Articles for August 2014

திரு சிற்றம்பலம் மாணிக்கவாசகர்

mani

துயர்பகிர்வோம்

திரு சிற்றம்பலம் மாணிக்கவாசகர்
(அதிபர்)

தோற்றம் : 15 யூலை 1952 — மறைவு : 17 ஓகஸ்ட் 2014

யாழ். அச்சுவேலி வளலாயைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலியை வதிவிடமாகவும் கொண்ட சிற்றம்பலம் மாணிக்கவாசகர் அவர்கள் 17-08-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிற்றம்பலம், வியாழாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாகலிங்கம் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவயோகவள்ளியம்மாள் அவர்களின் அன்புக் கணவரும்,

சுரேஸ்(லண்டன்), சுஜி(லண்டன்), சுஜீவன்(லண்டன்), சுரேகா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சத்தியபாமா, நடேசமூர்த்தி, நாகேஸ்வரி, சந்திரேஸ்வரி, மனோகரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரேவதி, மேனன், சுலோசனா, சசீந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சரன், சாலினி, நந், கிரன், சஜிந், துசானி, அசானி, டிலக்சினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-08-2014 புதன்கிழமை அன்று காலை 9:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வளலாய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனைவி — இலங்கை
தொலைபேசி: +94213219367
சுரேஸ் — பிரித்தானியா
தொலைபேசி: +442086060978
சுஜி — பிரித்தானியா
தொலைபேசி: +442074763994
சுஜீவன் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447881022723
சுரேகா — கனடா
செல்லிடப்பேசி: +19054725666

எமது நன்றி

இடைக்காடு பழையமாணவர் சங்கம் கனடா – கோடைகால ஒன்றுகூடல் -2014

New Logo

வருடாவருடம் நடைபெறும் இடைக்காடு பழையமாணவர் சங்கம் கனடாவின் கோடைகால ஒன்றுகூடல் 03.08.2014 ஞாயிறன்று ஸ்காபுறோ நெல்சன் பூங்காவில் சிறப்புற நடைபெற்றது. நிகழ்வில் அறுசுவை உணவுகள், சிறியோர் பெரியோருக்கான விளையாட்டுக்கள் என்பனவும் இடம் பெற்றன.
ஒன்றுகூடலில் எமதூர் கல்விமானும் பழையமாணவருமான பேராசியர் திரு கணபதிப்பிள்ளை சின்னத்தம்பி தனது பாரியாருடன் கலந்துகொண்டு விளையாட்டில் பங்குபற்றியோருக்கான பரிசில்களை வழங்கிவைத்தார்.
நிகழ்வு சிறப்புற நடைபெற உதவிய அனைவர்க்கும் சங்கத்தின் சார்பில் எமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

summer get together Account Detail

செயற்குழு
இடைக்காடு பழையமாணவர்சங்கம் – கனடா
10.8.2014

சோதி வைரவர்

எம் இனிய உறவுகளுக்கு,

இடைக்காடு சோதி வைரவர் ஆலயத்துக்கு நீண்ட காலமாக போதிய இடவசதியின்மை பெரும் குறையாக இருந்து வந்தது. வட புறமாக வீதியும் தென்புறமாக குடியிருப்பும் இருந்தமையினால் பல அசௌகரியங்களை அனுபவித்து வந்த வைரவ பக்தர்களுக்கு வைரவரின் கருணையினால், தென்புறமாக இருந்த குடியிருப்பு கனடியன் $ 5,000 .00 க்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வடபுறமாக இருந்த வீதியினையும் மேலும் வட புறத்துக்கு மாற்றுவதற்கு , உரிய திணைக்களத்திடம் பூர்வாங்க வேலைத் திட்டங்களை ஆரம்பித்துள்ளோம். இதன் ஓர் அங்கமாக புதிய வீதியினை நாமே அமைத்துக் கொடுத்தல் வேண்டும்.(கிறவல் வீதி) பின்னர் வீதிப் பெருந்திணைக்களத்தால் முழுமையான வீதி அமைக்கப்படும்.(தார் வீதி) இதற்குரிய நிதிப் பங்களிப்பினை புலம் பெயர்ந்து வாழும் அனைவரிடம் இருந்தும் எதிர்பார்கின்றோம். இதுவரையில் நிதிப் பங்களிப்பு செய்தோரின் விபரங்கள் வருமாறு :
Toronto – canada
திருமதி . தம்பிராசா கதிராசி ————————————– Rs.1,50000.00
திரு .வை.விமலகுலேந்திரன் குடும்பம்.———————                $  600.00
மிதுலன் பெரியதம்பி     ———————————————                 $   500.00
ராதாகிருஷ்ணன் – கீதா———————————————–                $   250.00
முருகானந்தன் தம்பிராசா ——————————————-              $   200.00
சிவராணி குடும்பம்——————————————————-              $   150.00
இ .செல்வராஜ்—————————————————————              $   100.00
நிவஷா ஜெயகுமார்  ——————————————————              $    200.00
சிவகுமார் – சிகா ————————————————————-           $    50.00
ராஜ்குமார் – தேவா ———————————————————-          $    50.00
சுப்ரமணியம்- சிவகாமிப்பிள்ளை ————————————       $   50.00
Montreal – canada
பரமசிவம்- செந்தில்ரூபி——————————————————- $ 500.00
ஜெயகாந்தன்- சுபத்திரா——————————————————— $ 500.00
மோகன் -வனஜா——————————————————————- $ 500.00
சந்திரன் -சிறி————————————————————————- $ 500.00
கணேஷ்——————————————————————————– $ 300.00
தயாசோதி—————————————————————————– $ 100.00
நாதன்————————————————————————————$ 100.00
சுப்பையா -கந்தசாமி ————————————————————–$   50.00
வேதநாயகி —————————————————————————-$   50.00
பங்களிப்பு செய்த அனைவருக்கும் நன்றி.
தகவல்,தொடர்புகளுக்கு:
ஜெயகாந்தன் – மொன்றியல்
Phone No . (514) 342-8725.

 

 

ஸ்ரீ முருகன் கோவிலில் “மாம்பழத் திருவிழா”

Toronto வாழ் இடைக்காடு – வளலாய் உறவுகளுக்கு,images
பல வருடங்களாக மொன்றியலில் இருக்கும் ஸ்ரீ முருகன் கோவிலில் அச்சுவேலி திருவிழாவாக “மாம்பழத் திருவிழா” மொன்றியல் இடைக்காடு வளலாய் மக்களின் பங்களிப்போடு நடைபெற்று வந்தது. ஆனால் இவ்வாண்டு இடைக்காடு – வளலாய் மக்களின் மாம்பழத் திருவிழாவாக தொடர்ந்து நடாத்துவதற்கு நாங்கள் முடிவு செய்துள்ளோம் . இத் திருவிழாவினை தொடர்ந்து சிறப்புற செய்வதற்காக உங்கள் அனைவரினது பங்களிப்பினை எதிர் பார்க்கின்றோம் . இதன் இலகு பொறிமுறையாக குறைந்த பட்சம் குடும்பம் ஒன்றிற்கு $20 லிருந்து பங்களிப்பு செய்வதன்மூலம் இத் திருவிழாவினை தொடர்ந்து சிறப்புற நடைபெற ஒத்துழைப்பு வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.இவ் ஆண்டிற்கான இடைக்காடு வளலாய் மக்களின் மாம்பழத் திருவிழா 12-08-2014 நிகழ இருப்பதனால் உங்கள் அனைவரின் பங்களிப்பினை வேண்டிநிற்கும் ,
தம்பு மகேசமூர்த்தி (சத்தி)
(514) 344-8739
மொன்றியல்
4-08-2014.
Toronto தொடர்புகளுக்கு,
பொ. கந்தவேல்
(647)702-7346

திரு. வேலுப்பிள்ளை கனகக்கோன் காலமானார்.

2014_kone_imgதுயர்பகிர்வோம்

திரு வே. கனகக்கோன் ஆவணி 3ம் திகதி கிளிநொச்சி வைத்திய சாலையில் காலமானார்.

பிறப்பு : 15 ஆனி 1965
இறப்பு : 03 ஆவணி 2014

அன்னார்,
சிவமலரின் அன்பு கணவரும், கோகுலின் அன்பு தந்தையும், திருமதி மங்களேஸ்வரி, காலம் சென்ற திரு. கனகசபை வேலுப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும், இளங்கோ, செங்கோ அவர்களின் சகோதரரும், திரு. கதிரித்தம்பி, காலம் சென்ற திருமதி கதிரித்தம்பி தம்பதியினரின் மருமகனுமாவார். இவர் சிறீஸ்கந்தராஜா, இராசசேகர் அவர்களின் சகலனுமாவார்.

மேலும் அன்னார், தினேஸ், மிரோஸ், நிதோஸ், சேதன், பிரசான் ஆகியோரின் சித்தப்பாவும், சிரோஜினி, நிஷான் அவர்களின் பாட்டனும் ஆவார்.

அன்னாரின் ஈமை கிரியைகள் இடைக்காடு தேத்தாவடியில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

அன்னாரின் குடும்பத்தின் துயரில் இடைக்காடு பழைய மாணவர் சங்கமும் இணைந்து கொள்கின்றது.

தொடர்புகள்:
இளங்கோ (கனடா) : 1 905 450 9915
செங்கோ (அமெரிக்கா) : 1 919 336 5299

By வே. செங்கோ