தப்படும் அதனை பின்பற்றி நடக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். எமது மேலதிகமான கழிவுகளை நிகழ்வின்பின் விட்டுச் செல்வோமாயின் மேலதிக கட்டணம் செலுத்த வேண்டி வரும்.
நிகழ்ச்சிகள் காலை 9:00 மணிக்கு ஆரம்பமாகி மாலை 7:00 மணிக்கு நிறைவடையும். குறித்த நேரத்தில் திறம்பட நடாத்தி முடிக்க இருப்பதனால் பெற்றோர்களிடமிருந்தும் வயது வந்த மாணவர்களிடமிருந்தும் அலுவலர்களை இந்த செயற்குழு அன்புடன் எதிர்பார்க்கின்றது.
நிகழ்ச்சி நிரல்:
09:00 to 10:00 A.M Breakfast (NEW)
10:00 to 11:00 A.M Soccer Group 1
11:00 to 12:00 Noon Soccer Group 2
12:00 to 1:00 P.M Lunch (BBQ)
1:00 to 3:00 P.M Games for Trophy (1 race for each age group)
3:00 to 6:00 P.M All other fun games
6:00 to 7:00 P.M Trophy Presentation
கட்டணங்கள் : குடும்பம் $35
முதியோர், தனிநபர் $15
Place: NEILSON PARK, SCARBOROUGH, (NEILSON & FINCH)
Date: Sunday August 3, 2014
Time: 9:00 A.M to 7:00 P.M
செயலாளர்
IMV-OSA Canada

திரு கந்தையா வேலுப்பிள்ளை (சின்னண்ணை)

sinaதுயர்பகிர்வோம்
இடைக்காடு இத்தியடியை (தெருவடி) பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட திரு கந்தையா வேலுப்பிள்ளை (சின்னண்ணை) 30. 06. 2014 அன்று இடைக்காட்டில் காலமானார். அன்னார் காலம்சென்ற கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும் திரு பொன்னம்பலம் மற்றும் காலம்சென்ரவர்களான நாகமணி, நடராசா, ஆறுமுகம், பரமேஸ்வரி ஆகியோரின் சகோதரருமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 01. 07. 2014 அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று சாமித்திடல் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்கப்படுகின்றனர்.
அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.

தகவல்: பொ. கந்தவேல் – கனடா
647 702 7346